ஃப்ரெஞ்ச், ஹிந்தி எதை எடுப்பது?

முதல் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு இரண்டாம் பயிற்று மொழியாக ஹிந்தி எடுத்திருக்கிறோம். ஆனால் அவன் வகுப்பில் உள்ள தமிழர்கள் ஃப்ரெஞ்ச் தேர்ந்தெடுத்து உள்ளனர். எனக்கு ஃப்ரெஞ்ச் தெரியாது. வகுப்பில் சொல்லிக்கொடுப்பதே போதுமானதா இருக்குமா? ஃப்ரெஞ்ச் படிக்க எளிதானதா? எதை தேர்வு செய்வது ? குழப்பமாகவுள்ளது. உதவுங்கள் தோழீஸ்........

நீங்க அங்கேயே செட்டில் ஆக போகிறீர்கள் எனில் அவன் வெளியிடத்தில் ஆங்கிலம் பேசுகிறானா இல்லை ஹிந்தி பேசுகிறானா? ப்ரெஞ்ச் அங்கே தேவைப்படுமா? அவன் படிக்காமலேயே ஹிந்தி பேச கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ப்ரெஞ்ச் எடுக்கலாம். இல்லை எனில் ஹிந்தி தான் என் சாய்சு. எதிர்காலத்தில் அவன் அந்த மொழியை யூஸ் பண்ணனும். ஹிந்தி , ஆங்கிலம் தானகவே கத்துப்பான்.. ஊர் அப்படி எனில் கண்ணை மூடிட்டு ப்ரெஞ்சுக்கு போங்க. எக்ஸ்ட்ரா ஒரு மொழி கத்துக்கறதில் தவறில்லை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ஜெயலஷ்மி,

நலம்தானே? ரொம்ப நாளாக வரலையே, என்ன ஆச்சு?

ஃப்ரெஞ்ச் மொழியில் மார்க் ஸ்கோர் பண்ணுவது சுலபம்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க இருக்கும் இடத்தில் ஸ்போக்கன் ஹிந்தி பிரச்னையில்லன்னு சொல்லியிருக்கீங்க. அதனால் ஃப்ரெஞ்ச் எடுக்கலாம்.

மத்த சீனியர் ஸ்டூடண்ட்ஸ்களின் அம்மாக்கள்கிட்ட பேசிப் பாருங்க. மார்க் ஸ்கோர் பண்ணுவது எதில் ஈஸின்னு தெரிஞ்சுடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரம்யா., நீங்க சொன்னதுதான் அவரும் சொன்னாரு. ஆனாலும் எனக்கு என்ன தயக்கம்னா இதுக்காக அவன தனியா டியூசன் எல்லாம் அனுப்ப முடியாது. நானும் சஹானாவ வச்சிக்கிட்டு அவன்கூட அலையமுடியாது. அதனாலதான்., ஃப்ரெஞ்ச் எப்படி சுலபமா படிக்க முடியுமா இல்லை கடினமான்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்பா.

சீதாம்மா.,

ரொம்ப நல்லாயிருக்கேன்மா. உங்ககூட பேசறது எனக்கு மிகுந்த சந்தோஷம்;). பேத்தி நலமா? நல்ல சேட்டையா;-) தாயும் சேயும் நலமோடு இருக்க இறைவனை வேண்டிக்கிறேன்;-)

சீதாம்மா ஃப்ரெஞ்ச்ல மார்க் ஸ்கோர் பண்ணமுடியும்னா அவனுக்கு படிக்கவும் சுலபமாதான் இருக்கும் இல்லையாமா? ஸ்கூலுக்கு பஸ்லதான் போயிட்டு வரான், அதான் வேற பேரண்ட்ஸ பாத்து கேக்க முடியாத நிலை. இன்னிக்கு அவன் கூட போற இன்னொரு சீனியர் ஸ்டுடண்ட்கிட்ட கேட்டேன்., அவங்க உருது எடுத்திருக்காங்க (பாகிஸ்தான்) ஃப்ரெஞ்ச் எடுத்த கிளாஸ்மேட்கிட்ட எப்படியிருக்கும்னு விசாரிச்சு சொல்ல சொல்லியிருக்கேன்.

ஏற்கனவே இங்க கட்டாயமா அரபிக் படிக்கனும். அதுக்கு ஸ்கூல்ல சிடி கொடுத்துருவாங்க. இங்க பக்கத்தில இருக்கிறவங்களும் அரபிதான். அவங்ககிட்ட கேட்டு சொல்லிக்கொடுத்துடுவேன். இப்ப எனக்கு தெரியாத இரண்டு மொழியும் எடுத்து எப்படி மேனேஜ் பண்றதுன்னுதான் தயக்கம். ஃப்ரெஞ்ச் எப்படின்னு தெரிஞ்சுக்காமயே ரிஜக்ட் பண்றதுக்கும் தயக்கமாதான் இருக்கு. மார்க் ஸ்கோர் பண்ணமுடியும்னு சொல்லும்போது கொஞ்சம் நம்பிக்கையாதான் இருக்கு. அறுசுவையில ஃப்ரெஞ்ச் மொழி எடுத்து படிச்சவங்க யாராவது அதப்பத்தி தெளிவா சொல்லும்போது இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்;-)

மிக்க நன்றி சீதாம்மா எனக்காக இவ்வளவு பிஸியான சமயத்திலேயும் பதிவிட்டதற்கு;-)

Don't Worry Be Happy.

my friend told me now cbse french syllabus is very diffult compare to those who stuied in state board to taken french as second launguage.my freind son also taken french in cbsc syllabus as second laungage.my friend live in uae.when the issue rises french is very easy compare to hindi.the ministry deside french also very diffult subject.now a days better choice is hindi.my friend son completed his schoolhere now he joined B.Tech in india. regards.g.gomathi.

நீங்க இரண்டாம் மொழியா ப்ரெஞ்சே எடுங்க..அதுதான் ஓரளவுக்கு ஏற்கனேவே ஆங்கிலம் தெரியுங்கறதால சுலபமா இருக்கும்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

my friend told me now cbse french syllabus is very diffcult compare to those who studied in state board to taken french as second launguage .my friend son also taken french in cbsc syllabus as second language .my friend live in uae .when the issue rises french is very easy very compare to hindi. now here the education ministry deside french also very hard suject.now a days better choice is hindi my friend son completed school here. now he joined B.tech in india.regards.g.gomathi.

ஃப்ரெஞ்ச் மிகவும் சுலபம் தான். எவ்வளவு சுலபம் என்றால் நன்றாக படித்தால் தொன்னூற்றுக்கு மேல் இல்லையென்றால் பையில் தான். இதற்கிடையில் எதுவுமே கிடையாது. அதற்க்கு ஆங்கில இலக்கணம் ரொம்பவே முக்கியம். அவர்கள் பள்ளியில் அதுவும் சேர்ந்து படிப்பதால் ரொம்பவே சுலபமாக இருக்கும். அவர்கள் வெளியில் தான் ஹிந்தி பேசுகிறார்கள் அல்லவா...அதனால் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஃப்ரெஞ்ச் எடுக்கலாம். அதவும் இல்லாமால் அவர்கள் இப்பொழுது தான் ஆரம்பிக்க போகிறார்கள்....அப்படியே நாமும் சொல்லிகொடுக்கும் போது கற்றுக்கொள்ளலாமே?? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ;)

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எப்படி இருக்கீங்க?நானும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான்பா இருக்கேன்.என் மகளும் முதலாம் வகுப்பு தான் படிக்கிறாள்.இங்கு அரபிக் கண்டிப்பா படித்தாகனும்.நாங்கள் இரண்டாம் பயிற்று மொழியாக தமிழ் எடுத்தோம்.

ஆனால் இங்கு சில பேர் தமிழர்களாய் இருந்தும் அவர்கள் தேர்ந்தெடுத்தது ஹிந்தி தான்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இங்கிருந்து இந்தியாவிற்கு செட்டில் ஆகும் போது அது உதவுமாம்.ஏனென்றால் இந்தியா முழுவதும் பேசும் மொழி ஹிந்தியாம்.
ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.தமிழராய் இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழை எடுப்பதே எனக்கு சரிதாக பட்டது.சில வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் ஹிந்தி மற்றும் தமிழ் எடுப்பது போன்ற வசதி இருந்தது.அதாவது இரண்டாம் மற்றும் மூன்றாம் பயிற்று மொழி வசதி இருந்தது.நான் அதை ப்ளான் பண்ணி தமிழ் 2ஆம் பயிற்று மொழியாகவும்,ஹிந்தியை 3ஆம் பயிற்று மொழியாகவும் எடுக்கலாம் என்றிருந்தேன்.

ஆனால் இந்த ஊரில் தான் அப்பப்ப விதிமுறைகளை மாற்றி கொண்டே இருப்பார்களே...அதனால் உங்களுக்கு தமிழ் இல்லையென்றால் ஹிந்தி எடுப்பதே நல்லது.ஏனென்றால் ஃப்ரென்ச்சை விட இங்கு ஹிந்தி எடுத்தவர்களே அதிகம்.நீங்க இந்த ஊரி செட்டில்லானாலும் சரி வேறு எங்கு போனாலும் சரி ஹிந்தி அவருக்கு எழுதவும் படிக்கவும் நல்லாயிருக்கும்.ஆல் த பெஸ்ட்!!!

மேலும் சில பதிவுகள்