இந்த பட்டிமன்றத்தில் உங்களுக்கான தலைப்பு......இதோ..........
***முக்கனிகளில் சிறந்தது எது? மாவா........?பலாவா.......?வாழையா.....?***
நாம் இதுவரை எத்தனையோ வகையான கனிகளை சுவைத்திருப்போம்.ஆனால் முக்கனிகள் என்று வருணிக்கப்படுவது மா,பலா,வாழை..... இம்மூன்றில் எதில் மணம்,சுவை,திடம்,ஆரோக்யம் நிறைந்து சிறந்த கனி என்று பெயர் வாங்கப் போகிறது என்றுதான் நாம்(நீங்கள்)விவாதிக்க இருக்கிறோம்...........
சிறப்பான வாதங்களையும் பயனுள்ள தகவல்களையும் எடுத்து வைக்கும் தோழர்,தோழிகளுக்கு முக்கனிகளும் அனுப்பிவைக்கப்படும்(வனியால்)என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்......
மண்னின் தோழரும் வாதத்திற்கு வருவாறென நம்புகிறேன்....
மற்ற அனைத்து தோழிகளுக்கும் அழைப்புவிடுக்கிறேன்.....
வாருங்கள்.....
வாதத்தைத் துவங்குங்கள்.......
விறுவிறுப்பாக............ (நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.....)
அறுசுவையில் முக்கிய இழையாக சென்றுக் கொண்டிருக்கும் தலைப்பும் மற்றும் நம் தோழி கல்பனா கொடுத்த தலைப்பை எடுத்துள்ளேன்..
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)
நடுவருக்கு வாழ்த்துக்கள் !!!
பட்டியை எடுத்து நடத்தும் புது நடுவர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
காலத்திற்கு ஏற்ற தலைப்பு. இந்த சீசன் ல இந்த மூணு கனியும் கிடைக்குது, ஆகையால் விரைவில் எந்த பக்கம் என்று முடிவு பண்ணீட்டு வருகிறேன். வாழ்த்துக்கள் நடுவரே!!!
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நடுவரே
நல்ல ஒரு சுவையான தலைப்பு.
மூன்றுலும் சிறந்தது.. மணமான, சுவையான, திடமான சத்தான மாம்பழமே தான்.. .. வாதத்துடன் வருகிறேன்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
பட்டியில் முதலாக
பட்டியில் முதலாக பதிவிட்ட சுகிக்கு வாழ்த்துக்கள் மற்றும் முக்கனிகளிலும் ஒன்றொன்று அனுப்பிவைக்கப்படுகிறது.......
இன்னும் நிறைய தோழிகள்,தோழர்கள் வாதத்திற்கு வாருங்கள் பழம் தருவார் நடுவர்(வனி சார்பாக,எப்படியெல்லாம் பட்டிக்கு ஆள்பிடிக்க வேண்டியுள்ளது.....)
அட வாங்கப்பா வாதங்களோட........
அடுத்த அணி
வாங்க ரம்யா மாம்பழ அணியா நீங்க வாழ்த்துக்கள்........
அடுத்த அணி தயாராப்பா....?
எனது வோட்டு
வந்தேன் வந்தேன் நானும் மீண்டும் வந்தேன். ரொம்ப நாஆஆஆஆளைக்கு அப்புறமா பட்டியில் கலந்துக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு :))
ஆபத்பாந்தவியாக வந்து பட்டியை தடங்கலல் இல்லாமல் தொடர்ந்து செல்ல உதவிய நடுவருக்கு அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்.
எனது வோட்டு மாம்பழத்துக்கே! ஏய் ஸ்டாப் ஸ்டாப் நோ அரசியல். ஹி ஹி நான் மாம்பழமே சிறந்ததுன்னு சொல்ல வந்தேன் :)). கொஞ்ச நேரத்தில் மாம்பழங்களோடு ஹி ஹி வாதங்கலோடு வருகிறேன்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அடுத்த போட்டி அணி எங்கே......?எங்கே.....?
வாழ்த்துக்கள் கவிசிவா.....நானும் ரொம்பநாள் கழித்து உங்களுடன் பேசுகிறேன்.....வாதங்களுடன் வாருங்கள்..
மாம்பழ அணி வலுக்கிறதுப்பா.....அடுத்த போட்டி அணி எங்கே.......?எங்கே.....?
அன்பான நடுவரே வணக்கம்
அன்பான நடுவரே வணக்கம். உங்கள் பட்டி கலை கட்ட வாழ்த்துக்கள்.
என்ன கொடுமை நடுவரே இது. இந்த தலைப்பு ரொம்ப கஷ்டம் எனக்கு. முக்கனி மா பல வாழை இந்த மூன்று பழங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எது சிறந்தது என்று சொல்வது கஷ்டம். இருந்தாலும் நான் இல்லாம பட்டியா இருக்கவே முடியாது. கடைசி பட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் கண்டிப்பாக நான் இருப்பேன். இந்த மூன்றில் ஒன்றை தேர்தெடுத்து வருகிறேன். அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
மாம்பழமே
நடுவரே...
1. மாம்பழம் யம்மியான ஒரு பழம். ;) ருஸியான சேலத்து மாம்பழம்னா நாக்குல எச்சி ஊறும்.. அதற்கு இணையான பழமே கிடையாது.
2.மாம்பழத்துக்குனு ஒரு வாசம் இருக்கே.. அப்பப்பா என்ன சொல்றது.ஃப்ரூட்டினு ஒரு ட்ரிங்க். பெரிய அளவில் மக்களால் ஈர்க்கப்பட்டதன் காரணம் மாம்பழ சாறே..
3.மாம்பழம்,பிஞ்சு மாங்காய், மாங்காய்னு எல்லாமே தனித்தனி சுவையை கொடுக்கும் திடமான ஒரு பழம்.வேணும்னா புள்ளதாச்சி புள்ளய கேட்டுப் பாருங்க
4. மாங்காய் ஊறுகாய், தயிர் சாதம் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
5. ஒரு வீட்டுல விஷேசம்னா கூடா மாவிலை கட்டறோம்.. இலைக்கும் கூட அத்தனை மனம் நடுவரே
6.இதயத்திற்கு,மனதிற்கு என உற்சாகம் கொடுக்கக் கூடிய பழம். விட்டமின், சோடியம், பாஸ்பரஸ்னு தேவையான அத்தனை சத்துக்களும் இருக்கு.
7. மரமே அத்தனை அழகு.. நிழல் தரக் கூடிய, நம் சந்ததியினரும் பயன்பெறும் வழியில் இருக்கக் கூடிய மரம்.
8.கடவுளின் உணவு எனக் கூற கேட்டு இருக்கிறேன். அழகான பிள்ளையார் கதையும், பழனி எனும் புன்னிய ஸ்தலமும் உருவாக காரணமான பழம்..;)
9. அத்தனை எதுக்கு ஒரு பொன்னு மெஹந்தி போட்டாவோ, அல்லது அவக் கிட்ட இருக்க ட்ரஸ்ல ஒன்னோ இந்த மாம்பழ சிம்பள்ள தான் இருக்கும் ;)
10. பழங்களின் அரசினு பேரு பெற்றது மா..
இத்தனை ஏன், மா, பலா வாழைனு , முதலில் இடம் பிடித்த மாம்பழமே சிறந்தது நடுவரே.
மீண்டும் வருவேன்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
மற்ற பழங்களை என்ன செய்வது ...?!
மாம்பழத்தின் சிறப்பாக சிலவற்றை ரம்யா ரம்மியமாக கூறிவிட்டார்.........மற்ற பழங்களை என்ன செய்வது ...?!
பலா பழத்திற்கு ஈடேது !!!!
நடுவர் அவர்களே, ஆயிரம் பழம் இருந்தாலும் நம்ம பலா பழம் மாதிரி வருமா?
நினைச்சாலே நாக்கில் எச்சை ஊற கூடிய பழமுங்க, பயங்கர யம்மி.
அது மரத்தில் இருக்கும் போதே வாசனை, ரோடு ல போறவங்களையும் இழுக்குமே.... அதோட கலர் அதன் தனி சிறப்பு, பலா பழத்தில் செய்ய கூடிய உணவு ல இருக்க டேஸ்ட் வேற எதுல கிடைக்கும் சொல்லுங்க? அதுல செய்ய கூடிய பிரதமன் அடேகப்பா நாக்குல சப்பு கொட்ட வைக்குமே. இன்னும் வாதங்களுடன் வருகிறேன்.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***