ஏன் இந்தப் பெயர்? பெயர்க்காரணம் சொல்லுக.. (காமெடியாகவோ, சீரியஸ்ஸாகவோ..)

தமிழில் சில வார்த்தைகளைப் படிக்கையில எதனால இந்த பெயர் வந்திருக்கும்னு ஒரு யோசனை வரும். இதனாலத்தான் இந்த பெயர் வந்திருக்குமோன்னு நாமே எதாவது யோசனை பண்ணி அர்த்தம் கண்டுபிடிச்சா அது ரொம்ப நகைச்சுவையா இருக்கும். எனக்கு வர்ற மாதிரியே நிறைய பேருக்கு பெயர்கள் குறித்த கேள்விகள் மனசுக்குள்ள இருக்கலாம். இப்படித்தான் வந்திருக்குமோங்கிற பதில்களும் இருக்கலாம். நீங்க செய்ய வேண்டியது இதுதான். அப்படி உங்களுக்கு எந்த வார்த்தைகளுக்கு பெயர்க்காரணம் தெரிய வேண்டுமோ, அதை இங்கே கொடுங்க. ஒருவர் ஒரு பதிவுல 5 வார்த்தைகளுக்கு மேலே கொடுக்க வேண்டாம். அதுக்கு விடை(கள்) வந்த பிறகு
அடுத்தடுத்த பதிவுகள்ல மற்ற வார்த்தைகளைக் கொடுக்கலாம்.

பெயர்க்காரணம் தெரிஞ்சவங்க யார் வேணும்னாலும் பதில் கொடுக்கலாம். உண்மையான பெயர்க்காரணம்தான் சொல்லணும்னு கிடையாது. உங்க மனசுல தோணுற நகைச்சுவையான காரணங்கள், உங்களோட சொந்த கற்பனை இப்படி எது வேணும்னாலும் பதிலா கொடுக்கலாம். சிறந்த நகைச்சுவை பதிவுகளுக்கு சிறப்பு பாராட்டுகள் உண்டு.. :-)

உதாரணமா, தோசை க்கு ஏன் தோசை ன்னு பேர் வந்துச்சு..

பதில்:

சங்க காலத்துல தோசைக்கு 'சொய்ங்ங்ங்..' ன்னு தான் பேர் இருந்துச்சு. அதை கல்லுல ஊத்துறப்ப "சொய்ங்ங்ங்" ன்னு சத்தம் வர்றதால அந்த பேரை வச்சிருந்தாங்க. அப்ப வட மாநிலத்துல இருந்து வந்த ராஜா ஒருத்தருக்கு இந்த "சொய்ங்ங்.." ரொம்பவே பிடிச்சு போச்சாம். அவர் தினமும் இரண்டு சொய்ங்ங், அதாவது தோ சொய்ங்ங்ங் கேட்டு வாங்கி சாப்பிடுவாராம். 'தோ சொய்ங்ங்ங்'.. 'தோ சொய்ங்ங்ங்' ன்னு அவர் சொன்னது பிரபலமாகி, பின்னாடி அதுவே மருவி தோசை யா ஆயிடுச்சாம்..

இப்படியெல்லாம்கூட கேவலமா பதில் கொடுக்கலாம். :-) இல்லை உண்மையான பெயர்க்காரணம் தெரிஞ்சாலும் சொல்லலாம்.

என்னுடைய முதல் ஐந்து வார்த்தைகள்..

1. பெண்டாட்டி
2. இட்லி
3. மாளிகை
4. மடையன்
5. விளக்கு

எனக்கு தெரிந்த காமெடியான ஒரு பதில்
பெண்டாட்டி --ஒரு பெண்ணானவள் திருமணம் ஆனவுடன் தன் கணவனை ஆட்டி வைப்பதால் (பெண் +ஆட்டி வைப்பதால் )அந்த பெண்ணுக்கு பெண்டாட்டி என்ற பெயர் வந்திருக்கும் ..ஹி ஹி ஹி
என்னுடைய வார்த்தைகள் சில ,
நிலா
அம்மா ,
ஆண்
காதல்
பொய்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

இருட்டை விலக்குறதால விளக்குன்னு வந்திருக்குமோ??!! இது சீரியஸா காமெடியான்னு எனக்கே தெரியல. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெண்டாட்டி - கணவரை ஆட்டி வாட்டி ஆளாக்குவதினால் இருக்குமோ
இட்லி - இட்டு அவி
மடையன் - தண்ணீர் ஓட்டத்தினை தடுப்பது மடை. அதுபோல் அறிவை வெளிப்படுத்தாமல் முட்டாளாகவே இருப்பவன் தான் மடையனோ
விளக்கு : இருளை விளக்குவதினால் இருக்குமோ பதிலளிக்கவும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

//பதிலளிக்கவும்// - அண்ணாக்கு தெரிஞ்சா நம்மை ஏன் கேட்கபோறார் ;) ஹிஹிஹீ. நாமலாம் சொன்னா அதுல “சூஸ் தி பெஸ்ட்”னு இன்கி பின்கி பான்கி போட்டு சூஸ் பண்ணிக்குவார்... சின்ன பிள்ளையாட்டும். இஷ்டப்படி சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட... இது ஜாலியா இருக்கே! :)

காலைல ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டுட்டே அந்த டைம்ல கொஞ்சம் அறுசுவையை எட்டி பார்த்துட்டு போலாம்னு வந்தா... இந்த த்ரெட் ஜாலியா இருக்கு. பதிவு போடாம போகமுடியலை! (புதுமையா யோசிச்சு தொடங்கின அட்மின் அண்ணாக்கு ஒரு சபாஷ்!)

சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம். தலைப்பில் நீங்க சொன்ன 'தோசை' கதை சூப்பர்!. நானுமே இந்த மாதிரிதான் நினைச்சிப்பேன், என் பசங்களுக்குகூட இதை விளையாட்டா சொல்லியிருக்கேன். அவர்களும் கேட்டு சிரித்து ரசிப்பார்கள்!. ஆனா கொஞ்சமே கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்னோட வெர்ஷன்! :)

என் கதை என்னன்னா, வட நாட்டுக்காரன் வந்தப்ப, நம்ம ஊரு ஸ்பெஷல் ஐய்ட்டம் சாப்பிட்டான். மாவை, சூடான கல்லில் ஊற்றும்போது, ஒரு முறை, 'சொய்ய்ய்ங்' என்றும், அப்புறம் அதை, திருப்பிபோடும்போது, ஒரு முறை, 'சொய்ய்ய்ங்...' என்றும் இரண்டு முறை அந்த சத்தம் வந்ததால், அவன் தோ+சொய்ய்ய்ங் = தோசை (ஹிந்தியில் தோ என்றால் இரண்டு என்று அர்த்தம்!) என்று கேட்டு சாப்பிட அது 'தோசை' ஆனது!.

அதேபோல, இட்லி என்பது, மாவை இட்டு, அவிப்பதால் வந்தது. இட்டு+அவி = இட்லி!

(அப்ப இட்லிதான் தழிழ்ப் பெயர், தோசை வடநாட்டுக்காரனதான்னு எல்லாம் யாரும் கேட்கக்கூடாது என்ன? எனக்கு இரண்டும் பிடிக்கும்- இரண்டும் வேணும்! :), ஆமா, சொல்லிட்டேன்!)

சரி, இப்போதைக்கு இதுதான்! தோழிங்க‌ எல்லாம் ஜாலியா ப‌திவு போட்டுட்டு இருங்க. நான் என் வேலையை(யும்) கொஞ்சம் கவனிக்கிறேன்! :)

மீண்டும் பிற‌கு பார்க்க‌லாம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

பேயை ஓட்டுவதால் போயோட்டி!

மாவை ஆட்டுவதால் மாவாட்டி!

அப்படி ஆணை ஆட்டி வதைப்பதாக வைத்துக்கொண்டால் ஆண்டாட்டினுதான் வந்திருக்கும்;-)

அதனால பெண்டாட்டி அப்படிங்கறது ஒரு கணவன் தான் கட்டி வந்த பெண்ணை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்பதை சிம்பாலிக்கா மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக பெண்டாட்டினு கூப்பிட்டதால் அந்த பேர் மற்ற கணவர்களுக்கும் ஏற்றதாகப் பட அப்படியே வந்திருச்சு;-)

அப்புறம் அண்ணா தோசைக்கு பேர் வந்த கதை சூப்பரா இருக்கு;-)

Don't Worry Be Happy.

நீர் மடை திறப்போன் - மடையன்

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

பாபு எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நீங்க எப்படி இந்த ஐந்து வார்த்தைகளை மட்டும் தேர்வு செய்தீங்க......அதுவும் நீங்கள் "பொண்டாட்டியை" முதலில் வரிசை படுத்தி.....அசத்திடீங்க போங்க....

இட்லி என்பது மாவை இட்டு அவி என்பதன் மருவலே "இட்லி"
தினமும் எண்ணெய் விட்டு திரி போட்டு ஏற்றுபதால் எண்ணெய் பிசிக்கு பிடித்து அதை நாம் விளக்கோ விளக்கென்று விளக்கியதால் "விளக்கு" என்று வந்தது.
வேலை செய்து களைப்பாக மாலையில் வீடு திரும்பும் கணவர் (ன்) தினம் மனைவியிடம் எதாவது திங்கறதுக்கு இருக்க என்று கேப்பார்....அவளும் போங்க நீங்க தினம் உங்களுக்கு என்னத்த செய்ய என்றால்....அதற்க்கு அவர் ஒரு போண்டா டீ செய்து வைக்கலாம் இல்ல என்றாராம்.....உடனே அந்த மனைவி (கணவர் சொல்லை மீராதவள் போல் ) கணவருக்கு தினமும் மாலையில் போண்டா டீ செய்தது கொடுத்தாள். அவரும் தினமும் வீடு வரும் போது போண்டா டீ என்று சொல்லிக் கொண்டே வருவாராம்....அதை கேட்ட பக்கத்துக்கு வீட்டுக்காரர் அடடா....இது என்ன புது பேரா இருக்கே....பரவயில்லையே நானும் நம் மனைவியை அப்படியே கூப்பிடலாமே....என்று ஆரம்பித்தது தான் இந்த "பொண்டாட்டி" (ஐயோ என்னாலையே தாங்க முடியலை...)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//தினமும் மாலையில் போண்டா டீ செய்தது கொடுப்பதால் பொண்டாட்டி.. //

ஆஹா.. ஆஹா.. (என்னாலயும் தாங்க முடியலைங்க.)

//நீங்க எப்படி இந்த ஐந்து வார்த்தைகளை மட்டும் தேர்வு செய்தீங்க//

சும்மா ஒரு குத்து மதிப்பா போட்ட அஞ்சு வார்த்தைகள்ங்க.. அதுக்கெல்லாம் உள் காரணம் கண்டிபிடிக்கக்கூடாது.. :-) லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு.

மடையனுக்கு இப்படி இருக்கலாமோ..

அந்த காலத்துல பேச்சுத்தமிழ் கூட இலக்கணத்தோட செய்யுள் வடிவத்திலதான் இருந்திருக்கு. கொஞ்சம் அறிவுக்கெட்டத்தனமா எதாவது செய்யறவங்களை, 'உனதறிவுக்கு மடை ஏன்' னு கேட்டு இருக்கலாம். இப்படி முட்டாள் தனமா செய்யறவங்களை மடையேன்.. மடையேன் ன்னு கேட்டு கேட்டு, பின்னாடி அது மடையனா மாறி இருக்கலாம். (கண்டுபிடிச்சிட்டோம்ல.. ஹிண்ட் கொடுத்த மஞ்சுளா மேடத்துக்கு சின்னதா ஒரு நன்றி. ;)

////பேயை ஓட்டுவதால் போயோட்டி! மாவை ஆட்டுவதால் மாவாட்டி!//

ஒண்ணும் சொல்ல முடியலை போங்க.. அப்படியே T.R ஆ மாறி, இன்னும் கொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணலாம் போல இருக்கே..

டாய்ய்ய்ய்.. பேய்யை ஓட்டுறவன் பேயோட்டி..
மாவை ஆட்டுறான் மாவாட்டி..
கேப்பியாடா கேள்வி இன்னொரு வாட்டி..
தொங்கவிட்டுடுவோம் உன்னை கயத்துல மாட்டி..
ஏய்.. டண்டணக்கா, ஏ.. டணக்குணக்கா...

நான் வல்லைங்க இந்த ஆட்டத்துக்கு.. :-)

அடடா.. எக்ஸ்டெண்ட் பண்ணுன விதம் அருமை போங்க.. ஆனா இந்த இழை ரொம்ப ஸ்வாரஸ்யமா போகுது.. மாளிகை பத்தி தான் யாரும் சொல்லலை.. மா அப்படினா பெரிசு.. அப்போ ளிகைனா என்ன? ஏதோ ஒன்னு.. ஆனா பெருசா ஒன்னு.. பதில் ஓரளவு பரவாயில்லையா? ;) எனக்கு மால் தான் தெரியும்..

சரி அடுத்த ஐந்து வார்த்தைகளை குடுங்க.. குடுத்ததுக்கே உருபடியா ஒன்னுமில்லைனு சொல்றது கேக்குது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்