plss help me????dubail very hot climate குழந்தைய எப்படி கவனித்துகொள்ள வேண்டும்...??

என் கணவர் துபாயில் வேலை பர்த்து வருகிறார்.நனும் என் (7 month baby)குழந்தையும் அடுத்த மாதம் துபாய் செல்கிறோம்...துபாயில் very hot climate....நான் குழந்தைய hot climateil எப்படி கவனமாக வைத்திருக்க வேண்டும்....என் குழந்தைக்கு அடிக்கடி....சளி பிடிக்கும் ,கச்சலும் வரும்......ரூம்ல இருந்துட்டு வெலிய போகலாமா........plss dubail very hot climate குழந்தைய எப்படி கவனித்துகொள்ள வேண்டும்...??????????

இங்கு பெருசா ப்ரச்சனை இல்லை..வீட்டுக்குள் ஏ சி தானே வெளியில் உச்சி வெயிலில் அதிகம் யாரும் வெளியில் போவதில்லை..அப்படியேபோனாலும் ஹேட் வைத்துக் கொண்டுன் சன் க்லாஸ் போட்டுக் கொண்டும் போகலாம்..குழந்தைக்கு நிறைய தண்ணி பழவகைகள் கொடுக்கனும்.
வீட்டில் முடிந்தால் ஒரு ஏர் பியூரிஃபயர் வாங்கி வச்சுடுங்க.மத்தபடி பெரிசா ப்ரச்சனை இருக்காது.சிக்கன் பாக்ஸ் வேக்சின் போட்டுக்குங்க

நம் ஊர் போல் இங்கே குழந்தையை தூக்கொண்டு யாரும் வெளியே சுற்றமாட்டார்கள். அப்படியே வெளியே சென்றாலும், சூப்பர்மார்கெட், ஷாப்பிங்செண்டர் இப்படித்தான் செல்வார்கள். அது போல் உள்ள இடங்களில் ஏசி இருப்பதால் கவலையில்லை. சூட்டைப்பற்றி கவலைவேண்டாம். சந்தோஷமாகவே இருக்கலாம்.

மிக்க நன்றி தாளிகா medam...& kannan sir..இப்போது குழந்தைக்கு 8 மாதம் நடக்கிறது....நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன்....பேபிக்கு 9 மாதத்தில் delhi யில் measles vaccine போட்ட பிறகு.....dubail சென்று flu vaccine குழ்ந்தைக்கு போடலாமா...குழ்ந்தைக்கு அடிக்கடி fever வரதால நான் flu vaccine போடலனு நினைக்குறேன்.....அப்புறம் மேடம்.....போலியோ drops துபாயில் எப்படி போடுறது.............??

jesus christ

ஹாய் வந்தனா ,
நீங்கள் குழந்தைக்கு ஊரில் போடும் vaccination கார்டை இங்கு மறக்காமல் எடுத்து வரவும். அதனை இங்கு உள்ள டாக்டர்ரிடம் கட்டினால்
அதற்கு பதில் இங்கு உள்ள கார்டை கொடுப்பார்கள் அதன் படி ஊசிகள் போடலாம். அதிகம் மாற்றம் இருக்காது அங்கு நாம் போடுவது போல் தான் இங்கும் உள்ளது. 9th month நாம் போடும் மீச்லஸ் மட்டும் இல்லை. polio drops எல்லாம் உண்டு. குழந்தைகளுக்கு spl care எடுத்து பார்ப்பார்கள் கவலையே வேண்டாம்

hai,ponshiv madam.......நீங்க துபாயில் இருக்கிங்களா...?thank u for your suggestion....

jesus christ

என் குழந்தைக்கு 8 மாதம் நடக்கிறது.....அவள் தாய்பால் தவிர வேர எதையுமே சாப்பிட மாட்டேன்ங்கிராள்...1 மாதமா 1 or 2 spoon கொஞ்ஜம் cerelac சாப்டா....இப்பொ 1 weeka குழ்ந்தைக்கு fever but ippa ok...என்கிட்ட பால் குறைவாக இருக்கிரது....குழ்ந்தைக்கு வயிறு பத்தாம ரொம்ப அழரா......bottle பால் கொடுத்து try பன்றேன்....அவள் உடனே vomit பண்ணிடுறாள்...?..அப்படி இல்லாட்டி பயங்ரமா...அழரா....அப்போ அவலுக்கு முச்சு தெனறி நிக்கிர மதிரி இருக்கு.....so குழந்தைக்கு இப்போ சாப்பிட தரவே கொஞ்சம் பயமா இருக்கு.....அப்புறம் குழந்தைக்கு...இப்பொ fevver இல்ல....but ippa 2 dayssa...urine கொஞ்ச்ம் முக்கி முக்கி சொட்டு சொட்டா விடுகிறாள்....docter infection இருக்குனு சொன்னார்....வீட்ல பெரியவங்க...எல்லோரும்.....சுடு பிடுச்சு இருக்குனு சொல்டறாங்க...?குழந்தைக்கு சுடு பிடுச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும்.....என் குழன்தைய நினைத்து மிகவும் கஷ்டமக இருக்கிரது.....????????

jesus christ

ஹாய் வந்தனா,

சின்ன காட்டன் துணி(வெள்ளைத் துணி) எடுத்து, தண்ணீரில் நனைத்து, குழந்தையின் தொப்புள் மேல் போட்டு வைங்க. நல்லா யூரின் போகும்.

காய்ச்சல் தொந்தரவு இல்லதானே? தலைக்கு தேங்காய் எண்ணெய் தேச்சு விடுங்க. சூடு தணியும். (கொஞ்சமாக ட்ரை பண்ணிப் பாருங்க)

8 மாசம் ஆகிடுச்சு இல்லயா, காரட் வேக வைத்த சூப், பருப்பு வேக வைத்த தண்ணீர், இட்லி, பருப்பு, நெய் சேர்த்த சாதம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்துப் பாருங்க. எது கொடுத்தாலும், முதலில் ஒரு ஸ்பூன் கொடுத்துப் பார்த்து, பிறகு அடுத்த நாள் 2 ஸ்பூன் கொடுக்கலாம்.

குழந்தைகிட்ட, விளையாட்டு காமிச்சு, பேசி, ஊட்டி விடுங்க. 8 மாச குழந்தையாக இருந்தாலும், நாம இதமாகப் பேசினால் அதுக்குப் புரியும்.

சீக்கிரமே நல்லா சாப்பிட ஆரம்பிச்சுடுவா. கவலைப்படாதீங்க.

முகப்பில் குழந்தை வளர்ப்பு என்ற பகுதியில் தளிகா நிறைய டிப்ஸ் கொடுத்திருக்காங்க, பாருங்க.

மணிமுத்துமாலை

குழந்தையை விமானத்தில் அழைத்து செல்லும் போது என்ன என்ன எடுத்து செல்ல வேண்டும்....???குழந்தைக்கு விமானம் செல்லும்போது பால் தரலாமா...?????????

jesus christ

உங்க குழந்தக்கு வயது என்ன? பால் விமானத்தில் எடுத்து செல்லக் கூடாது. உள்ளே கேட்டால் தருவார்கள். பால் பவுடர் கல்ந்து கொடுக்கும் குழந்தை என்றால் பால்பவுடர் எடுத்து செல்லலாம். டிரஸ், வைப்ஸ், டையப்பர், லொசன், பிளாங்கட், தண்ணிர் குடிக்கும் சிப்பிகப், அதுக்கு பிடித்த டாய்ஸ் .கைகலில் வெயிட் ரெம்ப வைக்க வேன்டாம்.குழந்தையை துக்குவது கடினம். தீபா

மேலும் சில பதிவுகள்