மாதவிடாய்கு முந்தய வலி

எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. திருமணத்திற்கு முன்பு எனக்கு periods ஆன முதல் மூன்று நாட்கள் இடுப்பு மற்றும் தொடை வலி இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின்பு periods ஆன ஆறாவது நாள் முதல் 10வது நாள் வரை இடுப்பு , தொடை வலி உள்ளது. திரும்பவும் 14வது நாள் முதல் 16வது நாள் வரை வலி உள்ளது. மருபடியும் 22வது நாள் முதல் ஆகும் நாள் வரை இந்த வலி உள்ளது. நான் என்ன செய்வது

என் தங்கை மகளுக்கு பூப்பெய்தியதில் இருந்து பிரச்னைதான். ஒன்று நிற்காமல் தொடர்கிறது. அல்லது வராமலே இருக்கிறது. தொடர்ந்து இருப்பதால் சில சமயம் மயக்கம் வந்துவிடுகிறது. என்ன செய்வது. ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே.

தோழீஸ்......... நான் பூப்பெய்திய காலத்திலும் இந்த பிரச்சனை இருந்தது. எங்க ஆச்சியின் ஆலோசனைப்படி பீரியட் வரும் நாளில் காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி, நான்கு சின்ன வெங்காயம் , சீரகம், மூன்று பூண்டு பல் போட்டு சூப் வைத்து குடித்தால் வலி குறையும். தொடர்ந்து 5 நாள் குடிக்கனும். மறுபடி அடுத்த பீரியட் வரும் போது இப்படி சூப் குடிக்கணும். கொஞ்ச நாளில் Mஉற்றிலும் குணமாகி வலியிருக்காது.

பொதுவாக இரும்புசத்து உள்ள உணவு அதிகமா சாப்பிடனும்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்