தொலை தூர கல்வி

எனது தோழி வேலை செய்துகொண்டிருக்கிறார். தொலை தூர கல்வியில் எம். பீ. ஏ. படிக்க நினைக்கிறார். அவர் மருந்தியல் (B. Pharmacy) படித்திருப்பதால், Hospital Management படிக்கலாம் என நினைக்கிறாள். இதை தேர்வு செய்யலாமா, வாய்ப்பு இருக்கிறதா, இதை பற்றி தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள். அல்லது வேறு பிரிவு எம். பீ. ஏ. (H. R.) போன்றவை நல்லதா. மற்றும் பொதுவாக தொலை தூர கல்வி பற்றி சாதக பாதகங்கள் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.

உங்களின் தோழி எந்த துறையில் வேலை பார்க்கிறார்கள்? அதை பொருத்து தான் தேர்வு செய்ய வேண்டும். தொலை தூர கல்வியில் நிறைய வசதியும் இருக்கும் கஷ்டங்களும் இருக்கு.
நான் முதலில் என்ன என்ன எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதை சொல்கிறேன்....
நீங்கள் (தொலை தூர) படிப்பை௦ முடித்து பட்டம் பெற்று ஒரு வேலைக்கு (நேர்முக தேர்வுக்கு) சென்றால் அவர்கள் நம்மிடம் கேட்க்கும் கேள்வி என் தொலை தூர கல்வி.
கல்லூரியில் சென்று பயிலும் நபருக்கு வேலை வைப்பு அதிகம். அதற்காக தொலை தூர கல்வியில் பயில்பவர்களுக்கு வேலை கிடைக்காது என்று சொல்ல வில்லை. அவர்கள் வாங்கும் சம்பளமோ இல்லை வேலையோ கிடைக்க மிகவும் சிரமப் படனும்.
அப்படி தான் படிக்க முடியும் என்றால் வேறு வழி இல்லை. இல்லையென்றால் கல்லூரியில் சென்று படிப்பதே சிறந்தது. அதுவும் இல்லாமல் இந்த மாதிரியான படிப்பிற்கு கல்லூரி அவசியம். இல்லையென்றால் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க் வேண்டும். அப்பொழுது தான் நிர்வாக திறனும் / அனுபவமும் வரும்.
நீங்கள் எந்த துறையில் வேலை செய்கிறார் என்று சொல்லுங்கள்....மற்றதை பிறகு சொல்கிறேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா, பதில் அளித்ததற்கு நன்றி :) அவர் நிதி தேவைகளுக்காக கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. ஆதலால், கல்லூரி சென்று படிப்பது என்பது கடினம். அவர் இப்பொழுது medical transcription வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா, நீங்க என் பதிவை பார்க்கலையா பா. இதை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்க பா. யாரும் தொலைதூர கல்வி முறையில் படிப்பவர்கள் இருந்தால், விடை சொல்லுங்க பா.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்