எல்லோருக்கும் வணக்கமுங்க...

இணையதள நண்பர்கள், சகோதரிகள், உறவுகள் அனைவருக்கும் என் வணக்கம்.

என்னுடைய பெயர் தக்ஸ். சொல்லிக் கொள்ளும்படி எந்த பெரிய சாதனையையும் செய்யாததால், இதற்கு மேல் என்னைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. இந்த தளத்தின் பெயர் தான் என்னை இங்கு இழுத்து வந்தது. சுவையான உணவு சாப்பிடுவதை விட பெரிய சுகம் உலகத்தில் வேறு என்னவாக இருக்க முடியும். நான் நல்லா சமைப்பேன், அதைவிட நல்ல சாப்பிடுவேன். பெண்கள் மீது எப்போதும் ஒரு பெரும் மதிப்பு எனக்கு உண்டு, பழங்களில் கூட நான் சீத்தாப்பழம், கமலா ஆரஞ்சு மாதிரி பழங்கள் தான் சாப்பிடுவேன்னா பார்த்துக்கோங்களேன்.... (சும்மா தமாஸு, தப்பாக எடுத்துக்க வேண்டாம்)

என்னையும் இந்த தளத்தில் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சிறுகதைகளை எங்கே பதிக்க வேண்டும், அல்லது எந்த மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டால், என் படைப்புகளை அனுப்ப ஏதுவாக இருக்கும்.

நன்றி.

இவன்
தக்ஸ்.

""""""கதை, கவிதை மற்ற படைப்புகளை கீழே தொடர்புக்கு arusuvaiadmin@gmail.com என்று உள்ள தொடுப்பின் வாயிலாக எங்களுக்கு அனுப்பி வைக்கவும். பரிசீலனை செய்து, அவை வெளியிடும் தரத்தில் இருக்கும்பட்சத்தில் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அதனை தெரிவிப்போம்.

மின்னஞ்சல் முகவரியை மிகச் சரியாக குறிப்பிடவும். வேறு தளங்களில், ஊடகங்களில் இடம்பெற்றவை, நீங்கள் வெளியிட்டதாக இருந்தாலும் அதனை இங்கே வெளியிட அனுமதி இல்லை. வலைப்பதிவுகளில் வெளியானவைக்கும் இங்கே அனுமதி இல்லை." """"""

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

மேலும் சில பதிவுகள்