அவரைக்காய் பொரியல்

தேதி: May 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (9 votes)

 

பட்டை அவரைக்காய் - நூறு கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - கொஞ்சம்
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - சிறிது


 

அவரைக்காய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி தேவையானவற்றை எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி நன்றாக அவரைக்காய் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டை அவரைக்காயில் நன்றாக படுமாறு எல்லா புறமும் பிரட்டி விட்டு வேக வைக்கவும்.
முட்டை அவரைக்காயுடன் ஒட்டி உதிரியாக வந்ததும் அடுப்பை நிறுத்தி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு.காலையில்தான் அவரைக்காய் வாங்கினேன்.குறிப்பை செய்து விடுகிறேன்.)))

radharani

சூப்பரான குறிப்பு. முகப்பில் பார்த்ததுமே நினைத்தேன் ..நீங்களா தான் இருக்கும்னு.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் குமாரி உங்கள் குறிப்பு எளிமையாகவும் ஈசியா இருக்கு.இன்னைக்கு செய்துட்டு நாளைக்கு வறேன்..மேலும் பல குறிப்புகள் கொடுங்கள் வாழ்த்துக்கள்

hello kumari madam ungal kurippu ellam nalla irukku ungal kurippirku naan reply seiven.ennai pola kaththukuravangaluku ungal pondravarkalin kurippu thembalikirathu vaalththukkal .

ஒரு வார்த்தை கவிதை "நீ"

முட்டை சேர்த்து அவரைக்காய் பொரியலா? பார்க்கவே சூப்பரா இருக்கு,எனக்கு அவரைக்காய்னா ரொம்ப பிடிக்கும், அடுத்த வாரம் செஞ்சுட்டு சொல்றேன்... நீங்க அவரைக்காய் கட் செய்திருப்பதை சொல்லாமல் இருக்க முடியல, எப்படீங்க இவ்வளவு குட்டியா கட் பண்ணியிருக்கீங்க? சூப்பர் போங்க!!!

-ஜெயந்தி

-

ஒரு வார்த்தை கவிதை "நீ"

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவிற்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ராதா.செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரம்யா,பார்த்ததும் நான் என நினைக்கும் அளவிற்கு இருக்குனு சொல்லி இருக்கீங்க மிக்க மகிழ்ச்சி .நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தேவி.செய்து பார்த்துட்டு பின்னூட்டம் தாருங்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி லக்ஷ்மி .செய்து பார்த்துட்டு பின்னூட்டம் தாருங்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சஜ்வீணா.செய்து பார்த்துட்டு பின்னூட்டம் தாருங்கள்.அவரைக்காய் கத்தியாலதான் கட் செய்தேன்.நீல வாக்கில் மூன்றாக நறுக்கி பின் பொடியாக கட் பண்ணின்னேன்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

லக்ஷ்மி என்னவோ சொல்லி இருக்கீங்க ஏன் டெல் பண்ணி இருக்கீங்க?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வித்தியாசமான குறிப்பு. ஆனாலும் அவரைக்காயை இத்தனை பொடியா நறுக்கினது சாமர்த்தயம் தான். :) சூப்பரா இருக்கு. அடுத்த முறை செய்துட்டு வரேன். வாழ்த்துக்கள் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமாரி வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

ரொம்ப அழகான குறிப்பு வாழ்த்துக்கள் kumari sister

குமாரி இன்று உங்கள் அவரைக்காய் பொரியல்தான் செய்தேன் நல்லா சுவை

குமாரி மேடம் ,

அம்மா இது போலே தான் செய்வாங்க அவரைக்காய் தான் கிடைக்கணும்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வனி..அவரைக்காய் நறுக்கியது நானே தான்.கண்டிப்பா செய்து பார்த்துட்டு பின்னூட்டம் தாங்க எப்படி இருந்தது என்று

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாத்திமா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி தேவி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் கவி அம்மாவும் இப்படிதான் செய்வார்களா.அவரைக்காய் கிடைத்தால் நீங்களும் செய்து பாருங்கள் உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் குமாரி,

முட்டையும் வெங்காயமும் சேர்த்து செய்திருப்பது நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்

மணிமுத்துமாலை

ஹாய் முத்து வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪