தோழிகளே லப்ரோச்கோபிக் மற்றும் iyf பற்றி எனக்கு உங்கள் ஆலோசனை சொல்லுங்கள்

தோழிகள் அனைவருக்கும் எனது வணக்கம்( சௌமியன்) .எங்களுக்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் ஆகிறது .குழந்தை இல்லை .குழந்தை பேரு பெற சிகிச்சை எடுத்து வருகிறோம் .எனது மனைவிக்கு கருப்பை சுற்றி சிறு அளவில் நீர் கட்டிகள் உள்ளதாக டாக்டர் சொன்னார்கள் .இது பற்றி நான் நிறைய ஆலோசனைகளை இந்த பகுதி இல் தோழிகள் உங்களிடம் பெற்றோம்.முதலில் என் மனம் நிறைந்த நன்றிகள்.வரும் மாதம் முதல் வாரம் லப்ரோச்கோபிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து உள்ளார் டாக்டர் .எனக்கு சில டவுட் உள்ளது .முதலில் அறுவை சிகிச்சை ஸ்டமக் இல் மிக கீழாக செய்வார்களா? எத்தனை டைம் ஆகும் ? ச்டிசெஸ் எத்தனை போடுவார்கள் ?மனைவி அலுவலகம் செல்வதுடன் இல்ல பணிகளும் செய்வார். என்னால் முடிந்த சிறு உதவிகள் நான் செய்வேன். எனது மனைவி அன்றாட பணிகள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் ?சிகிச்சை முடிந்த உடன் கவனிக்க வேண்டியவை பற்றியும், அப்பறம் சிகிச்சை கு 12000 ஆகும் என்று சொல்கிறார்கள் .அது சரி ஆ ?மேலும் iyf சிகிச்சை செய்ய சொல்கிறாக்கள் .எனது ஸ்பெர்ம் கவுன்டிங்க்ஸ் 80 % உள்ளதால் ஒரு முறை சிகிச்சை கொடுத்தால் குழந்தை கிடைக்கும் எனவும் அதற்கு 8000 ருபீஸ் ஆகும் அணவும் சொன்னார்கள் .அவளவு ஆகுமா ?எங்கள் இருவரது குடும்பங்களிலும் இது பற்றிய அனுபவம் யாருக்கும் இல்லை.அது தான் எத்தனை வினாக்கள்.தோழிகள் எனது முந்தைய வினாக்களுக்கு நல்ல ஆலோசனைகள் மற்றும் எங்களுக்கு குழந்தை கிடைக்க ப்ராத்தனை செய் வதாக எனது பதிவில் சொன்னதை நன்றி உடன் இங்கு பதிவு செய் கிரேன் .எனது வினாக்களுக்கு அனுபவம் உள்ள தோழிகள் தங்களது ஆலோசனைகளை யும் மற்றும் அறுவை சிகிச்சை நல்ல படி ஆக நிறைவுற பிரார்த்தனை செய்யும் படி அன்புடன் வேண்டும் உங்கள் அன்பு தோழர் சௌமியன்

தோழிகளுக்கு எனது வணக்கம் .எங்களுக்கு மிக கவலை மற்றும் பயமாக உள்ளது. ப்ளீஸ் அனுபவம் உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள் .மனைவி தினமும் அழுகிறார்கள் .எனக்கு கவலை ஆக உள்ளது.தங்களின் ஆலோசனைகளையும் ஆறுதல் ஆன வார்த்தைகளையும் எதிர் பார்க்கிறோம் .என்றும் தோழமை உடன் சௌமியன்

அண்ணா இதை பற்றி எனக்கு தெரியாது. என் அக்காவிற்கு செய்து இருகாங்க. பயப்படும் படி ஒன்றும் இல்லை அண்ணா. நீங்கள் கவலை படாதீங்க. ஒன்றும் ஆகாது. உங்கள் மனதிற்கு நலதே நடக்கும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஒன்றும் பயப்படவேண்டாம் ....எல்லாம் நல்லதாகவே நடக்கும்.....நாங்கள் பிரார்த்திக்கிறோம்..... முடிந்தால் இந்த வெப்சைட்டில் போய் பாருங்கள். diagnostic pelvic laparoscopy examination என்று குடுத்து வீடியோஸ் பாருங்கள் தைரியமாகிவிடும் வலியிருக்காது என கேள்விப்பட்டுள்ளே.இரத்தம் வெளியேராது.மனைவியையும் கவலைப் படாமல் இருக்கச் சொல்லுங்கள்....
****************************************************
http://www.youtube.com/watch?v=W-ZPa1NzcgM
"http://www.nucleusinc.com/medical-animation"
**************************************************

This 3D medical animation shows a diagnostic pelvic laparoscopy examination to view the health of the ovary, oviduct (fallopian tube), and other organs of the reproductive system. After the laparoscope is inserted through the abdominal trocar, we see an internal view of the female pelvic organs and tissues.

செளமியன் இன்னும் பதிவைபார்க்கலையா? அந்த யூடூப் லிங்க்கில் போய் பாருங்கள் விஷயம் எப்படி,என்ன என்பது தெரியும் பயம் அகலும்.....

ஒன்னும் பயப்படாதிங்க.. இது எல்லாம் இப்ப ரொம்பவே நார்மல். இந்த கால பொண்ணுங்களுக்கு ரொம்ப சகஜம். அந்த காலத்திலும் இருக்கத் தான் செய்தது. ஆனால் அந்த அளவு விஞ்ஞானம் வளரவில்லை.மீடியாவும் இல்லை எல்லாரிடமும் எடுத்து வர. கூகிள் செய்து பாருங்க. அழகான் அனிமேஷன் விளக்கத்தோடு இருக்கும்.

http://www.youtube.com/watch?v=GeigYib39Rs

இந்த லின்க் பாருங்க. சொல்வதைவிட பார்த்தால் புரியும். இது தொடர்புடைய பல லின்க்கள் இருக்கும். எல்லாம் டாக்டர்ஸ் பார்த்துக் கொள்வார்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செளமியன் எப்படி இருக்கீங்க?மனைவி நலமா?இரண்டு நாட்களாக பதிவுகளைக் காணோமே ஏன்?

தோழிரேணுகா எனக்கு அலுவலகத்தில் பணி அதிகம் அதனால் தான் உடன் பதிவு இட முடியவில்லை.தங்கள் ஆலோசனைகளுக்கும் ,ஆறுதல் வார்த்தைகள் இக்கும் எனது நன்றிகள் .அந்த இரண்டு லிங்க் இம் ஓபன் ஆக வில்லை .அடோபே பிளாஷ் பிளேயர் சாப்ட்வேர் இருந்தால் தான் பார்க்க முடியவில்லை .இன்னும் மற்ற சற்று பெரிய ப்ரொவ்சிங் சென்டர் இல் தான் பார்க்கவேண்டும்.பார்த்த பின் பதிவு இடுகிறேன்..நன்றிகள் பல.நட்புடன் சௌமியன்

செளமியன் நீங்கள் பாருங்கள் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்,கவலைகள்,மனைவிக்கு இருக்கும் பயங்கள் அனைத்தும் போய்விடும்....புது மனத்தெம்பு கிடைக்கும்.காரணம் அந்த லிங்க்கைப் பார்த்தால் உங்களுக்கு தேவையானதை நீங்கள் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம்......

1 செ.மீ அளவிற்கு 3 இடத்தில் தையல் போடுவார்கள்.நடு வயிற்றில் 1, அடிவயிற்றின் இடது வலது ஓரங்களில் தலா 1.வலி இருக்காது.பயம் வேண்டாம்.தையல் பிரிக்கும் வரை டவல் பாத் மட்டும் எடுக்கவும்.15000 வரை செலவு ஆகும்.1 வாரத்தில் தையல் பிரிக்கலாம்.தையல் பிரிக்கும் வரை கடினமான வேலை செய்ய வேண்டாம். போன மாதம் நானும் இதே சிகிச்சை எடுத்தேன். no problem don't worry.ஐ.வி.எஃப் பற்றி எனக்கு தெரியவில்லை நண்பரே... தெரிந்து கொண்டு சொல்கிறேன்.

உங்கள் தகவலுக்கு என் நன்றிகள் செல்வி ,தோழி ரேணுகா அந்த லிங்க் பார்த்து விட்டேன் .பயம் போய் விட்டது .நன்றிகள் .சௌமியன் .எனக்கு அலுவலக இணைய பயன்பாட்டு இக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளத்தால் உடன் பதில் தர முடிய வில்லை .சௌமியன்

மேலும் சில பதிவுகள்