தோழிகளே லப்ரோச்கோபிக் மற்றும் iyf பற்றி எனக்கு உங்கள் ஆலோசனை சொல்லுங்கள்

தோழிகள் அனைவருக்கும் எனது வணக்கம்( சௌமியன்) .எங்களுக்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் ஆகிறது .குழந்தை இல்லை .குழந்தை பேரு பெற சிகிச்சை எடுத்து வருகிறோம் .எனது மனைவிக்கு கருப்பை சுற்றி சிறு அளவில் நீர் கட்டிகள் உள்ளதாக டாக்டர் சொன்னார்கள் .இது பற்றி நான் நிறைய ஆலோசனைகளை இந்த பகுதி இல் தோழிகள் உங்களிடம் பெற்றோம்.முதலில் என் மனம் நிறைந்த நன்றிகள்.வரும் மாதம் முதல் வாரம் லப்ரோச்கோபிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து உள்ளார் டாக்டர் .எனக்கு சில டவுட் உள்ளது .முதலில் அறுவை சிகிச்சை ஸ்டமக் இல் மிக கீழாக செய்வார்களா? எத்தனை டைம் ஆகும் ? ச்டிசெஸ் எத்தனை போடுவார்கள் ?மனைவி அலுவலகம் செல்வதுடன் இல்ல பணிகளும் செய்வார். என்னால் முடிந்த சிறு உதவிகள் நான் செய்வேன். எனது மனைவி அன்றாட பணிகள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் ?சிகிச்சை முடிந்த உடன் கவனிக்க வேண்டியவை பற்றியும், அப்பறம் சிகிச்சை கு 12000 ஆகும் என்று சொல்கிறார்கள் .அது சரி ஆ ?மேலும் iyf சிகிச்சை செய்ய சொல்கிறாக்கள் .எனது ஸ்பெர்ம் கவுன்டிங்க்ஸ் 80 % உள்ளதால் ஒரு முறை சிகிச்சை கொடுத்தால் குழந்தை கிடைக்கும் எனவும் அதற்கு 8000 ருபீஸ் ஆகும் அணவும் சொன்னார்கள் .அவளவு ஆகுமா ?எங்கள் இருவரது குடும்பங்களிலும் இது பற்றிய அனுபவம் யாருக்கும் இல்லை.அது தான் எத்தனை வினாக்கள்.தோழிகள் எனது முந்தைய வினாக்களுக்கு நல்ல ஆலோசனைகள் மற்றும் எங்களுக்கு குழந்தை கிடைக்க ப்ராத்தனை செய் வதாக எனது பதிவில் சொன்னதை நன்றி உடன் இங்கு பதிவு செய் கிரேன் .எனது வினாக்களுக்கு அனுபவம் உள்ள தோழிகள் தங்களது ஆலோசனைகளை யும் மற்றும் அறுவை சிகிச்சை நல்ல படி ஆக நிறைவுற பிரார்த்தனை செய்யும் படி அன்புடன் வேண்டும் உங்கள் அன்பு தோழர் சௌமியன்

எனக்கு திருமணம் ஆகி 4 1/2 வருடம் ஆகி விட்டது. குழந்தை இல்லை. என்னுடைய எல்லா டெஸ்ட் நார்மல், இன்னும் tube open ஆகி இருக்கா என்பதற்கு எடுக்க வேண்டிய hystrosalpinogram (radioactive dye used for this test) டெஸ்ட் மட்டும் எடுக்க வேண்டும். நான் கடந்த மாதம் இந்த டெஸ்டுக்காக சென்றேன் வலி தாங்க முடியாததால் (அந்த டெஸ்ட் செய்வது வலிக்கும்) டெஸ்ட் எடுக்கவில்லை. டாக்டர் அந்த டெஸ்ட்க்கு மாற்றாக laproscopy பண்ண சொல்கிறார் அல்லது திரும்பவும் hystrosalpinogram தான் பண்ண வேண்டும் என்கிறார். தோழிகளே உங்களுடய ஆலோசனை தேவை, பதில் தாருங்கள்.

மேலும் எனக்கு கடந்த 6 மாதத்தில் 3 முறை பிரவுன் spotting in between periods வருகின்றது. அதாவது 25 வது நாளில் இருந்து அடுத்த period வரும் வரை அதை தொடர்ந்து period வந்து விடும். இது போல் யாருக்காவது இருந்ததா? இது பற்றி எனக்கு பயமாக உள்ளது. இதனால் குழந்தை உருவாவதில் ஏதேனும் பிரச்சினை வருமா??

No need to worry about lap surgery.Its very simple and not scary at all.Charge varies from 15-25,000.
For IVF,1-1.5 lakhs

அன்பு தோழிகளுக்கு சௌமியன் னது வணக்கம். அனைவரும் நலமா ? சண்டே அன்று எனது மனைவிக்கு நல்ல படி ஆக லப்ரோச்கோபிக் அறுவைசிகிச்சை முடிந்து விட்டது .வலி உள்ளதாக சொல்கிறார்கள் .அவரது அம்மா வும் நானும் கூட இருக்கிறோம்.எனது அம்மா வும் வந்து இரண்டு நாட்கள் இருந்து உதவிகள் செய்தார்கள்.அவரின் வலிகளை பார்த்து நிறைய அழுது விட்டேன் .குழந்தைகாகா இத்தனை வலிகளை தாங்க வேண்டியதை பார்க்கும் போது பெண்களின் மன வலிமை நினைத்து பெருமை ஆக உள்ளது .மயக்க நிலை இலும் நீங்க சாப்பிட்டாச்சா என கே இட்ட போது மனைவி இன் மேல் உள்ள அன்பு அதிகரித்தது..மனைவி என்பவள் நமது உயிர் என கணவர்கள் அறிய இந்த மாதிரி சந்தர்பங்கள் உதவும்.மனைவி யை மதிக்காத கணவர்கள் ஒரு முறை பிரசவம் நடப்பதை பார்த்தால் வாழ்வில் மனைவி இன் மேல் உள்ள அன்பும் பாசமும் கூடும் .படைக்கும் கடவுள் பிரம்மா என்றால் மனைவி யும் பிரம்மா தான் இது எனது பணிவான கருத்து.எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தோழிகளுக்கும் எனது நன்றிகள் .அலுவலக இணைய பயன் பாட்டுக்கு தடை உள்ளது. சந்தர்பம் உள்ளபோது பதிவு இடுகிறேன்..இப்ப ப்ரொவ்சிங் சென்டர் இல் இருந்து பதிவு இடுகிறேன்.விரைவில் நல்ல தகவல் சொல்கிறோம் .உங்களது அன்பும் பிரார்த்தனைகளும் வேண்டி ...உங்கள் அன்பு தோழர் சௌமியன்

அண்ணிக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்ததை அறிவித்ததை போலவே, அவர் தாயாகப் போகும் செய்தியையும் கூடிய விரைவில் அறிவிப்பீர்கள். அதற்காக இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன். தங்களது உணர்வுகளை அண்ணியிடம் உங்களது செயல்களின் மூலமாக வெளிப்படுத்துங்கள், விரைவில் அவர் குணமடைய வாழ்த்துகள்.

மேலும் சில பதிவுகள்