அச்சுப் பிச்சு கேள்விகளும் அதி மேதாவி பதில்களும் - 2

ஓட்டுப் போட்டவன்ல இருந்து ஓட்டுக்கேட்டவன் வரைக்கும் எலக்சன் ரிசல்ட் என்னவா இருக்கும், எப்படி இருக்கும்னு தெரியாம ரொம்ப டென்சனா இருக்கிற நேரம் இது. சீசனுக்கு தகுந்த மாதிரி நம்ம அச்சு பிச்சு கேள்விகள் இருக்கட்டும்ங்கிறதால, கொஞ்சமா அரசியலை டச் பண்ணலாம்னு ஒரு ஐடியா. எலக்சன் ரிசல்ட் இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சிடும். அதுக்குள்ள உங்க பதில்களை கொடுத்துடுங்க.. :-)

1. ரகசியமா காதுல சொல்லுங்க.. ஓட்டுப் போட எவ்வளவு வாங்குனீங்க?

2. அடுத்த ஆட்சி மதுரையா, சிதம்பரமா?

3. உங்களை (ஒரே) ஒரு நாள் முதல்வராக்குனா என்னவெல்லாம் செய்வீங்க?

4. மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க உங்களோட உடனடி தீர்வு என்ன?

பாபு அண்ணா......
1.என் முதல் ஓட்டே இதுதான் ,யாரிடமும் வாங்கவில்லை(யாரும் குடுக்கவும் இல்லப்பா)
2.அடுத்த ஆட்சி சிதம்பரம்தான்..(வெளிவட்டாரப் பேச்சிது)
3.நான் ஒருநாள் முதல்வரானால்,நல்ல கல்வியறிவும் பொதுநல எண்ணமும் உள்ள இளைய சமுதாயத்தை திரட்டி நம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் (முக்கியமான,அவசியமான)வயதும் அனுபவமும் உள்ள முதியவர் ஒருவரையும்,வாலிபத் துடிப்போடு தைரியமும்,செயல்திறனும் கொண்ட இளைஞர் ஒருவரையும் பதவியில் வைப்பேன்.பின்பு நடப்பவைகள் தானாக நன்றாக நடந்தேறும்.
4.மின்சாரப் பற்றாக்குறை:அண்ணா உண்மையச் சொல்லனும்னா நம் தமிழ்நாட்டில் அப்படி ஒரு பிரச்சனை இல்லைன்னா. இவங்களாத்தான் ஏற்படுத்தராங்க.ஊட்டியில் அவலாஞ்ச் என்ற இடமுண்டு இங்கு மின்சாரம் எடுக்கிறார்கள்.அவர்கள் கூறுவதுதான் இது.பற்றாக்குறையை ஏற்படுத்துவது கவர்மெண்ட்தான்.

1. காதைக் கொடுங்க ரகசியமா சொல்றேன்..... கேட்டுச்சா :). உங்களுக்கு எம்பூட்டு கிடைச்ச்து :))

2.அடுத்த ஆட்சி மதுரையும் இல்லை சிதம்பரமும் இல்லை. எப்ப ஆட்சி வந்தாலும் சென்னையில்தான் ஆட்சி அமையும்.

3. நான் ஒரு நாள் முதல்வரானால் சட்டசபையை சுத்திப் பார்க்கறதுலயே ஒரு நாள் ஓடிப்போயிடுமே. அதனால் நானே நிரந்தர முதல்வர்னு அறிவிச்சுடுவேன். யார் யாருக்கு பொட்டி கொடுக்கணுமோ கொடுத்து அமுக்கிடுவோம்ல, நாற்காலி கிடைச்சா சாகற வரைக்கும் விட மாட்டோம்ல.

4. மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்க ஒரே வழி யாரும் வீட்டில் மின்சாதன பொருட்கள் பயன்படுத்தக்கூடாதுன்னு தடையுத்தரவு போட்டுட வேண்டியதுதான். அப்புறம் மக்களுக்கு எம்பூட்டு மின்சாரம் வேணும்னாலும் குறையே இல்லாம கொடுக்கலாமே :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

1. யாரும் கொடுக்கலை
2. சிதம்பரம் தான்
3. ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு,1 ஏக்கர் விவசாய நிலம் தவிர அதிகமா யார்கிட்ட எல்லாம் இருக்கோ அதையெல்லா பிடுங்கி அரசுடமையாக்கி இல்லாத ஏழைகளுக்கு கொடுப்பேன்.
4. ஒரு வீட்டிற்கு இவ்வளவு மின்சாரம் தான் என்று பிக்ஸ் பண்ணனும். அப்படி செய்தால் அதிகப்படியான மின் சாதனங்கள்,அலங்கார விளக்குகள் உபயோகிக்க மாட்டார்கள். மின்சாரம் மிச்சமாகும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

போனவாட்டி நாந்தேன் மொத மேதாவி... இந்தவாட்டி கொஞ்சம் லேட்டு!!! இருந்தாலும் நம்ம பதிலையும் சொல்லிபோடுவோம்....

1. காதை கொடுங்க அண்ணே... “$^%%&^^$%#@@” ரகசியமாவே வைங்க மேட்டரை. சொல்லி வெச்சா கம்பி எண்ண வேண்டியது தான்... “கொடுத்தவங்க”!!!

2. மதுரையோ, சிதம்பரமோ.... சென்னையில் தானே ஆட்சி!! எது வந்தாலும் தமிழ்நாடு மாறாது!!! இருட்டில் இருந்து விடிவும் வருவாதாக தெரியல. ;(

3. இனி எலக்‌ஷனே கிடையாதுன்னு அறிவிப்பேன்.... நானே ஆட்சி செய்வேன். எத்தனை நாட்டில் நடக்குது... இங்க நடந்தா மட்டும் தப்பா??? :D

4. எந்த அரசியல் கூட்டமும் மாலை நேரத்தில் நடக்க கூடாதுன்னு தடை போடுவேன். அவங்க மின்சாரம் திருடலனா பற்றாக்குறையே லேதே!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1. மொதல்ல எல்லாம் ஓட்டு போடும்போது ஒரு சீட்டு கொடுப்பாங்க..அதுல சீல் வச்சு ஓட்டு போடுவோம் ப்ச் இப்ப அதுவும் கொடுக்கிறது இல்ல...மெசின காமிச்சு பட்டன ப்ரஸ் பண்ணச்சொல்றாங்க;(

2. எந்த ஆட்சியா இருந்தாலும் நான் சொல்றதுதான் நடக்கனும்.... அட எங்க வீட்டில நடக்கிற ஆட்சியதாங்க சொல்றேன்;-)

3. இஸ்டத்துக்கு வாக்குறுதிய அள்ளிவிடுவேன்;-) ஒரே நாள்ல நல்லா பிரபலமாயிடுவேன்.... அப்புறம் அடுத்த தடவை ஈசியா ஆட்சியப் பிடிச்சுடுவேன்;-)

4. இராத்திரி எட்டு மணிக்குமேல லைட், டிவினு போட்டா சாமிக் கண்ணைக் குத்தம்னு புரளியக் கிளப்பி விட்டுடுவேன்;-) இதுல எக்ஸாமுக்கு படிக்கிறவங்கள மட்டும் சாமி ஒன்னும் பண்ணாம விட்டுடும்னு எக்ஸ்டராவா இன்னொரு புரளியும் கூடவே விட்டுடுவேன்;-))

Don't Worry Be Happy.

-->கஷ்டப்பட்டு பஸ் பிடிச்சு ஊருக்கு போய் கேட்டா எனக்கு ஓட்டு இல்ல நு சொல்லிட்டாங்க.... :( எனக்கு வோட்டேகுடுக்கல.. அப்பறம் என்னத்த குடுக்க போறாங்க??? )

-->மதுரை நு நான் படிக்கற பேப்பர் ல போடு போடு நு போட்டுருந்தாங்க... நமக்கெங்க தெரியுது.... இதுல பாத்தா சிதம்பரம் அதுல பாத்தா மதுரை... ஒரே குஷ்டமப்பா..இது கஷ்டமப்பா...

-->முதல் நாள் நைட்டே முதல்வன் படத்த பத்துதடவ பாத்து மனப்பாடம் பண்ணி அதே மாதிரி பன்னுவேனே...

-->நாட்டுல விடிஞ்ச அப்பறம் எல்லா எடத்துலயும் தெரு விளக்குக எல்லாம் தானே ஆப் ஆகுற மாதிரி ஒரு sensor செட் பண்ணிடுவேன்... அது போதுமே நாட்டுல பாதி பற்றாக்குறை குறைஞ்சிடும்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

1.அங்கென்கே காசு குடுக்குரான்கன்னு சொன்னான்க எவனும் கொன்டுவந்து கொடுக்கலை
2.தொங்கு பாலம்னு நினைக்கிறேன்
3.சினிமவுலதான் எப்படினு காட்டிகுடுத்துருக்கான்கல்ல
4.வேறென்ன சூரிய சக்தியும் காற்றாலையும் ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகளும்தான்

பாபு அண்ணாவிற்கு வணக்கம். நல்ல கேள்விகள் கேடிருக்கீங்க.... ஆனா நான் சீரியசா தான் பதில் சொல்லப் போறேன் யாரைப் பற்றியும் குறிப்பிடாமல்... பதில்கள்:
1.எங்க தெரு டோபியும், துப்புறவாளரும் தான் எங்க ஏரியா தேர்தல் லஞ்சம் வினியோகிப்பாளர்கள். பண்டிகைக்கு நாம் அவர்களுக்குக் கொடுத்ததைவிட பன்மடங்கு தொகையை நமக்கு அவர்கள் தருவதை கைநீட்டி வாங்க அறிவும் தன்மானமும் இடம் தரவில்லை.
2.லஞ்சத்தையும் ஊழலையும் அறவே ஒழிக்கும் ஆட்சி தான் வேண்டும். (கனவுல தான்)
3.ஒரு நாள் முதல்வரானால் முதல் வேளையா முந்தைய அரசு செய்த ஊழல் குற்றங்களை மக்களுக்கு வெளிசப்படுத்தி விழிப்புணர்வை ஒரு நாளில் எவ்வளோ செய்யனுமோ அவ்ளோ செய்யனும்.
4.காற்றாலை மிசாரம் தற்போது வீனடிக்கப்படுகிறது. கற்றாலை, சோலார் சக்தி மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை நவீன தொழில்நுட்பத்துடன்முறை படுத்தி பயன் படுத்தனும்.

இவை அனைத்தும் சாத்தியமாகனும்னா கண்டிப்பா படித்த, திறமையான, மனசாட்சி, நேர்மையுள்ள ஒரு நல்ல தலைமை தான் வேண்டும்.
காமெடியாவே நினைக்க முடியலைங்க... எல்லாம் மனதில் இருக்கும் வெளிக்காட்டமுடியாத ஆதங்கங்கள் தான்...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹ்க்கும்...இந்த தபால் ஓட்டுக்களையெல்லாம் யாரும் கண்டுக்கிறதே இல்ல:( அடுத்த எலக்க்ஷனுக்காவது தபால்லேயே காசை அனுப்பச் சொல்லி ரெக்கமன்டேஷன் பண்ணுங்கண்ணா.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்முதல் முதல்வரா இருக்கறது '-----' இவங்களும், '-----' இவரும்தானே. மதுரை, சிதம்பரம் யாரும் இல்லையே!! இன்னாங்கோ கன்பியூஸ் பண்றீங்கோ.

நான் ஒரு நாள் முதல்வரானால் ஏழை, எளியோருக்காக பாடுபடுவேன். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவேன். வயதானோர்களை பாதுகாப்பேன். இதெல்லாம் நான் அஞ்சாவது படிக்கும்போது கட்டுரையில் எழுதியது.

எல்லோரும் காலா காலத்தில் ஒரு கல்யாணம் பண்ணிக்கனும். ஏன்னா, 'சம்சாரம் அது ஒரு மின்சாரம்னு' அந்த காலத்திலேயே படமெல்லாம் எடுத்திருக்காங்களே.

உங்களுக்கு மட்டும் சொல்றேன்....ரூபாயில் தராதீங்க டாலரில் தாங்கேனு கேட்டேன்....தரமாட்டேனுட்டாங்க....நானும் அதனால ஓட்டே போடலை. பின்ன என்னங்க இங்கே ருபாய் செல்லாதாமே :(
(நான் இந்த தேர்தலில் தான் ஒட்டு போட முடியலை...தபால் ஒட்டு இங்கேயிருந்து போட முடியுமா?)

சிதம்பரம் தான் (மோகினி) ஆட்டம் கண்டுடுச்சே?

ஒரு நாள் முதல்வரானால் நம்ப அந்நியன் படத்துல வர மாதிரி புனிஷ்மண்டை அமுலுக்கு கொண்டு வந்து விடுவேன். அப்படீனா கற்காலம் மாதிரி தானே :)

அதான் ஒரு நாள் முதல்வரா இருந்து கற்காலத்துக்கு மாத்தியாச்சில்ல இனி என்ன கவலை....மின்சாரமே தேவையில்லையே :)))

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்