சும்மா பேசலாம் வாங்க!!

ஹாய் ஹாய் ஹாய்... மேட்டரே இல்லாம பேசும் ஒரே மேட்டர் அரட்டை தானே. அதனால இங்க வந்து என்னனா பேசுங்க :)

வருக வருக... புது அரட்டைக்கு ஃபீல் பண்ணாம வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதோ நான் வந்துட்டேன்....ஹாய் வனிக்கா நலமா பசங்க நலமா இருக்காங்களா....

நான் நலம். நீங்க நலமா? எங்க வரீங்க, காணாம போறீங்க... என்ன நடக்குது!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒகே பா தேங்ஸ் நான் நினைத்து போல்vermiceli தான், நாம் அதனை பால்( பாயாசம்) காய்ச்சும் போது அதில் சேர்ப்போம்/ இதை ட்ரை பண்ணிப் பாரக்க வேண்டும்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மீண்டும் சந்திப்போம் BYE BYE

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் பூ ,என் டீயை குடிச்சிட்டு பதிவு போட்டதுக்கு நன்றி. இன்னைக்கு வெயில் தான் மிதமான வெயில் பா. ரொம்ப நள்ளா இருந்தது. ;)

ஹாய் வனி, நேத்து என்ன ரொம்ப புகழ்ந்துட்டிங்க;). ரொம்ப என்னைய புகழாதிங்க எனக்கு வெட்கமா இருக்கு. ரொம்ப செம்மான விஷியம் தான் என்ன பண்ண.;) வெளிய யார்கிட்டையும் சொல்லாதிங்க. இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? 2 நாளா கம்யூட்டர் பக்கமே போகல. பாஸ் கேட்டா கம்பயூட்டர் ரிப்பேர் ரிப்பேர் னு சொல்லி 2 நாளா வேலையே செய்யல.ஹிஹிஹி

ஹாய் சுமி, எப்படி இருக்கிங்க. ஆளையே பார்க்க முடியல ரொம்ப பிஸியா?.

உன்னை போல பிறரையும் நேசி.

hai, iam priya.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹாய் vani சிஸ்டர் நலமா ?

அதே தான் பூங்காற்று பாயசத்துக்கு போடுறதே தான். கண்டிப்பா வாங்கி ட்ரை பண்ணுங்க. நான் இதை ஏற்கனவே ரைஸ் சேவையில் செய்திருக்கேன். எனக்கு பிடித்தது.

இளையா... முதல் குறிப்பு தானே இது? ஏற்கனவே ஒன்னு கொடுத்தீங்களா?? நினைவில்லை.... அதான் கேட்டேன். நலமா இருக்கேன். நீங்க நலமா? வனி சிச்டரை விட வனி அக்கா நல்லா இருக்கு, குறிப்பில் போட்டிருந்த பதிவை பார்த்தேன். :)

தேவி... மற்றவரை புகழ்வதில் எனக்கு ஒரு தனி சந்தோஷம். அதுவும் உங்களை போன்ற நல்லவர்களை புகழ்வதில் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். உங்க பாஸ் பாவம். உங்களையெல்லாம் வெச்சு, வேலை வாங்கி... என்னத்த செஞ்சு, என்னத்த சொல்ல... விடுங்க. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் பொண்ணு முன்னெல்லாம் ரொம்ப அமைதியா இருந்தா....இப்ப ரொம்ப வால் முளைச்சிடுச்சு......என்ன லேப்டாப் முன்னாடியே உட்காற விட மாட்டேன்கிறாள்.அவ தூங்குறான்னு வந்து லேப்டாப் முன்னால உட்கார்ந்தேன் அதுக்குள்ளே அவ எழுந்திரிசுட்டா அதான் போயிட்டேன்....

மேலும் சில பதிவுகள்