பிறந்த குழந்தை கு ஜலதோஷம்...

தோழிகள் அனைவருக்கும் வணக்கம் .
1. கைக்குழந்தை உள்ளான். சிசேரியன். நான் தாய் பால் தருகிறேன்.
என் சந்தேகம் இதுவே,நான் என்ன என்ன உணவு சாப்பிடலாம்? தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன ?
இந்த இழை உள்ளதா என பார்த்தேன், கிடைக்கவில்லை. இன்று அவன் சரியாக மலம் செல்ல வில்லை.
அதன் உடனே புது இழை போட்டு விட்டேன். வாந்தி எடுத்தான் ... நான் சாப்பிட்ட உணவு சரியா தவறா என புரிய வில்லை...

தாய் பால் கொடுபதால், குழந்தைக்கு ஏற்ற ,தவிர்க்க வேண்டிய உணவுகள் சொல்லுகளேன்..

2.தோழிகளே, என் குழந்தை பிறந்து பத்து நாட்கள் ஆகுது. அவனுக்கு சளி பிடிக்க ஆரம்பிக்குது.
டாகடர் கிட்ட கேட்டேன்,, மருந்து எதுவும் தரவில்லை..

அவன் கு அது அதிகமா ஆகாமா எப்படி தவிர்ப்பது.. நான் தாய் பால் தருகிறேன்.அதால நான் கஷாயம் குடித்தேன்..
அது குழந்தை கு சரி பண்ணுமா?

வாழ்த்துக்கள்.
குழந்தை ஒரு வாரக் கைக்குழந்தை என்று கூறியுள்ளீர்கள். குழந்தை ஒரு வாரம் வரை மலம் கழிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு நாளைக்கு ஆறிலிருந்து பத்து தடவையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். அதற்காக குச்சி வைப்பது சுடு நீர் கொடுப்பது என்று எதையும் முயற்சி செய்யாதீர்கள். தாய்ப்பாலிலே எல்லா சத்தும் சரியான விகிதத்தில் உள்ளது தண்ணீர் உட்பட. ஆகையால் குழந்தைக்கு ஆறு மாதம் முடியும் வரை வேறு உணவேதும் தரவேண்டிய அவசியம் இல்லை. இதற்கிடையில் என்றால் மருத்துவர் சொன்னால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
வாந்தி எடுப்பதும் இந்நிலையில் ரொம்பவும் சாதரமான விஷயமே. ஒன்றும் பயப்பட வேண்டாம். நாம் உண்ணும் உணவு அவர்களுக்கு அப்படியே செல்வதில்லை. அதனால் இந்த உணவால் தான் வாந்தி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நிற்காமல் எப்பொழுதும் பால் குடித்த பின்னர் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தால் தான் மருத்துவரிடம் போக வேண்டும்.
எந்த ஒரு உணவையும் தவிர்க்க கூடாது. மீன் சாப்பிடும் போது பார்த்து சாப்பிடுங்கள். அதில் மெர்குரி விகிதம் குறைவாக உள்ள மீனையே உன்ன வேண்டும். ஆல்கஹால் சேர்த்துள்ள உணவை தவிர்க்க வேண்டும். அது இல்லாமால் உங்களின் குடும்பதில் எதாவது உணவில் அலெர்ஜி என்றால் அதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். குழந்தைக்கு பால் கொடுக்க என்று தனியாக சாப்பிட வேண்டாம். நாம் சாப்பிடும் உணவில் அதிகம் நீர் சத்துள்ள இரும்பு சத்துள்ள காய்கறிகளை செர்துக்கொண்டாலே போதும். சரியான விகிதத்தில் புரதமும் சேர்த்துக் கொள்ளவேண்டும். தினமும் 10 கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். அதற்க்கு மேலும் அருந்த கூடாது. இது நாம் சாப்பிட்ட பிறகு அருந்தும் தண்ணீரையும் சேர்த்து.
முக்கியமாக மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் பால் அதிகமாக சுரக்கும்.
இது பற்றி பல இழைகள் உள்ளன. நீங்கள் இருந்தாலும் தளிகாவின் குழந்தை வளர்ப்பு பகுதியை முழுவதுமாக படித்தால் எல்லாம் புரியும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அவன் தினமும் மலம் செல்கிறான்.. இன்று ஒரு தடவை தான் போனான்.. வயிறு உப்பினார் போல இருக்கு.
மேலும் பால் குடிக்க ரொம்ப முரண்டு பண்றான்... வாந்தி ஒரு தடவை எடுத்தான்.
எனக்கு மனசு சரி இல்லை... அவன் எதனால் இன்று இப்படி இருக்கிறான்?
நான் நேற்று தான் முதல் தடவிய சிக்கன் சூப் குடித்தேன் ...
நீங்க சொல்ற மாதிரி உணவை பற்றி கவலை பட வேண்டாமா?

பதில் தாருங்களேன்....

பல தாய் மார்கள் இதற்கு பதில் கொடுப்பார்கள் என நம்பினேன்..

தவிர்க்க வேண்டியவை :noodles அஜினமோட்டோ add பண்ணி இருப்பாய்ங்க ,அது குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கும்....

nee enna agavendum endru ninaikirayo adhuvagavae agirai

குழந்தைகள் பால் குடித்தபின்னர் வயறு அப்படி தான் உப்பி காணப்பபடும். அதனால் கவலை வேண்டாம். அது ரொம்பவும் கல்லு மாதிரி இருந்தால் தான் பிரச்சனை. சில குழந்தைகள் பால் குடிக்க முரண்டு பண்ண தான் செய்யும். அதவும் இயல்பே. அவர்கள் போக்கிலே விட்டு பிடிக்க வேண்டும். சரியாக குடிக்க வில்லையென்றால் விட்டு விட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து கொடுத்துப்பாருங்கள்.
குழந்தை எப்பொழுதுமே பசி என்று ஆரம்பிக்கும் போது பால் புகட்டிவிடவேண்டும். அதவாது அவர்கள் தூக்கத்தில் இருந்து முழிக்காமல் சிணுங்கலோ அல்லது வாயில் விரல் வைத்தாலோ அல்லது நாவால் உதட்டை நக்கினாலோ உடனே தூக்கி பால் கொடுக்க வேண்டும். அவர்கள் அழும் வரை காத்திருக்க கூடாது. இல்லையென்றால் நீங்கள் குழந்தைக்கு ஒரு ஒன்னரை முதல் இரண்டு மணி நேரத்திற்கொரு தடவை பால் கொடுங்கள். ஒரு ஒரு தடவையும் குறைந்தது இருபது நிமிடமாவது கொடுக்க வேண்டும். ஒரு மார்பகத்தில் கொடுத்து முடித்த பின்னர் தான் அடுத்ததை தர வேண்டும். அவர்கள் குடித்துக் கொண்டிருக்கும் பாதியில் பிடுங்கக் கூடாது. அவர்களே விட்டு விடும் போது மறுபடியும் அதே மார்பகத்தை தர வேண்டும். சிறுது நேரத்தில் விட்டு விட்டால் மறுபடியும் தரலாம். இதே மாதிரி மூன்று முறையும் சில வினாடிகளில் விட்டு விட்டால் மறு பக்கம் தரவும்.
இதற்கே மனதை தளரவிட்டால் எப்படி. இது தானே ஆரம்பம். இன்னமும் எவ்வளவு ஆட்டம் காண்பிப்பார்கள். இதெல்லாம் நமக்கு ஒரு சாம்பிள் தான். அவர்கள் செய்யும் ஒவ்வொரு குறும்பையும் ரசிக்க ஆரம்பித்தால் கோவமோ இல்லை கஷ்டமோ தெரியாது.
எனக்கு தெரிந்த வரையில் நான் முன்னமே கூறவாறு சாப்பாட்டில் எந்த தடையும் இல்லை. நீங்கள் எதற்கும் உங்களின் மருத்துவரையும் ஒரு முறை கலந்தாலோசித்து பாருங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி யுவா.... நான் நூடுலஸ் சாப்பிட ஆசை பட்டேன் .. நீங்க சொன்னது மிகவும் நல்லதா போச்சு...

மிக்க நன்றிலாவண்யா.. உங்க வரிகள் எப்படி இவளவு தெளிவா இருக்கு... ரொம்ப நல்லா எழுதுரிக..
இன்று மருத்துவர் சென்று பார்த்தேன்.. அவங்களும் இதான் சொன்னாக..கேட்க மறந்துட்டேன்...

இப்போ வெயில் ஜாஸ்தியா இருக்கு... குழந்தைக்கு நீர் கடுப்பு வராதா? தண்ணீர் தரதில்லை, நிமிர்ந்தே படுகுறான்.
முதுகு எரியாதா??

ரொம்ப நன்றி. அனுபவம் தான் என்னை எழுத வைக்கிறது. நீங்களும் இரண்டு பிள்ளைக்கு பிறகு மற்றவர்களுக்கு உங்களின் அனுபவங்களை சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

நீங்கள் கண்டிப்பாக தனியாக தண்ணீர் தர தேவையே இல்லை. தாய்பாலே போதுமானது. அதில் எல்லா வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

இப்பொழுது குழந்தை படுத்த இடத்தில தான் படுத்திருக்கும் இரண்டாவது மாதத்தில் கொஞ்சம் நகரும் அதுக்கடுத்து தான் சுத்தி சுத்தி வருவார்கள். பின்பு தான் குப்புற விழுறது என்று மெதுவாக தான் செய்வார்கள். நீங்கள் அதற்குள்ளாகவே குழந்தையை எழுந்து நடக்க சொல்வீர்கள் போல இருக்கே :)
நீங்கள் கலிபோர்னியாவில் எங்குள்ளீர்கள்?

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழிகளே, என் குழந்தை பிறந்து பத்து நாட்கள் ஆகுது. அவனுக்கு சளி பிடிக்க ஆரம்பிக்குது.
டாகடர் கிட்ட கேட்டேன்,, மருந்து எதுவும் தரவில்லை..

அவன் கு அது அதிகமா ஆகாமா எப்படி தவிர்ப்பது.. நான் தாய் பால் தருகிறேன்.அதால நான் கஷாயம் குடித்தேன்..
அது குழந்தை கு சரி பண்ணுமா?

மேலும் சில பதிவுகள்