சிம்லா,குலு,மணாலி...ஜில்ஜில்....கூல்கூல்......

டிரிப் போய்வந்த நாள்முதல் எழுத நினைத்தது,தோழிகள் கேட்டது.
தொடர் வேளைபளு காரணமாக எழுத் இயலவில்லை.
இன்று எழுத ஆரம்பிக்கிறேன்.........தோழிகள் படித்து மகிழுங்கள்.
கூடவே புது இடங்களுக்கு முதல்முறை பயணப்படும்போது என்னவெல்லாம் தவறு நேர்ந்தது என்றும் கூறுகிறேன்.உங்கள் டிரிப்பில் அவற்றை தவிர்க்கலாமே......

முதல் பயணம்.......
என்ன படத்தின் பெயரோ என யோசித்தீர்களா?இல்லப்பா இதுதான் எனது முதல் டூர்ப்பா அதனாலதான். இதுவரை நான் டூர் போனதில்லை அதுவும் இது 15நாள்,வெகு தூரம்வேறு.அதனால் என் அம்மா,அப்பா என் குட்டிப்பையனை எங்களுடன் அனுப்பவில்லை.
திருமணத்திற்குப் பிறகு நாங்கள் இருப்பது ஊட்டி என்பதால் ஹனிமூனும் போகவில்லை.ஆகவே இந்த டிரிப் எனக்கு ரொம்பவே ஜாலியா இருந்தது(அந்த 15 நாட்களும் என் கணவர் என்னுடனே இருந்தார்).அது இன்னும் ரொம்ப சந்தோஷம்......
எங்களுடன் என் தங்கையும்,அவருடன் வேளைபார்க்கும் இன்னொருவர் குடும்பமும் (4பேர்)வந்திருந்தனர்.நாங்கள் 7பேரும் எங்கள் பயணத்தை இரவு 11.45க்கு கோயம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் துவங்கினோம்........

கோவை T0 டெல்லி :

எங்கள் பயணத்திலே மிக நீண்டதூரப் பயணம் இதுதான்.அந்த மூன்று நாட்களில் முதல்நாள் மட்டும் கஷ்டமா இருந்தது.மற்றவர்களுடன் பழகியதும் சகஜமாகிவிட்டது.(ஒன்னு சொன்னா யாரும் சிரிக்கக்கூடாதுப்பா எனக்கு ரயிலும் புதிது.......கொஞ்சம் பயம் இருந்தது பின்பு சரியாகிவிட்டது.
முதல் நாள் இரவு தூக்கம் வரவில்லை,அடுத்த நாள் பாட்டு விளையாட்டு என்று போனது.மூன்றாம் நாள் வெளியில் வேடிக்கை,சம்பல் பல்லத்தாக்கு மறக்க முடியாது நிறைய போலீஸ் இருந்தாங்க...புகழ்பெற்ற கோட்டைகள்,பெறிய ஆற்றுப் பாலம் அதன்மேல் போகும்போது ரயிலின் சங்கீதமென சென்று ஒருவழியாக டெல்லி சென்றடைந்தோம்...........

டெல்லி T0 கல்கா

அடுத்த பயணம் தொடர்ந்து ஓல்டு டெல்லியிலிருந்து கல்கா....அது இரவில் போனது.....
பானிபட் காரர்கள் (தறானால் மன்னிக்கவும்)பார்க்க பயமாக இருந்தார்கள்.போலீஸ்காரர்களின் எச்சரிக்கைவேறு.ஒருவழியாக 3மணிக்குமேல் தூங்கினேன்(என் கணவர் விழித்ததும், பாதுகாப்பிற்காக).காலை 6மணிக்கு கல்கா ரயில்நிலையம் சென்றோம்........

இந்த இடத்துல உங்க ரயில் பயணம் எப்படி இருந்ததுன்னு யாராவது கேக்கனும்பா......ரேவா நீ கேளேன்,மாமி நீங்க கேளுங்களேன்,தீபா நீ கேளேன், சுகி நீயாவது கேளேன்மா.........
அட யாராவது எப்படியிருந்ததுன்னு கேளுங்களேன்.....

ரேணு நீங்க கேட்பது எனக்கு சிப்பு சிப்பு வருது, இதுலையும் உங்களை கெஞ்ச விட்டுட்டோமே. நான் என்னவென்று நினைத்தேன் என்றால் நீங்கள் உங்கள் அனுபவம் முழுவதும் படித்து விட்டு பதில் சொல்லலாம் என்று இருந்தேன். சரி சரி சொல்லுங்கள் என்னாச்சி?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நான் கேட்கறேன் ரேணுகா எப்படி இருந்துச்சு? கேட்டுட்டேன் ஓகேவா. சரி சொல்லுங்க சாரி தொடருங்க பயணத்த

கல்கா T0 சிம்லா:
கல்காவில் எங்களுக்காக "டாய் ட்ரெயின்" காத்திருந்தது.அதில் மொத்தமே15பேர்தான்.நாங்கள் 7பேர்,வெளி நாட்டவர்8பேர் டிரைவர் ஒரு சிங்,கிளீனர் வேற இருந்தார்ப்பா.........
ஜாலியா இருந்தது,கரமா ஸ்வெட்டர்,ஜர்கின்னு மாட்டிக்கிட்டோம்.போட்டோஸ்,டான்ஸ்,சிரிப்பு,கலாட்டா இதற்கிடையில் ரம்மியமான மலைகளை,ரயில் மற்றும் பேருந்து பாதைகளை,பனிமூட்டங்களை ரசித்து படம்பிடித்தோம்.......
பாதிவழியில் ஒரு ஸ்டேசனில் ரயில் நின்றது ஏதோ பிரச்சனை.அதற்குள் அங்கு இறங்கி ஓட்டம்
குளிர் ரொம்ப இருந்தது.ரயில் ரெடியானதும் மீண்டும் பயணம்,சர்தார்ஜியிடம் ஹிந்தி தெரியாமல் எங்கள் கூடவந்த பையன் பேசியது அவர் பதி கூறியது சிரிக்க வைத்தது...அவனது அப்பா தறாக கற்று கொடுத்து(ஹிந்தியில்) சர்தார் சிரித்து ரசித்தபடி ரயிலை இயக்கினார்.

ஒன்று,பத்தல்ல நூற்றி பன்னிரன்டு(112)குகைகள் கடந்து சிம்லா வந்தோம்.....ஒவ்வொரு குகையினுள்ளும் வரும்போது ஒரே கூச்சல்,கலாட்டாதான் பயணம் கூட கலைப்பு தெரியாமல் சென்றது......மலையில் ரயில் பயணம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. அனைத்து கவலைகள் மன உளைச்சல்கள் அனைத்தும் மறைந்து சந்தோஷம்,மகிழ்ச்சி மட்டுமே மனதில் குடியிருந்தது......

இங்குதான் முதல் பதற்றம் எங்களை தொற்றியது.....

ரேணு, நான் உம்ம்ம் கொட்டுறேன். நீங்க உங்க டூர் அனுபவத்தை தொடருங்க... மத்த பசங்க கேட்டா கேக்குறாங்க கேக்காட்டி போறாங்க. BAD GIRLS ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அப்படிக் கேளுங்க சொல்றேன்..........
நிக்க முடில,நடக்க முடில,படுத்து தூங்க முடியல,எல்லாத்துக்கும் ஒரே ஆட்டம்தான் போங்க.......
அதுவாவது பரவாயில்ல பாத்ரூம்போனாக்கூட ஆடுதுப்பா.......நான் பாவம்ல(ஏய்....ஏய்.சிக்காதீங்க...அடுச்சுப்புடுவேண்..)மேல் சீட்வேற ஏறிபடுக்கறதுக்கு சங்கோஜம்.போகப்போகப் பழகிடுச்சு.....
3நாள்ள ரயில் ரொம்ப பழகிடுத்து போங்க.......

அன்பு ரேணுகா,

சூப்பராக இருக்கு, உங்க பயண அனுபவங்கள்.

சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லிட்டே இருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

ரேணு, சூப்பரா இருக்கு உங்க எழுத்து நடை. படிக்க ரொம்ப நல்லா இருக்கு. நாங்க நடு நடுவெல்லாம் வந்து உ...ங்கொட்டமாட்டோம்ல:) நீங்க கன்டின்யூ பண்ணுங்க.

மேலும் சில பதிவுகள்