தேதி: May 12, 2011
வெள்ளைநிற துணி
ப்ரேம்
எம்ப்ராய்டரி நூல் - சிவப்பு, பச்சைநிறம்
ஊசி
ப்ரேமில் வெள்ளைநிற துணியை பொருத்திக் கொள்ளவும். துணியின் மேல் பென்சிலால் ஒரு பூவை வரைந்துக் கொள்ளவும்.

விரும்பினால் வரைந்த பூவில் பென்சிலால் சின்ன சின்ன கோடுகள் போட்டுக் கொள்ளலாம். தைப்பதற்கு எளிதாக இருக்கும்.

ஊசியில் எம்ப்ராய்டரி நூலை தேவையான அளவு கோர்த்துக் கொண்டு உள்ளே வரைந்த சிறிய பூவிலிருந்து தையலை ஆரம்பிக்க வேண்டும். ஏதாவது ஒரு இதழில் அடியிலிருந்து ஊசியை நுழைத்துக் மேல் நோக்கி இழுத்து, சற்று தள்ளி ஊசியை கீழ் நோக்கி குத்தவும்.

அடிவழியாகவே சிறிது இடைவெளிவிட்டு மேலே கூறியது போல் தைக்கவும்.

இதேப் போல் தொடர்ச்சியாக உள்பக்கம் வரைந்த பெரிய இதழுக்கு முதலில் அவுட் லைன் போன்று தைக்கவும். அதன் பின் சிறிய இதழையும் தைக்கவும்.

சிறிய பூக்களின் உள்ளே வரைந்த கோடுகளிலும் இதுப்போல் நிரப்பவும்.

தைத்து முடித்ததும் பின்பக்கம் திருப்பி கடைசி தையலில் ஊசியை நுழைத்து இரண்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

இதுப்போல் எல்லா இதழுக்கும் சிவப்புநிற நூலால் தைத்து முடிக்கவும்.

பச்சைநிற நூலை சிறிய இதழின் இடையிலிருந்து தைக்க ஆரம்பிக்கவும். மேலே கூறிய முறைப்படி தைக்கவும்.

இதழின் உள்ளே ஒவ்வொரு வளைவு வளைவுவாக தையலை போட்டுக் கொண்டு வரவும். எல்லா பெரிய இதழின் உள்பக்கத்தையும் பச்சைநிற நூலால் தைத்து முடிக்கவும்.

இந்த ரன்னிங் தையல் புதிதாக எம்ப்ராய்டரி கற்று கொள்பவர்களுக்கு அடிப்படை தையலாகும்.

Comments
ரேவதி, பத்மா
வழக்கம் போல கலக்கல்... உங்களை இப்படியே நான் எத்தனை முறை பாராட்டுறது??? கையே வலிக்குது... அதனால் நேரில் வாங்க... இதெல்லாம் பண்ண கையை பிடிச்சு குலுக்கிக்கறேன் ;) நல்ல கலர் காம்பினேஷன், சிம்பிலான அழகான பூ டிசைன். நச்சுன்னு இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அழகான டிசைன் தெளிவான
அழகான டிசைன் தெளிவான படங்களோடு அழகா வந்துருக்கு நானும் போட்டு பார்கிறேன் by elaya.G