ஃப்ரெஞ்ச், ஹிந்தி எதை எடுப்பது?

முதல் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு இரண்டாம் பயிற்று மொழியாக ஹிந்தி எடுத்திருக்கிறோம். ஆனால் அவன் வகுப்பில் உள்ள தமிழர்கள் ஃப்ரெஞ்ச் தேர்ந்தெடுத்து உள்ளனர். எனக்கு ஃப்ரெஞ்ச் தெரியாது. வகுப்பில் சொல்லிக்கொடுப்பதே போதுமானதா இருக்குமா? ஃப்ரெஞ்ச் படிக்க எளிதானதா? எதை தேர்வு செய்வது ? குழப்பமாகவுள்ளது. உதவுங்கள் தோழீஸ்........

ஹாய்,ஜெயலெட்சுமி அக்கா, உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?.தெரிந்தாள் .அவனை ப்ரெஞ் எடுக்கசொல்லுங்க அவனுக்கு பள்ளியில் சொல்லிகொடுக்கிறதே போதும். நீங்க ப்ரிய இருக்கையில் ஹிந்தி சொல்லிகொடுங்க்.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

என்னை பொறுத்தவரையில் ஹிந்தி எடுக்க வைப்பது தான் நல்லது.
என்ன தான் ஸ்போகன் கிளாஸுக்கு போனாலும் பழக முடியாது. அவன் 11 ம் வகுப்பு வரை ஹிந்தி படிக்க போவதால் நன்றாக பேச இயலும். ஃபிரெஞ் குறிப்பான சில நாடுகளில் மட்டுமே பேச முடியும். அதற்கான பேசும் வாய்ப்பு குறைவு. ஆனால் ஹிந்தி அப்படி இல்லை. அவன் பேங்களூர், சென்னை என எந்த ஊரில் செட்டில் ஆனாலும் ஹிந்தி பயன்படும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

யோகா, ரம்யா.,

எனக்காக கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி;-)

ஆனா, இப்படி இரண்டுபேரும் ஒன்னுக்குபின் முரணா இல்ல கருத்து சொல்லியிருக்கீங்க.
இப்ப எனக்கு இன்னும் குழப்பம் அதிகமாயிருச்சு. நாளைக்கு ரோஹித் என்னைப் பாத்து கேள்வி கேக்காத மாதிரி இருக்கனும்;-)

ரம்யா ஹிந்தி அவன் இப்பவே கொஞ்சம் பேசறான். இங்க இருக்கிற சூழல் அப்படி. மலையாளமும் கொஞ்சம் பேசறான். வீட்டுக்குள்ள தமிழ் மட்டும்தான்.
அதுவும் அவங்க அப்பா வந்தா மாறிடும்;(

அதனால ஸ்போக்கன் ஹிந்தி பொருத்தவரை பயமில்லை. ஆனா ஃப்ரெஞ்ச் எப்படின்னு தெரியலை. எனக்கு என்ன பெரிய குழப்பம்னா ஏன் எல்லாரும் ஃப்ரெஞ்சையே தேர்ந்தெடுக்குறாங்கன்னுதான்;(

ரம்யா இங்கதான் செட்டில்ங்கறமாதிரிதான் எங்க நிலை. அப்ப ரோஹித்தும் இங்கயே இருக்கிறமாதிரிதான் இருக்கும். நாளைக்கு அவன் விருப்பம் எப்படியோ . அதான் ஒன்னும் புரியலை. ஊர்லயாயிருந்தா கண்ண மூடிட்டு ஹிந்தி எடுத்திருப்போம்.

என் பதில் படிச்சாலே எவ்வளவு குழப்பத்தில இருக்கேன்னு தெரியுதா;)) அவரும் உன்னோட முடிவுதான்னு எங்கிட்ட விட்டுட்டாரு. அதான் ரொம்ப குழம்பி இங்க பதிவு போட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாக்கறேன் மத்த தோழிகள் என்ன சொல்றாங்கன்னு;-)

Don't Worry Be Happy.

ஹாய், அக்கா. கவ்லை படாதிங்க .உங்க ஊர் எது? நீங்க எந்த மொழியை செல்க்ட் பன்ன்ரிக்கிங்க.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

அக்கா அக்கானு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்றீங்க;௦-) எனக்கு வருத்தமாயில்ல இருக்கு;-)

நாங்க இப்ப இருக்கிறது U.A.E லடா, இப்ப ஹிந்திதான் செலக்ட் பண்ணி அவனுக்கு கிளாஸ்ஸும் போயிட்டு இருக்கு. சேஞ்ச் பண்றதா இருந்தா இப்ப பண்ணிடலாம். அதான் என்ன பண்றதுன்னு புரியாம இருக்கேன்;-). மொதல்லயே யோசிச்சு முடிவு எடுத்தருக்கனும்., ஆனா என்ன பண்றது பேரண்ட்ஸ் மீட்டீங் போனப்பதான் மத்தவங்க ஃப்ரெஞ்ச் எடுத்ருக்காங்கன்றது தெரிஞ்சது. மீட்டீங் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுலேர்ந்து ஒரே குழப்பம்தான்;(

Don't Worry Be Happy.

எனக்கு வருத்தமாயில்ல இருக்கு;-)? ஹாய், அக்கா,குழப்பம் இல்லாமல் யோசிங்க. உங்க கணவரிடம் ஒபினியன் கேளுங்க அக்கா.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

//எனக்கு வருத்தமாயில்ல இருக்கு;-)?// ஹ ஹா ஹா.... அதுவா, என் வயச அதிகப்படுத்தீட்டீங்களே...........;))

Don't Worry Be Happy.

.ஹாய், ஜெயான்னு கூப்பிடுகிறேன்.இப்ப வ்யசு குறைந்திற்குமுல.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

தங்கைன்னு கூப்பிட்டிருந்தா குறைஞ்சிருக்கும்;) இப்ப ஈக்வலாயிருச்சு;-D

Don't Worry Be Happy.

ஹாய், ஜெயா, அப்படியா!

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்