தோழிகளே வயிற்று போக்கு வழி சொல்லுங்கள்

என் 6 மாத கொழுந்தைக்கு 1 வாரமாக சளி இருமல்,வயிற்று போக்கு என்ன சாப்பிட
கொடுத்தாலும் வெளியே வந்து விடுகிறது.சாப்பிடவும் ரொம்ப அழுகை.மூக்கில்
இருந்து சளி வந்து கொண்டே இருக்கிறது அவள் ஏற்கனவே எடை கொறைவு
இப்பொழுது இன்னும் மோசம் பாவமாக இருக்கிறது.நானும் இங்கே தனியாக என் 2 கொழந்தைகலை வைத்துகொண்டு அல்லல் படுகிறேன்.மன நிம்மதியே இல்லை உதவுங்கள்

முதல்ல டாக்டரை பாருங்க. சளிக்கு மருந்து கொடுத்தாலே கொஞ்சம் வயிற்றால் போகும்னு சொல்வாங்க. கொஉழந்தை சீன்ன குழந்தை, அதனால் கை வைத்தியம் மட்டும் நம்பாம கொஞ்சம் டாக்டர் பார்ப்பது நல்லது. நல்லா ஆயிடும்... கவலை படாதிங்க. குழந்தைங்க புதிதா உணவுகள் எடுக்க ஆரம்பிக்கும்போது இப்படிலாம் வருவது சகஜம் தான். நல்லா கொதிக்க வைத்த நீர் உப்பு சர்க்கரை சேர்த்து அப்பப்ப குடிக்க கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இருக்கீங்க? முதல் பொண்ணு ஸ்கூலுக்கு போறாளா?

அப்படியே வைத்துக் கொண்டு இருக்காமல் மருத்துவரை உடனே பாருங்கள். மருத்துவரிடம் கேட்டு பீடியாலைட் கொடுங்கள். (அது ஒரு வயது குழந்தைகளுக்கு தான்...சில நேரங்களில் அதிகபடியாக இருந்தால் தண்ணீர் கலந்து குடுக்கசொல்வார்கள்). வனி சொல்வது போல் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சிறிது சிறுதாக கொடுக்கலாம்.

சளி இரும்பல் வருவது சகஜம் தான்....இருந்தாலும் அதனுடன் வயிற்று போக்கு இருப்பதால் கண்டிப்பாக மருத்துவரை தான் பார்க்கணும். ஒரு வேலை அது எதாவது இன்பெக்ஷனாக கூட இருக்கலாம்.

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க....இப்போ தானே ஆரம்பம்....போக போக இன்னும் இருக்கு இல்ல.....நாம் தனியாக இருப்பதால் நமக்கு நாமே தான் ஆறுதல்....நீங்களே இப்படி மனம் உடைந்து போனீர்களே ஆனால் குழந்தைகளை யார் கவனிப்பார்கள். ஆண்டவர் நமக்கு எப்பொழுதுமே எல்லா வகையான சூழ்நிலையும் சந்திக்கும் திறமையை கொடுத்துள்ளார். இல்லையென்றால் தனியாக குழந்தையை சமாளிக்க முடியும் என்று நீங்கள் இங்கே வந்திருக்கேவே மாட்டீர்கள். எப்பொழுதுமே குழந்தைக்கு முடியவில்லை என்றால் நமக்கு மனது வேதனைப்படும். இப்படி தனியாக கடந்து தவிக்கிரோமே....பார்த்துக்க யாருமே இல்லையே என்றெல்லாம் யோசனை வரும்.....கோவம் அதிகமாக வரும். இதெல்லாம் ரொம்பவும் சகஜம். அறுசுவை தோழிகள் இருக்கிறார்கள். உங்களுக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தால் எங்களிடம் வாருங்கள்....இப்பொழுது மனதை அலட்டிக் கொள்ளாமல் குழந்தைகளை பாருங்கள்......இதுவும் கடந்து போகும் !

(நேரில் என்றால் நன்றாக பேசிடுவேன்....எழுத தெரியவில்லை......இருந்தாலும் முயற்சி செய்கிறேன்)
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு ராதிகா,

இப்ப குழந்தைக்கு எப்படி இருக்கு? லாவண்யா சொன்ன மாதிரி, உடனே டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணுங்க. எதுவும் இன்ஃபெக்‌ஷன் இருந்தால், அதுக்குத் தகுந்த மாதிரி, அவங்க மருந்து கொடுப்பாங்க.

உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிப் பாருங்க. அங்கே இருக்கும் நல்ல குழந்தைகள் நல மருத்துவர் பற்றி ரெஃபர் செய்வாங்க.

சீக்கிரமே குழந்தைக்கு சரியாகிடும். தைரியமாக இருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

கவலை படாதீங்க எல்லாம் கொஞ்சம் வளரும் வரை தான்..ஓரிரு வயசாகிட்டால் நமக்கும் திரியம் வந்துடும்..மாறிடும் பாருங்க...மஞ்சள் தேன் குழைத்து நாக்கில் லேசாக தடவி விடுங்க...அரிசி கஞ்சி மட்டும் கொடுங்க

வனி அக்கா முதலாவதாக வந்து பதிவு போட்டதுக்கு நன்றி.
நான் மருத்துவரிடம் பார்த்துவிட்டேன் மருந்து கொடுத்தும் நிக்கவில்லை அதனால்தான்
உங்களிடம் ஆலோசனை கேட்டேன்.
சீதாலக்ஷ்மி அம்மா உங்களுக்கு பேத்தி பிறந்து இருப்பது கேள்விபட்டேன்.
வாழ்த்துக்கள்.ரியா நலமா.என் பெரிய மகள் பெயர் ரேயா.இந்த பிசியான சமயத்திலும்
எனக்கு ஆறுதலாக பதிவு போட்டதுக்கு நன்றி.
லாவண்யா உங்கள் பதிவு ஆறுதலாக உள்ளது.நீங்கள் சொல்லுவது உண்மைதான்
இந்த சூழ்னிலையில் எனக்கு கோவம் அதிகமாக வருகிரது ஒரு விரக்தி நிலை வருகிரது.
என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
தாளிகா நான் அரிசி கஞ்சிதான் கொடுக்கிரே, ஆனால் அவள் தண்ணிர் மட்டும் குடிப்பதில்லை
அவளுக்கு அது பிடிக்கவே இல்லை என்ன பாடு படுத்துகிறாள் தண்ணீர் குடிப்பதற்க்கு.
உங்களுக்கும் என் நன்றி.லாவன்யா என் பெரிய பொண்ணுக்கு இப்பொழுதுதன் 21/4 வயது ஆகிறது இங்கு 4 வயதில்தான் பள்ளி.

Anbulla kuttireyama ,
vannakkam,
1. If you feed the child with mothers milk first check your food
2. If the child crying when you touch any part of the body
uram irukkallam
3. Any unwanted food or any small hair may be swalloed by the child may cause for the motion
4. May be undigest condition also may be the reason for this
as I know.

1. If you have OMAM AJWAIN fry that as charchool
and powdered it and mix it with honey just a pinch and make
her to swallow that. You can repeat this thrice a day.
It will control any kind of disorders which are related to the stomach (food habits.)
2. If you feel that there may the problem because of hair you can have banana stem chooped it too tiney parts
and boil it and make the child to swallow with any other food little by little . It will bring any thing (unwanted things which are in the stomach easy way one teespoon is enough i think) by the motion. BUT PLEASE CONSULT THIS METHOD WITH ANY ELDERS AND DO THIS.
I PRAY THE GOD FOR THE SPEEDY RECOVAREY FOR YOUR CHILD.
Anbudan Poongothai kannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ராதிகா ஒன்றும் கவலைப்படாதம்மா.......உன் மருமகனுக்கும் இதுபோல அடிக்கடி (அந்த வயதில் வரும்)...
நாம் தனியா இருக்கிறோம்,சோ நமக்கு நாமே ஆறுதலாகவும் ,திட நம்பிக்கையுடனும்,தைரியமாகவும் இருக்க வேண்டும்..நீயும் குழம்பி அண்ணாவையும் குழப்பாதாடா.....
மருந்து கொடுத்தவுடன் சரியாகுமா கொஞ்சம் டைம் எடுத்துக்கும்ப்பா....
இப்படி செய்துபார் "அரிசி கஞ்சி கொடுக்கிராய் அல்லவா,அதனுடன் பொட்டுக் கடலையை வறுத்து பொடி செய்துகொள், இரண்டையும் கொதிக்க வைத்து கஞ்சி செய்து செர்லாக் போல கொடுப்பா வயிற்றுப் போக்கு நின்றுவிடும்."
சளி மூக்கில் வடிந்துவிடுவது நல்லதும்மா......அவளுக்கு எரியாதது போல துடைத்துவிடு போதும்.எப்படியும் சளியும் வந்துவிட்டால் 1,2 வாரங்கள் இருந்துவிட்டுதான் போகும்....
இது எல்லாவற்றிற்கும் மேலாக நீ கவைப்படாமல் தைரியமாக இருக்கவேண்டும்,....... நமக்கு அவர்களின் கஷ்ட்டத்தை பார்க்கும்போது பாவமாகத்தான் இருக்கும்,ஆனாலும் எல்லாவற்றையும் நமக்குல் வைத்துக் கொள்ளவேண்டும்டா.....

குட்டிரேயம்மா.......
என் மருமகள் இப்போது எப்படி இருக்கிறாள்?உடல்நிலை சரியாகிவிட்டதா?விளையாடுராளா?நீ எப்படி இருக்கே?ஏன் பதிவிடவில்லை 2 நாட்களாக?

ஹாய் ரேணுகா உங்க பதிவு கண்டு மகிழ்ச்சி பா.நினைவு வெச்சி பதிவு போட்டு இருக்கீங்க
sorry பா இன்னும் என் கொழந்தைக்கு சரி ஆகவில்லை 2 நாட்களாக HOSPITAL வீடு என
மாறி மாறி இருக்கேன் பா.அதான் பதிவு போட முடியலை.இப்போ கொஞ்சம் பரவ இல்லை
முன்னாடி ஒரு நாளைக்கு 15 தடவை போயிட்டு இருந்தா இப்போ 5 தடவை போறா.
சளி இப்போ இருமலா இருக்கு ஒரே tention ithula பெரிய பொண்ணு ரொம்ப வாலா வறா.
என்ன பண்றது நீங்க சொல்ற மாதிரி நமக்கு நாமதான் தைரியம் சொல்லிகனும்.எனக்காக
அக்கறையா விசாரிச்சதுக்கு மறுபடியூம் நன்றி.என் மருமகனையும் கேட்டதா சொல்லுங்க.

குறைந்துவிட்டதில்லையா... கவலை வேண்டாம் இன்னும் ஒன்னு இரண்டு நாளில் நல்லாயிடுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்