படியில் இருந்து கீழே விழுந்துட்டான்

அர்ஜூன் இன்னைக்கு படியில் இருந்து கீழே விழுந்துட்டான் (6 படி) தலையில் அடிபட்டு பிள்ளைக்கு ரத்தம் நிறைய வந்திடுச்சு. ஒரு டிடியும், பெயின் இஞ்சக்சனும் போட்டிருக்காங்க. 2 தையல் வேற. எனக்கு பயமா இருக்கு அந்த தையல் அவனுக்கு பின்னாடி அசிங்கமா தெரியுமா? நான் நல்லா கவனமா தான் பார்த்துக்கிறேன். சொல்ல சொல்ல கேட்காமல் ஓடுறான் அதான் இப்படி. நான் என்ன பண்ணனும். வேற எதுவும் பிரச்சனை வருமா இப்படி விழுந்ததால். அவன் நல்லா ஆக்டிவா தான் இருக்கான்.

அர்ஜூன் இன்னைக்கு படியில் இருந்து கீழே விழுந்துட்டான் (6 படி) தலையில் அடிபட்டு பிள்ளைக்கு ரத்தம் நிறைய வந்திடுச்சு. ஒரு டிடியும், பெயின் இஞ்சக்சனும் போட்டிருக்காங்க. 2 தையல் வேற. எனக்கு பயமா இருக்கு அந்த தையல் அவனுக்கு பின்னாடி அசிங்கமா தெரியுமா? நான் நல்லா கவனமா தான் பார்த்துக்கிறேன். சொல்ல சொல்ல கேட்காமல் ஓடுறான் அதான் இப்படி. நான் என்ன பண்ணனும். வேற எதுவும் பிரச்சனை வருமா இப்படி விழுந்ததால். அவன் நல்லா ஆக்டிவா தான் இருக்கான்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா எனக்கு என்ன சொல்லன்னு தெரியல...அர்ஜுனுக்கு சீக்கிரம் குணமாகனும்னு வேண்டிக்கிறேன்...நீங்க பயப்படாதீங்க...சீக்கிரம் சரியாகிவிடும்....

கவலை படாதீங்க பயப்பட வேண்டாம். சின்ன வயசுதானே தையல் போட்டது அப்படியே மறைஞ்சிடும்... தெரியாது. காயத்துல தண்ணி படாம பார்த்துக்குங்க. நான்கூட சின்ன வயசில மாடிப்படிகள்ல உருண்டிருக்கேன்.

அன்புடன்
THAVAM

உமா கேக்க பயமா இருக்கு..ஆமா என்ன செய்றது என்ன தான் நாம பாத்துகிட்டாலும் அவங்களுக்கா ஒரு பயம் இருந்தா தான் உண்டு எவ்வளவு தான் கன்ட்ரோள் பன்றது..கவலை படாதீங்க...விழுந்தவுடன் வாந்தி எடுப்பது,மயங்குவது ஒரு மாதிரியா பிஹேவ் பண்ணுவது என்று சில அறிகுறிகள் அப்பவே தெரிஞ்சா தான் கவனிக்கனும்...மத்த்கபடி பைய்யன் பழையபடி விளையாடுறானே ஒன்னும் ப்ரச்சனை இல்லை..ஆனால் மாடிப்படிக்கு ஏறாத மாதிரி எதாவது கைய்யோட செஞ்சுறுங்க உமா..மாடிப்படி குழந்தைகளுக்கு ரொம்ப ஆபத்து.
மண்டையில் இதெல்லாம் வீரத் தழும்பா பின்னாடி லேசா இருந்தாலும் எல்லாம் ரொம்ப பெருமையா எடுத்துக்குவாங்க:-)

பயப்படாதிங்க.. மண்டையில் அடிப்பட்டு இரத்தம் வரலைனா தான் பயப்படனும்.. கிளாட்டாகி உள்ளே நின்னா தான் பின்னால பிரச்சனை வர வாய்ப்பிருக்கு. எந்த ஒரு அடியிலும் இரத்தம் வெளி வருவது நல்லது தான். காயம் சீக்கிரம் ஆறிடும். தண்ணிப் படாம பாத்துக்கோங்க. கொஞ்சம் காஞ்சதும், காத்து படற மாதிரி ஃப்ரியா விடுங்க. எப்பவும் காயத்தை அடைச்சே வெக்காதிங்க. அவனுக்கு ரத்தம் நிறையா ஊறிடும் ;), சின்ன வயசுல்லையா... இது சகஜம் தான். ஆனால் நம்மால தான் தாங்க முடியாது. தனி வீடுனா, படிக்கு பக்கதுல ஏதாவது தடுப்பு மாதிரி வைங்க. கவனமா கண்ணுக்குள்ளயே பிள்ளையை வெச்சுங்கங்க. ஸ்கூலுக்கு போறாங்க எப்படி குதிக்குதுங்கனு யாருக்கு தெரியும். ஒரு வாட்டி அடி பட்டுட்டானில்லையா.. இனி அர்ஜுனே கவனமா இருப்பாரு. ஒன்னும் பயப்பட வேண்டாம். இந்த வயசுல இதெல்லாம் இருக்கும். சீக்கிரம் நல்லாயிரும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குட்டியர் ஆக்டிவா இருக்கார்ல, யோசிக்காதீங்க.
எனக்கு நெத்தியில நாலு தையலோட ஒரு வீரத்தழும்பு இருக்கு. நான் சொன்னால் தவிர யாருக்கும் கண்ணுல படுறது இல்ல.

‍- இமா க்றிஸ்

இதெல்லாம் இந்த வயசுல சகஜம்பா. என் பிள்லைகள் விழாத நாள் இல்லை, அடி படும், அழும், திரும்ப அதே வேலைய செய்யும். குழந்தைகளுக்கு இதெல்லாம் தானாவே உடனே சரி ஆயிடும். வீர தழும்பு என் தலையில் கூட இருக்கு... யாருக்கும் தெரியலயே!!! அதனால கவலை வேண்டாம். எங்க வீட்டில் படிக்கு கேட் போட்டோம், இப்போ திறந்து போக கத்துகிட்டாங்க... ;( இவங்களுக்கு எதுவும் சரி வராது. அதனால கண்டதை போட்டு குழப்பிக்காம ரிலாக்ஸ்டா பாருங்க. நல்லாயிடுவான்.... அவனுக்காக பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு உமா,

இப்ப அர்ஜுன் எப்படி இருக்கார்? தையல் என்னிக்குப் பிரிக்கிறாங்க? டாக்டர்கிட்ட ரெகுலராக செக் அப் போய்ட்டு வந்துடுங்க.

ரத்தம் வந்துட்டதால பயப்பட வேணாம். சரியாகிடும். அதே மாதிரி, தழும்பும் ஒண்ணும் பெரிதாகத் தெரியாது. கவலைப்படாதீங்க. சீக்கிரமே சரியாகிடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

சுமதி ரொம்ப நன்றி உங்க வேண்டுதலுக்கு.

தவமணி அண்ணா உங்களுக்கும் அடிபட்டிருக்கா சின்ன வயதில். எனக்கு பயமா இருக்கு அந்த தழும்பை அவன் பார்க்கும் போதெல்லாம் என்ன நம்ம அம்மா இப்படி நம்மை கவனிக்காம விட்டுட்டாளேன்னு பின்னாடி நினைப்பானோன்னு.

தளிகா உண்மையாவே என்னால இவனை கன்ட்ரோல் பண்ணவே முடியலை. நேத்து கீழ் வீட்டுப்பையன் போறன்னு கேட்டை அவனாவே திறந்து அண்ணா நானும் வரேன்னு போனான். ஒரு நாளைக்கு ஒரு 30 தடவையாவது ஏறி இறங்குவான். நானும் ரொம்பவே பொத்தி வைக்க கூடாதுன்னு விட்டுடுவேன். பின்னாலயே போய் பார்ப்பேன். யார் வீட்டுக்குள்ளும் போகமா வெளியில் நின்னே பேசிட்டு அவனா மேலே வருவான். நேத்தும் நான் நின்னு பார்த்துக்கிட்டு இருக்கும் போது தான் இப்படி ஆச்சு. எனக்கு இரத்தத்தை பார்த்ததும் கத்திட்டேன். பக்கத்தில் இருந்தவங்க தான் ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கிட்டு ஓடுனாங்க. பாவம் ஹாஸ்ப்பிட்டல் போயும் அம்மா நான் சேட்டை பண்ணமாட்டேன் அழாத என்னை தூக்குன்னு அழறான். என்னை வெளிய அனுப்பிட்டாங்க. பாவம் உள்ளே அம்மாட்ட போறேன்னு ஒரே கத்து. நான் 2 நாளா தூங்கலை. அவன் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவன் பாட்டுக்கு தான் விளையாடுறேன். ஏன்பா விழுந்தன்னா அதை அவன் கண்டுக்கவே மாட்டேங்குறான். பேச்சை மாத்துறான்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

எங்க ரம்யா இவனுக்கு புரியுது. இன்னைக்கு புல்லா கதவை திறங்க அர்ஜூன் வெளிய போறேன்னு கத்துறான். காலில் லேசா வலி இருக்கும் போல. விந்தி நடக்கிறான்.Dr. அது சரியாகிடும் ஒண்ணும் பண்ண வேண்டாங்குறாங்க. அவன் எங்க ஒரு இடத்தில் இருக்கான். இதில் அந்த கட்டை வேற சிரிச்சிக்கிட்டே கழத்துறான். ஏன்டா இப்படி பண்ணுறேன்னு நான் அழுதா அவனும் நக்கலா அழுகுறான். எனக்கு கண்ணை மூடினாலே அவன் விழுந்தது தான் நியாபகத்துக்கு வருது. துளி தூக்கமில்லை எனக்கு.

இமா என் அம்மாவுக்கு இப்போ கன்னத்தில் ஒரு பரு இருந்து ஆஃபரேஷன் பண்ணி ரெண்டு தையல் போட்டாங்க. ஆனா ஒரு 3 மாசத்தில் தழும்பு மறஞ்சிடுச்சு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தையல் பிரிக்கிற வரை இவன் அதை நோண்டாம இருக்கனுமேன்னு.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்