முட்டை ஸ்மெல்

தோழிகளே உதவுங்கள் நான் கேக் செய்ய ட்ரை பண்ணேன்.ஆனால் முட்டை ஸ்மெல் வருது. என் கணவருக்கு வியாழக்கிழமை பிறந்த நாள் நானே கேக் செய்யணும் என்று ஆசைப்பட்டேன். உதவுங்கள் ப்ளீஸ்

முட்டை நல்லா அடிங்க.. மாவின் அலவுக்கு ஏத்த மாதிரி முட்டை பயன்படுத்துங்க. வெனிலா எஸன்ஸ் பயன்படுத்துங்க.. ஏலக்காயை தூள் செய்து போடலாம்.வெள்ளைகரு மட்டும் கூட பயன்படுத்தலாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி ரம்யா மிக்ஸியில் முட்டை அடித்தால் ஸ்மெல் வருமா

vetri nichayam

நான் இது வரை மிக்ஸியில் முட்டையை அடித்ததில்லை. நீங்கள் முட்டையை நன்கு நுரை வரும் வரை அடிக்கணும். முட்டையை வெள்ளை கரு தனியாக அடிக்கணும்....மஞ்சளை சேர்க்காமலும் செய்யலாம். வெள்ளை கருவை நன்கு அடித்தால் (முர்கரண்டி கொண்டு கூட அடிக்கலாம்) அது நன்கு உப்பி வரும் வரை அடிக்கவேண்டும். கொஞ்சம் அல்மென்ட் எசென்ஸ் கூட சேர்த்துக்கலாம். நீங்கள் எதற்கும் கீழே உள்ள செய்முறையை பாருங்கள்....உங்களுக்கு நன்றாக புரியும்...பறகு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.

http://arusuvai.com/tamil/node/9488

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அப்ஸராவின் ஈஸி கேக் முறையை பின்பற்றி, ஷாகியா ஈஸி தம் கேக் செய்முறையில், கிரைண்டரில் முட்டை, சர்க்கரை அரைத்து செய்திருக்கிறார் பாருங்க.

மிக்ஸியில் முட்டை அடிக்கலாம். நன்றாக வருகிறது.

முதலில் வெள்ளைக் கருவை அடித்துக் கொண்டு, பிறகு மஞ்சள் கரு சேர்த்து, செய்து பாருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப நன்றி நான் இன்று கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.நன்றி

vetri nichayam

மேலும் சில பதிவுகள்