குழந்தை பேசுவதில் தாமதம்..

குழந்தை பேசுவதில் தாமதம்.. ட்ரைனிங் கொடுத்துகிட்டு தான் இருக்கேன். ஆனால் பேச மாட்டேன்கிறான்.. முகத்தை பார்க்கவே மாட்டேங்றான்.. இப்போது அவனுக்கு ஒன்றரை வயது ஆகிறது..

என்னங்க நீங்க பையனுக்கு ஒன்னறை வருடம்தானே ஆகுது.....அதுக்குள்ள ஏன் கஷ்ட்டப்படுத்தரீங்க .பேச ஆரம்பிச்சாங்கன்னா தாங்க மாட்டீங்கப்பா............
கேக்கர கேள்வியிருக்கே.....அப்பப்பா........
சரி தேன் கொஞ்சமா எடுத்து நாக்கின் உட்பகுதிவரை தேய்த்துவிடவும்.
அதை சப்பிட்டாலும் பரவாயில்லை.நாவில் உள்ள வெள்ளை போகப்போக தானாக பேசுவார்கள்.......

மிக்க நன்றி ரேணு.. உங்களின் உடனடி பதிலுக்கு..
நான் தினமும் அவன் நாக்கில் தேன் தடிவிவிட்டு தான் இருக்கிறேன்.. அவன் இன்னும் என்னை அம்மா என்று கூப்பிடவில்லை.. அதுதான் வருத்தம்...

பையனுக்கு 1.5 வயது தானே... இப்போலாம் 3 வயசுல பேசுதுங்க பிள்லைங்க... எல்லாம் லேட் தான். கவலைய விடுங்க. நாக்கில் வசம்பும் மாசிக்காயும் வறுத்து பொடிச்சு தேன் கலந்து தேச்சு விடுங்க. பேச்சு நல்லா வரும்னு டாக்டர் சொன்னாங்க. ப்லே ஸ்கூல்ல போட்டாலே பேசிடுவாங்க... கவலைய விடுங்க. நிறைய பேசுங்க நீங்களும், குழந்தை அம்மாவிடம் தானே நிறைய கத்துக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் அக்காவின் மகன் 2.5 வயதில் தான் பேசினான்,வசம்பு நாக்கில் தடவுங்க.

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

மிக்க நன்றி வனிதா, பத்மா, ரேணு..
உங்கள் கருத்துகள் மனதிற்கு தெம்பு அளிக்கிறது..
playgroup சேர்ப்பதற்கு தேடிட்டு இருக்கேன்.. அடுத்த மாதம் சேர்க்கணும்

hi,

My son also 16 months old. not taking.but he know who is his mother, father and all. he call me amma all time. when we keep on telling thatha, mama, anna he can tell. But he is not calling them. he is not listening what i amm talking keep on playing.

HOw to remove white in his toung?????????

advice me

CAN ANY ONE HELP ME ON THIS???????????

CAN ANY ONE HELP ME ON THIS???????????

முதலில் உங்க பதிவை தமிழில் போடுங்க... அப்ப தான் எல்லாருக்கும் புரியும் நிறைய தோழிகள் பதில் கிடைக்கும். படிக்க சிரமமா இருக்கு. கோவிக்காதீங்க.

முதல்ல உங்க குழந்தைக்கு 16 மாசம் தானே... அதனால் கவலை வேண்டாம். இன்னும் காலம் இருக்கு. பேச்சை பொறுத்தவரை 2.5 வயது வரை காத்திருக்கலாம். ஆனா அதுக்காக முயற்சி செய்யாம இருக்காதீங்க.... அவனை உங்க முகத்துக்கு நேரா உட்கார வைத்து பேசுங்க. அவன் உங்க வாய் அசைவை பார்க்க செய்யுங்க. பேச பயிற்சி கொடுக்கும்போது விளையாட்டு பொருட்கள் கண்ணில் படாம பாருங்க. கண்ணாடி காட்டி பேச வைங்க. நாக்கு மடங்காம சொல்ல கூடிய சுலபமான 1 எழுத்து, 2 எழுத்து வாரத்தைகளை முதலில் கற்று கொடுங்க. தானா பேச்சு வரும். கவலை வேண்டாம். நாக்கில் வெள்ளைன்னா?? சாதாரணமா படியக்கூடியது தானே?? அதை நீக்கனும்னு அவசியம் இல்லை, அதுக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை. அப்ப்டி நீக்க விரும்பினா விரலில் ஒரு பேண்டேஜ் துணி சுற்றி கொண்டு துடைங்க. முடிஞ்சா தினமும் குழந்தை நாக்கில் வசம்பு தேன் கலந்து தேயுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழீஸ், என் பொண்ணு, பையனுக்கும் ரெண்டே முக்கால் வயசாகுது இன்னும் பேச தொடங்கல. ஆனா ப்ரெஞ்ச் மட்டும் ஓரளவு பேசுறாங்க :) ப்ரீ கேஜில சேர்த்த பிறகு பேசுவாங்கன்னு சொல்றாங்க. மத்த குழந்தைகளோட பழக பழக பேச்சு வருமாம். அதனால் நான் பெருசா கவலைப்படல. வசம்பு தடவினால் நாக்கு தடிச்சு, பேச நாளாகும்னு சொல்வாங்க. நீங்க எதுக்கும் உங்க வீட்டு பெரியவங்களையும் ஒருமுறை ஆலோசனை கேட்டுக்குங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்