தேதி: April 28, 2011
காபி தூள்
க்ளாஸ் & க்ளூ
அவுட்லைனர் - தேவையான நிறங்கள்
பென்சில்
க்லிட்டர்ஸ்
சார்ட் பேப்பர்
விரும்பிய படத்தை முதலில் சார்ட் பேப்பரில் வரைந்து கொள்ளவும்.

அவுட்லைனர் கொண்டு உடல் முழுவதும் கருப்பு நிறம் கொண்டு வரையவும்.

விரும்பிய நிறம் அவுட்லைனர் கொண்டு ஆடைகளை வரையவும்.

க்லிட்டர்ஸ் கொண்டு நகை போன்றவற்றை வரைந்து முழு படமும் முடிக்கவும்.

இப்போது காபி தூளில் தேவையான அளவு க்ளாஸ் & க்ளூ கலந்து வேண்டிய நிறத்துக்கு ஏற்றபடி நீரும் கலந்து கொள்ளவும்.

முதலில் மிகவும் லேசான நிறமாக கலந்து படம் முழுக்க தீட்டவும்.

நன்றாக காய விடவும். இப்போது எங்கெல்லாம் நிறம் கூடுதலாக தேவைப்படுகிறதோ அங்கு மட்டும் மீண்டும் தீட்டவும்.

இந்த முறையில் காபி பெயிண்டிங் செய்யும் போது மரத்தில் பெயிண்ட் செய்தது போல் இருக்கும். வார்னிஷ் கொடுத்தது போல் ஒரு தோற்றத்தை க்ளாஸ் & க்ளூ கலவை கொடுக்கும். இது வழக்கமான காபி பெயிண்டிங்கை விட வேகமாக செய்ய வேண்டும். விரைவில் காய்ந்து விடும் தன்மை கொண்டது. க்லிட்டர்ஸ் மற்றும் அவுட்லைனர்கள் காபி பெயிண்டிங்கில் கூடுதல் அழகு சேர்க்கும். எவ்வளவு ஷேட்ஸ் வேண்டுமானாலும் வழக்கமான காபி பெயிண்டில் கொண்டு வருவது போல் இதிலும் கொண்டு வரலாம்.

Comments
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வனிதாக்கா...
ஹாய் வனிதாக்கா...
உங்க craft எல்லாமே ரொம்ப சூப்பர்....விநாயகர் ரொம்ப அருமை....நீங்க செய்யறத பார்த்து எனக்கும் இது போல நிறைய செய்ய ஆசை தான்...குட்டி பையன ஸ்கூல் போனா தான் நான் செஞ்சு பாக்க முடியும...one இயர் வெயிட் பண்ணனும்...ஆனா கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்....அப்போ உங்க எல்லாரோட craft உம் கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்...தேங்க்ஸ் அக்கா
SaranyaBoopathi
வனி
வனி மற்றொரு காபி பெயிண்டிங் செய்து அனுப்பிட்டீங்களா. கிருஷ்ணர் ஸ்டைலில் இருக்கும் விநாயகர் சூப்பர். இதையும் செய்து பார்த்துவிடுகிறேன். ட்ரெஸ்க்கு மட்டும் 3D அவுட்லைனர் பயன்படுத்தி இருக்கீங்க. க்ளாஸ் கலரைதான் க்ளாஸ் என்று சொல்லி இருக்கீங்களா வனி.
சரண்யா
மிக்க நன்றி. அவசியம் நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்க. பிள்ளைகளை பார்த்துக்கும்போது நேரம் ஒதுக்குவது சிரமம் தான்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வினோ
மிக்க நன்றி. அது 'glue 'n' gloss'. பார்க்க white gum போல் இருக்கும். அவசியம் செய்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. முன்ன பண்ண காபி பெயிண்டிங்கை விட இது கொஞ்சம் வேகமா பண்ணனும். நல்ல shine கிடைக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
'glue 'n' gloss' இந்த மாதிரி கிடைக்குதா. இப்பதான் இதப்பற்றி கேள்விபடுறேன்.
இந்த ஒயிட் கம் இங்க கிடைக்குதானு பார்க்கிறேன். இந்த மாதிரி வித்தியாசமான பெயிண்டிங்கா செய்து பார்த்து வீடு முழுவதும் மாட்டி வைக்கனும். கண்டிப்பா செய்துபார்ப்பேன்.
குழலூதும் பிள்ளையார்
பெய்ன்டிங் கலக்கலா இருக்கு வனி.
எனக்கு சின்ன வயசில இருந்தே பிள்ளையார் மேல ஒரு க்ரேஸ், எப்பவும் அழகா குழுகுழுன்னு இப்பார். ;) இப்பிடி குழலூதும் பிள்ளையார் கண்டதே இல்லை. இவருக்கு ஸ்பெஷலா ஏதாச்சும் பேர் இருக்கா??
- இமா க்றிஸ்
சூப்பர் வனிதா,sister
காஃபி பெயின்டிங் சூப்பர் வனிதா அக்கா.
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்
வினோ
ஆமாம் பெவிக்ரில் ப்ராண்டு தான் நான் பயன்படுத்திருக்கேன். ட்ரை பண்ணுங்க... கிடைக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
இமா... மிக்க நன்றி. எனக்கும் விநாயகர் ரொம்ப விருப்பம்... வித விதமா வாங்கி வைப்பேன், அழகா இருக்குறதா தோனும். ஆனா இவருக்கு பெயர் இருக்கான்னுலாம் எனக்கு தெரியாது. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
யோகபிரியா
மிக்க நன்றி தோழி. நீங்களும் செய்து பாருங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hai,VANITHA sister.
பதிலளித்ததுக்கு,நன்றி.கண்டிபாக செய்து பார்கிறேண்
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்
குழலூதும் விநாயகர்!!
புதுமை வனி! இமா சொன்னதுப்போல குழலூதும் விநாயகரை இப்பதான் பார்க்கிறேன்!. ரொம்ப க்யூட்டா இருக்கார்!
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்க காஃபி பெயிண்டிங். நல்லா விதவிதமா யோசிச்சி ரசனையா பண்ணறீங்க வனி! அருமை! தொடர்ந்து கலக்குங்க! வாழ்த்துக்கள்!!
பி.கு. எனக்கும் விநாயகர் என்றால் ரொம்பப்பிடிக்கும். வால் ஃப்ரேம், நிறைய சின்ன சின்ன சைசில் சிலைகள் என்று க்யூரியோ முழுக்க வைத்து இருக்கேன்! முடிந்தால் இதுப்போல ஒரு விநாயகர் செய்து மாட்டலாம் - எப்பவும்போல சம்மர் ஹாலிடேஸ்லதான் முயற்சிக்கனும்! :) நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ
மிக்க நன்றி. எதாவது நல்ல படம் வேண்டும் என்று பல நாள் இணையத்தில் தேடி பிடிச்சேன் இவரை. நீங்களுயும் ஒரு பெயிண்டிங் செய்து மாட்டிடுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா,
வனிதா,
பிள்ளையார் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கார்.பிள்ளையாரை இப்படி தரிசனம் செய்ததில்லை.குழலூதும் பிள்ளையாரை கற்பனை கூட செய்ததில்லை.அழகான ஓவியமாக காட்டிட்டீங்க.நன்றி.
வனி
வாவ்.. பிள்ளு காப்பி பொடியில் அழகாய் இருப்பதுடன் கமகமனு மணக்க வேற செய்யறார் ;) சூப்பர்.. வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஹர்ஷா
பிள்லையார் கையில் எதை கொடுத்தா என்ன... அவர் எப்படி இருந்தாலும் அழகு தானேன்னு வெச்சுக்கட்டும்னு விட்டுட்டேன். மிக்க நன்றி ஹர்ஷா. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
பிள்ளையார் வாசம் அங்க வரை வந்துட்டா??? பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு. :) மிக்க நன்றி ரம்யா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிக்கா
ஹாய் வனிக்கா பிள்ளையார் புல்லாங்குழல வச்சுட்டு சூப்பரா போஸ் குடுக்குறாரு...பெய்ண்டிங் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் வனிக்கா...
சுமி
மிக்க நன்றி சுமி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ரொம்ப லேட் ஹ பாத்துட்டேன். சாரி
ரொம்ப நேர்த்தியான விளக்கம், விநாயகர் சூப்பரோ சூப்பர். கை வலிளையும் எப்படி தான் பண்றீங்களோ... வாழ்த்துக்கள்.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகி
மிக்க நன்றி. லேட்ட வந்தாலும் பின்னூடம் கண்டிப்பா தரனும்னு வந்திருக்கீங்களே... அந்த மனசுக்கு பாராட்டுகள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா