அன்பாக பேசலாம் வாங்க!!!

இங்க வாங்க... தோழிகள் அன்பு மழையில் நேரம் போவதே தெரியாது!!! டீ கொடுக்கும் தேவி கூட வருவாங்க.

இங்கே தொடருங்க அரட்டையை!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா, எப்படி இருக்கீங்க? அறுசுவையே களை கட்டியிருக்கு,.. என்னை ஞாபகம் இருக்கா? யாருக்கும் என்னைத்தான் தெரியாது. எல்லோருக்கும் ஒரு ஹலோ........

மற்றவர்களுக்கு தெரியலன்னாலும் எங்களுக்கு தெரியுமே!!! நலமாக இருக்கீங்களா? எங்கே அறுசுவை பக்கமே வருவதில்லையோ!!! பாபு அண்ணா வந்துட்டாரில்ல... அதான் அறுசுவை ஜகஜோதியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைத்து தோழிகளுக்கும் என் காலை வணக்கம்.
ஹாய் மாலி எப்படி இருக்கீங்க? எனக்கு உங்களை பற்றி தெரியாது? சொல்லுங்கள் நீங்கள் எந்த ஊர்.
ஹாய் வனி என்ன பண்றீங்க நேற்று நான் போட்ட பதிவுக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை.
கல்ப்ஸ் ஸ்ரீ யாழி சுகன் சுகி காற்று தேவி தீபா அஸ் உமா ஸ்வர்ண யோகா மற்றும் நம் அனைத்து தோழிகளும் வாருங்கள்.
பட்டி இன்னும் ஆரம்பிக்கவில்லை. நடுவருக்கு ஆள் தேவை என்று சொல்லிக்கொண்டே இருகின்றார்கள். சீக்கிரம் வாருங்கள் தோழி தோழர்களே!
ரேணுகா நீங்கள் பட்டில் கலக்கோ கலக்குன்னு கலக்க என் வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பட்டித்தலைப்பை பார்த்திங்களா.. பார்த்ததும் உங்களை தான் நினைத்தேன்.. சீக்கிரம் நைஸா வந்து ( என்னோட அணிக்கு ) மாம்பழத்தை பத்தி சொல்லுங்க..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீட்டிங் நடக்குது நடுவர் கண்டுபிடித்துவிட்டார்..........
பட்டிக்கு வெளியே அணி சேர்க்கிறார்கள்ப்பா...........
எதிர் அணியிணர் விழித்துக் கொள்ளுங்கள்........
யார் அங்கே..........?அணி சேர்க்கும் தோழிக்கு தண்டணையாக ஒருமூட்டை மாம்பழங்களை அனுப்பிவையுங்கள்..........

ரேவதி உங்க பேச்சு கா .. என்ன மட்டும் நீங்க விட்டுட்டீங்க. பிடிங்க உங்களுக்கு ஒரு அபராதம் நான் போட்ட பில்டர் காபி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

இன்று அரட்டைக்கு தடாப்பா............தெரியாதா...........?
அனைவரும் பட்டியில் இருக்காங்க..........நீங்களும் வாங்க........

ஐயோ மஞ்சு கோவித்து கொள்ளாதீர்கள் நான் சில பேர் விட்டு விட்டேன் என்றுதான் அனைத்து தோழிகள் என்று கொடுத்திருந்தேன். என்ன கொஞ்ச நாளாக ஆளையே காணவில்லை. வந்ததுதான் வந்தீங்க பட்டிக்கு ஒரு பதிவு போடுங்க. அபராதமா காபியா எனக்கு ரொம்ப பிடிக்குமே?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேணு இது ஓவர். உங்க பட்டிக்கு அரட்டைக்கே தடையா? இதை நான் ஒரு காலும் அனுமதிக்க மாட்டேன். அரட்டையும் இருக்கும் பட்டியும் இருக்கும். ரேணு நீங்க கவலை படாதீங்க இங்க வரவங்கள நான் பட்டிக்கு தள்ளி விட்டுறேன். (பட்டிக்கு பதிவு போடா என்னலாம் பண்ண வேண்டி இருக்கு)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்