டாக்டர்கள், நர்ஸ்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

தோழிகளே எனக்கு நேர்ந்த ஒரு மிகவும் மோசமான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. கடந்த ஒரு வாரமாக என் இரண்டு வயது மகனுக்கு சளி மற்றும் ஜுரத்தால் உடல் நிலை சரி இல்லை, முகம் வீங்கி கழுத்து மற்றும் காதின் பின் புறம் நெறி கட்டி இருந்தது.. நாங்கள் வழக்கமாக காண்பிக்கும் டாக்டர் என் மகனை பரிசோதித்து விட்டு பயப்பட வேண்டாம் சளியினால் முகம் வீங்கி நெறி கட்டி இருக்கிறது, ஒரு வாரம் அவர் கொடுக்கும் மருந்தினை கொடுத்து பின்பு கூட்டி வரும் படி கூறினார். நான் தொடர்ச்சியாக மருந்து ஐந்து நாட்கள் கொடுத்ததும் குழந்தை உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சளி ஜூரம், முக வீக்கம் எதுவுமே குறைய வில்லை.. எங்கள் மருத்துவர் ஊரில் இல்லாததால், எங்களுக்கு தெரிந்தவர்கள் சிலர் அவர்களுக்கு தெரிந்த மற்றொரு மருத்துவரிடம் செல்லும்படி கூறினர். நாங்களும் வேறு வழி இல்லாமல் அந்த மருத்துவரிடம் சென்றோம். அவர் என் குழந்தையை பரிசோதித்து கூட பார்க்காமல், மகனின் முகத்தை மட்டும் பார்த்து இந்த கேஸ் உடனே அட்மிட் பண்ணனும் என்றார். நான் உடனே பதறி என்ன என்று கேட்பதற்குள், உங்கள் குழந்தையின் சிறுநீரகம் பாதிப்பு அடைந்து இருக்கிறது அதான் முகம் வீங்கி இருக்கிறது என்றார். எனக்கு தலையை சுற்ற ஆரம்பித்து விட்டது, சமாளித்து கொண்டு இல்லை டாக்டர் இவனுக்கு சளியினால் இப்படி இருக்கிறது என்றேன், அதற்க்கு அவர் நீங்கள் மருத்துவரா இல்லை நானா, உடனே நிறைய பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட லாபிர்க்கு நிறைய டெஸ்ட் எழுதி கொடுத்து, குழந்தைக்கு எதுவும் ஆகாமல் பிழைக்க வேண்டி கொள்ளுங்கள் என்றார்.. எனக்கோ ஸ்தபித்த நிலை, ஆண்டவா என்று அழ கூட திராணி இல்லாமல் அவர் கூறிய லாபிர்க்கு சென்று அனைத்து டெஸ்டும் எடுத்து முடித்தோம், ரிசல்ட் வருவதற்குள் நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை, ரிசல்ட் எல்லாம் நார்மல் என்று வந்த பின் தான் எங்களுக்கு உயிரே வந்தது.. ரிசல்ட் வருவதற்காக நாங்கள் வெயிட் செய்த அந்த ஆறு மணி நேரம் நரக வேதனை, வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை.. ரிசல்ட்டை அந்த டாக்டரிடம் கொண்டு சென்றால் அவர் முகத்தை கடு கடு என்று வைத்து கொண்டு எல்லாம் நார்மல்லா, சரி ஒரு ஊசி போட்ட எல்லாம் சரி ஆகி விடும் என்று நர்சை ஊசி போடா சொன்னார், அந்த நர்ஸ் அந்த டாக்டரை விட மகா சிடு மூஞ்சி, நான் குழந்தையை சரியாக பிடிபதர்க்குள் ஊசியை போட்டு விட்டார், என் குழந்தை வலியால் திமிறி அவர் குத்திய ஊசி வளைந்து விட்டது, வலியால் துடிக்கும் என் மகனை சமாதானம் செய்வதா இல்லை தவறாக ஊசி குத்திய அந்த நர்சை கடிந்து கொள்வதா? ஏன் இப்படி அவசர படுகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் ஒருவர் தான் எங்களுக்கு பேஷண்ட்டா எவ்ளோ பேர் நாங்க பார்க்கணும் கிளம்புங்க என்றாரே பார்க்கலாம்... காலையில் இருந்து ஏற்பட்ட மன உளைச்சலால் அவர்களிடம் கோப பட கூட முடியாத சோர்வில் அங்கிருந்து கிளம்பினோம்.. இத்தனைக்கும் அந்த மருத்துவர் ஒரு நோயாளியை மூன்று நிமிடம் கூட பார்பதில்லை, அவர்கள் கிளம்புவதற்குள் அடுத்த நோயாளியை வர சொல்லிவிடுகிறார்... மருத்துவம் எவ்வளவு புனிதமான தொழில், கடவுளுக்கு அடுத்த படியாக நாம் நம்புவது மருத்துவரை தான், அத்தகைய உயர்வான பணியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.. வசதியற்றவர்கள் செல்லும் இலவச மருத்துவமனையில் தான் இத்தகைய கேவலமான நடவடிக்கைகள் நடக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் ஒரு கன்சல்டறேஷன்நிற்க்கு 200 ருபாய் வாங்கும் இத்தகைய கிளினிக்களிலும் இவ்வாறு நடத்த படுவதை என்ன வென்று சொல்வது? மருத்துவம் முழு வியாபாரம் ஆகி விட்ட இந்த காலத்தில் நிறைய டாக்டர்களும் நர்சல்களும் இவ்வாறு தான் நடந்து கொள்கின்றனர்.. சேவை என்று இருந்த இந்த தொழில் அடியோடு மாறி ஒவ்வொரு நொடிக்கும் பணம் பணம் என்ற நிலை ஆகி விட்டது...

நான் இப்போதுதான் இங்கு வந்தேன் பலமாதங்களுக்கு பிறகு ....வந்தவுடனேயே உன்னைத்தான் பார்க்கிறேன்....மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது...நீ உனது டாக்டரின் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் ...அவர் இல்லாதபோது யாரை அணுகுவது என்பதையும் கேட்டு வைத்து கொள்ளவேணும்....நான் எனக்கு அப்படித்தான் செய்தேன் இப்பொது....கண்ட டாக்டரையும்...அணுகாதே குழந்தைக்காக....பாவம் குழந்தைகள்...நாமும்...கஷ்டமாக உள்ளது இதை படிக்கும்போதே ...தம்பி நல்லா இருக்கான்னா இப்போது...கலங்காதே...கவனமாய் இரு..நலமாவான்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்க பதிவை படிச்சு வருத்தமா இருந்தது. இது போல் நிலையில் நான் பல முறை இருந்திருக்கேன்... அழுகையே வந்துடும். அதெல்லாம் விடுங்க... எல்லாம் நல்லதுக்குன்னு மனசை சமாதானம் பண்ணிக்க வேண்டியது தான். இப்போ மகனுக்கு எப்படி இருக்கு? நலமா இருக்கானா? எப்பவுமே அவசர அவசரமா டாக்டரை பார்க்க கூடாது. கொஞ்சம் காத்திருந்து சரியான மருத்துவரை பார்ப்பதே நல்லது. அவங்க கிட்ட நம்ம பயத்தையும் அதிகமா காட்டிக்க கூடாது. இதுவே அவங்க பணம் பார்க்க சரியான ஆள் நாமன்னு முடிவெடுக்க வைக்கும். கவலை வேண்டாம்... மகன் சரியாயிடுவான். அவனுக்காக நாங்க பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இருக்க டா? அம்லு எப்படி இருக்கான்? த்ரிஷிக்கு இன்னும் அப்படியே தான் இருக்கு டா, உன் ஆறுதலுக்கும் ரொம்ப நன்றி.. நாங்கள் சென்ற டாக்டர் பல ஆண்டு காலம் அந்த பகுதியில் உள்ளவர் தான், அனுபவம் வாய்ந்தவர் வயது ஐம்பதுக்கு மேல், பலர் கை ராசி காரர் என்று கூறியதால் சென்று மாடிகொண்டோம்..

கேட்கவே பயமாக ஆத்திரமாக இருக்கு...வெளிநாடுகளில் நம்மூர் மருத்துவர்கள் அளவுக்கு திறமைசாலிகள் இல்லை இருந்தாலும் கஸ்டமர் சர்வீஸ் என்ற ஒன்றுக்கு மதிப்பு கொடுத்து மருத்துவமனை முதல் மிட்டாய்கடை வரை முகம் கோனாமல் நடந்துகொள்ள முயற்சிப்பார்கள்..நம்மூரில் என்னவோ எல்லோருக்கும் கொம்பு முளைத்தது போல் காட்டிக் கொள்வார்கள்..மருத்துவமனையில் கூத்து சொல்லவே வேண்டாம்.எனக்கு ஊருக்கு போனால் எங்குமே போகவே விருப்பமே இல்லை..குழந்தைகளுக்கு எதாவது வந்தாலே பயமாக இருக்கும்.
உதாரணத்திற்கு என்ன மருந்து கொடுத்தீர்கள் என்று தான் இங்கு முதலில் கேட்பார்கள்..சொன்னால் குறித்துக் கொள்வார்கள்..ஊரில் இந்த கேள்விக்கு வேலையே இல்லை எதாவது கொடுத்தோம் என்றோம் சுட்டு பொடுக்கிடுவாங்க.
ரெயில்வே ஸ்டேஷன் முதல் மருத்துவமனை பலசரக்கு கடைகள் வரை எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஸ்டான்டர்டுக்கு வந்தால் தான் இதெல்லாம் மாறும்..
குழந்தைகளுக்கு மட்டுமா நாமே ஒரு பிரசவத்திற்காக போனால் எத்தனை கசப்பான அனுபவங்கள்..எல்லாம் நம் விருப்பத்திற்கா செய்கிறார்கள்..அவங்க சொன்னதை நாம வேத வாக்காக எடுத்துக்கனும்..உங்களை போல பலருக்கும் பல கசப்பான சம்பவங்கள் உண்டு.
நடந்ததை மறந்து ஹாஸ்பிடல் எது என்று பார்க்காமல் நல்ல அனுசரனையான மருத்துவரை பாருங்கள்

கேக்கவே கஷ்டமா இருக்கு ஆனா இப்ப சில டாக்டர் இப்படி தான் இருக்காங்க நீங்க இனிமே எப்பவும் ஒரே டாக்டரா பாருங்க அந்த டாக்டர் குழந்தைக்கு அதிக டோஸ் குடுக்க முடியாத காரணத்தால் பார்த்து கொடுத்திருப்பாங்க அப்படின்னு நினைக்கிரேன் பயப்படாம தொடர்ந்து ஒருவரிடமே காட்டவும். சீக்கரமே குணமாகிடும்

அன்புடன்
ஸ்ரீ

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, தலையில் கொம்பு முளைத்தது போல் தான் நடந்து கொள்கிறார்கள். குழந்தைக்கு முதலில் என்ன மருந்து கொடுத்தோம் என்று கூட கேட்பதில்லை, நாம் சொன்னால் கூட அந்த மருந்தை தூக்கி குப்பையில் போடுங்கள் என்று சொல்லி முதலில் மருந்து கொடுத்த மருத்துவரை ஏசுகின்றனர். இப்படி ஒரு மருத்துவர் மற்ற மருத்துவரை பகையாளியாக பார்கின்றனர்.. ம்ம்ம்ம்... எல்லாம் தொழில் போட்டி...

நீ சொல்றது ரொம்ப சரி.. குழந்தைக்கு சரியானால் போதும்ன்னு பழக்கம் இல்லாத வேற டாக்டர பாத்தது மகா தப்பு, என்ன பண்றது பட்டதுக்கு அப்பறம் தான் புத்தி வருது...

தீபா கேட்கவே ரொம்ப கஷ்டமாதான் இருக்கு பயப்படாத்திங்க குழந்தைக்கு ஒன்னும் ஆகாது சீக்கிரம் சரி ஆயிடும் நான் பிராத்தனை பண்ணிக்கிரேன்.

நீங்க சொல்லுவது உண்மை தான் இப்பொது உள்ள டாக்டர்கள் எல்லோரும் அப்படி தான் இருக்காங்க ட்ரீட்மெண்ட்க்கு வருபவர்களிடம் ஆறுதலா இரண்டு வார்த்தை பேசினாலே பாதி நோய் குணம் ஆயிடும். ஆனால் டாக்டர்கள் அப்படி இருப்பதில்லை. அதுவும் சென்னை திருச்சி, கோவை இப்படி பெரும் நகரங்களில் டாக்டர்கள் செய்யும் கொடுமை தாங்க முடியாது. சொன்னாலும் தீராது. பணம் மட்டுமே அவர்கள் குறிக்கோள். நர்ஸ்கள் டாக்டருக்கு மேல இருக்காங்க. என்ன பண்ண அதுகள திருத்தவே முடியாது. எனக்கு ரொம்ப நெருங்கிய தோழிகள் இருவர் உண்டு இருவருமே நர்ஸ் தான் இன்னைக்கு அவர்களிடம் இதை பற்றி சொல்லுகிரேன் நீங்களும் இப்படி இருக்காதிங்கனும் மறக்காம சொல்லுரேன்.

சமீபத்தில் எங்க ஊரிலும் ஒரு செய்தியை கேள்வி பட்டு அதிர்ந்து போனேன். என் பாஸ்க்கு சொந்தகாரர் அவுங்க வீட்டில் ஓரே ஒரு பெண் தான் வேறு யாரும் உடன் பிறப்புகள் இல்லை. அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்து ஒரு பெண் குழந்தை அவளுக்கு 3 வயது நார்மல் டெலிவரிதான். 2 வது கர்ப்பமாக இருந்தார்களாம். அவர்கள் கண்வர் துபாய் ல் வேலைக்கு பார்க்கிரார். அந்த பெண்ணின் மாமியார் மாமனார் இருவருமே மிகவும் பசமா இருப்பார்களாம். 2வது குழ்ந்தை பிறக்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் குழந்தையும் நார்மல் டெலிவரிதான். பிளிடிங் ஓவர் அயிட்டு இருந்ததாம் அந்த பெண்ணின் பெற்றோர்கள் டாக்டரிடம் சொன்ன போது அது சரி ஆயிடும் என்று அலச்சியமா சொல்லி இருக்காங்க. நார்மல் டெலிவரி தான பேசமா போங்கனு சொல்லிட்டாங்களாம். ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பெண்ணின் உயிர் பிரிந்து விட்டது. என்ன கொடுமை பார்த்திர்களா? அந்த குழந்தை பாவம் அவுங்க அம்மாவை அந்த வீட்டை விட்டு எடுத்த 1 மணி நேரத்தில் அந்த குழந்தையும் அவுங்க அம்மாவிடம் போய்விட்டது.

இத கேட்கும் போது நமக்கு எவ்ளோ வேதனையா இருக்கு. இது எல்லாமே டாக்டரி அலச்சியம் தான் காரணம்.

உன்னை போல பிறரையும் நேசி.

உன் பிராத்தனைக்கு ரொம்ப நன்றி டா.. டெஸ்ட் ரிசல்ட் நார்மல்ன்னு வந்தவுடன் நானும் அவரும் கோவில்க்கு போய் பெரிய மாலையை வாங்கி கடவுளுக்கு சாத்தினோம், ரெண்டு பேர் கண்ணுலயும் தண்ணி, நன்றி ஆண்டவான்னு வீடு திரும்பினோம்...

நீ சொல்ற விஷயம் படிக்கும் போதே நெஞ்சை அடைக்குது, எவ்ளோ பெரிய கொடுமை இது? மளிகை சாமான்க்கு இருக்குற மதிப்பு கூட மனித உயிர்க்கு இல்லாம போச்சு இந்த காலத்துல... நமக்கு தான் இந்த உயிர் பலிகள் மாபெரும் இழப்பு ஆனா இந்த மருத்துவ துறைய சேர்ந்தவங்களுக்கு இது ஒரு அன்றாட நிகழ்வு... இவர்களின் இத்தகைய அலட்சியம் எத்தனை எத்தனை உயிர்களை காவு வாங்குகிறது... இதற்கெல்லாம் மிகவும் கடுமையாக தண்டிக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும், அப்பொழுது தான் இத்தகைய கொடுமைகள் தடுக்க படும்..

ஹாய் தீபா,

நீங்க எழுதியிருந்ததைப் படிச்சு ரொம்பக் கவலையாக இருந்தது. நல்ல வேளை, இப்ப குழந்தைக்கு சரியாகிட்டுதுன்னு சொல்லியிருக்கறது சந்தோஷம்.

எங்களுக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டதுன்னு சொன்னாங்க. குழந்தைக்கு சாதாரண காய்ச்சல்னு போனப்ப, ஒரு பிரபல மருத்துவமனையில், ஒரு லட்சம் ரூபாய் கட்ட சொல்லி, என்னென்னவோ டெஸ்ட் எடுத்து, இன்னும் ரொம்ப காம்ப்ளிகேட் ஆக்கிட்டாங்களாம். பிறகு அவங்க நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்குப் போனாங்களாம். அங்கே நல்ல ட்ரீட்மெண்ட் கிடைச்சுதுன்னு சொன்னாங்க

மணிமுத்துமாலை

மேலும் சில பதிவுகள்