காரைக்குடி சமையல், உடன் பதில் தோழீஸ்

என் பையன் பிறந்தநாள் பார்ட்டிக்கு, காரைக்குடி (செட்டிநாடு)சமையலில் என்னென்ன அயிட்ட்ங்கள் வைத்தால் நன்றாக இருக்கும், சொல்லுங்கப்பா.ஆனால் வெஜிடேரியன் மட்டுமே.சீக்கிரம் உங்கள் பதிலை எதிர்பார்க்கிரேன்

மகனுக்கு advanced bday wishes சொல்லிடுங்க.

பணியாரம், சுகியன், வாழைக்காய் கோலா செய்யலாம்.

காய்கறி வறுவல், பிரியாணி, அடை இன்னும் நிறைய இருக்கே.... நம்ம கூட்டாஞ்சோறு பகுதியில் வலது கை பக்கம் “செட்டிநாடு”னு இருக்கு பாருங்க. தட்டி, “சைவம்” தேர்வு செய்து பாருங்க... ஏகப்பட்ட குறிப்பு வருது. தேர்வு செய்யுங்க... பார்ட்டியை கொண்டாடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் உங்களுடைய பையனுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னைக்கு உங்கள் மகனுக்கு பிறந்த நாள்.எத்தனாவது பிறந்த நாள்.

கவுன் அரிசி,பால் பணியாரம்,சீயம்,வெள்ளை பணியாரம்,இட்லி - வெங்காய கோஸ்,இட்லி - திரக்கல்,தாளிச்ச உப்பு இடியாப்பம் - கோஸ் மல்லி (அ) பச்சடி, இனிப்பு இடியாப்பம்,குழிப்பணியாரம் - இனிப்பு(அ)காரம், கல்கண்டு வடை,மெது வடை.

எனக்கு தெரிந்தவற்றில் ஞாபகம் வந்ததை கூறியுள்ளேன்.இன்னும் தெரிந்தால் சொல்கிறேன்.பிறந்த நாள் பார்ட்டி நல்லா நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

செட்டிநாடு (காரைக்குடி) என்றாலே பால் பனியாரம் தாங்க பேமஸ். அதை முதலில் சேர்த்துக்கொள்ளுங்கள். செய்யும் முறையும் எளிது.

உடன் பதில் போட்ட தோழிகள் அனவருக்கும் ரொம்ம்ப நன்றிப்பா.
வனி, நீங்க சொன்ன பகுதியில் போயிப்பார்க்கிரேன்பா.வாழ்துக்கள் சொல்லிடரேன்.எனக்கும் சொல்லிக்கரேன்(ஹி..ஹி.., எனக்கும் அன்னிக்குதான் பிறந்தநாள்).

மீனாள், என் பையனுக்கு, 2-வது பிறந்தநாள்.(எனக்கு,.. சொல்லமாட்டேனே!, வேணும்னா கூட ஒரு 0 போட்டுக்குங்க.)மே 20 பிறந்தநாள்பா எங்களுக்கு.உங்களுக்கும் ரொம்ப நன்றிப்பா, வாழ்துக்களுக்கும், பதிலுக்கும்.

கண்ணன் உங்களுக்கும் ரொம்ப நன்றிப்பா.பால் பணியாரம் ஒரு அயிட்டம் வைக்க சொல்ரேன்.

மேலும் சில பதிவுகள்