கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

ஆமா வனிதா குட்டீஸ கஷ்டப்பட்டு தூங்க வச்சிட்டு இங்க வந்தா நாம தூங்கவேண்டியதுதான் போல. ம்ம் வேறென்ன சங்கதிகள் சொல்லுங்க உங்க சின்னப்பாப்பாக்கு எத்தன வயது.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் ஹாய் ஹாய் நானும் வந்துட்டேன். யார் யார்கெல்லாம் டீ வேணும் எல்லொரும் வரிசையா வாங்க. டீ ரெடி தோழிஸ்

உன்னை போல பிறரையும் நேசி.

ஐயோ இந்த அறுசுவை ஓபன் ஆகவில்லை! என்ன ஆச்சி என்ன ஆச்சி அட்மின் அண்ணா என்ன ப்ரோப்லேம்

ஹாய் காற்று நலமாக உள்ளேன். ஏன் நீங்கள் வருவது கிடையாது. பிள்ளைகள் எல்லாம் நலமா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தேவி உங்க வருகையைத்தான் எதிர்ப்பார்த்துட்டும் இருக்கேன்/ ஏன் லேட் பிஸியா? ஆ டீ வேண்டாம்பா கூலா ஜுஸ் குடிங்க ஜில்லினு இறங்கும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ரேவதி பிள்ளைகளுக்கு சுகமில்லாமல் இருந்தது அதனால் தான் வரமுடியல்ல இப்போநல்லம்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

என்ன ஆச்சி பிள்ளைகளுக்கு! ஹோச்பிடல் கூட்டிகிட்டு போனீங்களா? இப்போ எப்படி இருகாங்க?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் பூ, எப்படி இருக்கிங்க. குட்டிஸ் எல்லோரும் எப்படி இருக்காங்க. இந்தாங்க இந்தாங்க ஜூஸ் நல்லா குடிங்க |_|> நல்ல ஜில்லுனு இருக்கும் குடிங்க .;)

உன்னை போல பிறரையும் நேசி.

என் பேர் ப்ரீத்தி ..
ரொம்ப நாளா அறுசுவைல சைலண்ட் மெம்பர் ..
இன்னிக்கு நீங்க எல்லாம் பேசறத படிச்சிட்டு எனக்கும் உங்க எல்லார்க்கிட்டையும் பேசணும்ன்னு ஆசை ஆகிடுச்சு.. :)

யாரவது இருக்கீங்களா..

அன்புடன்
ப்ரீத்தி வசந்த்

வலி விலகியதை அனுபவி . பிரச்சினை தீர்ந்த பின் பாடல்கள் இனிக்கும் . :)

வாங்க ப்ரீத்தி வாங்க. ஏன் இவ்வளவு நாள் அமைதியா இருக்கீங்க? வந்து எங்களோடு ஐக்கியமாகுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய்... ப்ரீத்தி, ரேவதி.... நலமா? நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்... கொஞ்சம் நேரம் விட்டு மீண்டும் வரேன். :) அதுவரை நீங்க பேசுங்க.

பூங்காற்று வரலயா இன்னைக்கு?

டீ கடை சாயந்திரம் தான் வரும்.

காங்கோ காணோம்.... மீண்டும் தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம் எல்லாம் தருவதாக சொன்னா தான் தலையை காட்டுவாங்க.

நம்ம குட்டி தலை இம்முறை பட்டிக்கு வந்தாங்களா??? யாராவது குட்டி தலையை பார்த்தா கூட்டி வாங்க.

நம்ம சீதாலஷ்மி பேத்தி கூட பிசி... வந்த ஒரு பதிவு போடுங்க தோஸ்த்.

ரம்யா மேடம்.... சாப்பிடவே நேரமில்லை... எங்கிருந்து பதிவு போடங்கறீங்களா??? வாங்க மேடம்.

இமா... கை வலி எல்லாம் எப்படி இருக்கு... செபா ஆண்ட்டி நலமா? நீங்க இல்லாம போர் அடிக்குது :(

சுகி... மேடம் ரொம்ப பிசி... இருந்தாலும் எங்ககிட்ட கொஞ்சம் பேசலாம். வந்தா ஒளிஞ்சு பார்க்காம பிள்ளை சமத்தா பதிவு போடும்பா. ;) அப்படி தானே சுகி???

சுமி... ஆளை ரொம்ப நாளா இந்த பக்கம் காணோம்?? காங்கோக்கு பயந்து வரலயோ??? வாங்கோ சுமி... காங்கோ ஜூஸ் குடுக்காம நாங்க பார்த்துக்கறோம். ;)

வினோ... கொஞ்ச நாள் அதிசயமா அரட்டை பக்கம் வந்தங்க... இப்போலாம் காணோம்?? என்னாச்சு வினோ... வாங்க.

யாழ்... என்ன இவ்வளவு நேரமா காணோம்??? பிசியா வேலை??

மற்ரவங்க எல்லாம் ஒவ்வொருத்தரா கூப்பிடனும்னு வெயிட் பண்ணாம, சமத்தா வந்து பதிவு போடுங்க... இன்னைக்கு பகலில் வருபவருக்கெல்லாம் நம்ம ரேவதி ரோஸ் மில்க் கொடுப்பாங்க. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்