pls அவசரமாக பதில் தாருங்களேன்

என் 14 மாத பையன் walker இல் இருந்து tils இல் தலை அடிபட விழுந்துட்டான்.அழுது அழுது கண் செருகி தூங்கிட்டான்.கீழே விழுந்தால் என்ன பண்ணனும்.உடனே தூங்க விடலாமா?நான் தனியேதான் இருக்கிறேன்.உதவிக்கு பக்கத்திலும் யாரும் இல்லை.இதுதான் 1st time விழுந்திருகிறான்.என்னை உங்க sisterai நினைத்து சீக்கிரமா reply பண்ணுங்க pls pls plsssss.

குழந்தை விழுந்த உடனே அழுதானா?? மயக்கம், வாந்தி ஏதும் இல்லை என்றால் பயம் தேவை இல்லை. வீக்கம் இருக்கா பாருங்க. ரொம்ப தேய்க்காதீங்க. அழுததால் தூங்கி இருப்பான்... அது பிரெச்ச்சனை இல்லைன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க... இதெல்லாம் சின்ன அடி தான்... கவலை வேண்டாம். சரி ஆயிடுவான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிமி :
சிமி நீங்கள் பயப்படாதீர்கள்.........

பையனுக்கு அடிபட்ட இடத்தில் வீக்கம் அல்லது காயமாகி ரத்தம் ஏதாவது வந்ததாப்பா.....?
ரத்தம் வந்திருந்தா சில் தண்ணீரில் கழுவிவிட்டு காயத்திற்கு போடும் ஆயின்மென்ட் இருந்தால் போடுங்கள்.
காயம் இல்லை வீக்கம் மட்டும் உள்ளதுன்னா ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுங்கள் வீக்கமும்,வலியும் குறைந்துவிடும்...
சிமி தலையின் முன் பக்கமா(நெற்றி)அல்லது பின்பக்கமா?எங்கு அடிபட்டுள்ளது?காய்ச்சல் ஏதாவது இருக்கா?அப்படி இருந்தா மருத்துவரை அனுகுங்கள்.....
சரியாகிவிடும் சீக்கிரம்...குழந்தைகளுக்கு இதெல்லாம் சகஜம்தான்.......பையன் அசதியில் தூங்குவான்,தூங்கலாம் தவறில்லை.நீங்கள் அடிக்கடி அவனை பார்த்துக் கொள்ளுங்கள்.சரியா.....நீங்கள் பயப்படாதீர்கள்.........

உடனே பதில் போட்டதுக்கு ரொம்ப நன்றி வனிதா sister,ரேணுகா sister.உடனே அழுதான்.கண் செருகியது.நான் வெளியே கொண்டு போய் நல்லா தேய்த்துவிட்டேன்.உள்ளே கொண்டு வந்து ஓடிக்கொலோன் போட்டு மடியில் போட்டேன் படுத்துட்டான்.ஒரு side தான் விழுந்தான்.வீக்கம்,வாந்தி இல்லை.நான் நல்லா பயந்துட்டேன்.husband work பண்ற இடம் 40 minits travel பண்ணனும்.பாலைவனத்தில் இருக்கிரேன்.அவசரதுக்கு கூட texi கிடைக்காது.1.30 houra மடியிலேயே படுக்குறான்.ஒவ்வொரு அசைவயும் பார்த்துகொண்டிருக்றேன்.உடனே வியர்த்தது.இப்ப இலேசாய் உடம்பு சுடுகிறதுbt, AC போட்டிருக்கிறேன். docter இடம் காட்டனுமா?

SHIMRI..

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

பயம் வேண்டாம். அழுதா குழந்தை அசதியில் தூங்கிருப்பான். எழுப்பி பாருங்க... இல்லன்னா அவனா தூங்கி எழட்டும்... எழுந்த பிறகு ஆக்டிவா இருக்கானான்னு... இருந்தா ஒன்னும் பயம் வேண்டாம். இல்லன்னா டாக்டர் பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தை எழும்பி நல்ல activeய் இருக்குறார்.பயம் போய்ட்டு.thank u so much.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

சிமி பயம் போயிடுச்சா........பையன் நல்லா விளையாடுரானா......நல்லதுப்பா...........
சில சமையம் இப்படித்தான் நம்மலப் படுத்துவாங்கப்பா........
என் மகன் கூட இப்படித்தான்,பல் முலைத்த சமையம்,வாக்கரிலிருந்து விழுந்தூள் உதட்டில் பல் ஏறிநிறைய ரத்தம்..எனக்கோ ஒரே பயம்,அவனுக்கு வழிக்குமே,அவர் வந்தால் என்ன பதில் சொல்வது,ரத்தத்தை நிருத்த என்ன செய்றதுன்னு......
சரின்னு துணில ஜில் வாட்டரால்(ஊட்டி சோ,எப்பவுமே ஜில் தான்)துடைத்து ,கழுவிவிட்டேன்.ரத்தம் நின்றுவிட்டது,காயமும் 2,3 நாளில் சரியாகிவிட்டதுப்பா........
குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரம் எதுவும் வராது,வந்தாலும் சீக்கிரம் சரியாகிடும்ப்பா........

இருந்தாலும் நீங்கள் இருப்பது பாலைவனம் என்று சொன்னீர்கள்..அங்கே உடனடித் தேவைகளுக்கான மருந்துகளை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்...சரியா

ஐயோ பாவம்,சின்ன பையனுக்கு ரொம்ப வலித்திருக்குமே..எப்படித்தான் இதயெல்லாம் தாங்குரதோ ரேணு mdm .(உங்களை எப்படி கூப்பிடுரதுன்டு தெரியலயே).இனிதான் mdm பயம்.இவரை எப்படி பார்த்துகொள்றது என்று.மறுபடியும் காலையில் விழுந்துடார்.நல்ல வேளை நான் spiderman டம் பாய்ந்து பிடித்துட்டேன்.இனி விட மாட்டேன்.என்ன செய்ய tiles coolந்டு விடுரது.நெஞ்சால் இழுத்து இழுத்துதான் தவழ்வார்.7 மாதமாய் walkeril ஓடுறார்.எப்பதான் நடப்பாரோ தெரியாது.கையை பிடித்து நடை பழக்கி விடுறேன்.அப்ப சரியா சந்தோஷப்படுவார்.அவர் எல்லாமே late தான்.8 மாதத்தில்தான் குப்பறபடுத்தார்.9 மாதத்தில் தவழ்ந்தார்.வீட்டில் சரி செல்லம்.5 வருடம் தவமிருந்து போராடி பெற்ற பிள்ளை.2 வீட்டிலும் ஒரே செல்ல பிள்ளை கீழே விடமாட்டார்கள்.இங்க வந்து 2 மாதம் ஆகிறது.இப்ப தூக்க ஆளில்லை.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

இது வாக்கர் பயன் படுத்தும் எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படுவது தான் குப்பர விழுவார்கள்

1. வாக்கரை பெட்டு கட்டையிலோ வேறு எதிலும் ஒரு காட்டன் சேலைய முறுக்கி கட்டி விட்டனும் வாக்கர்க்கும் பெட்டு க்ட்டைக்கும் இடையில் பிள்ளைகள் நல்ல நடக்க டிஸ்டன்ஸ் வைத்து, அல்லது கட்டை நற்காலியில் ஒரு காலை மட்டும் வாக்கரில் நுழைத்து வைக்கனும்
ஓரளவுக்கு அப்படி இப்படி போய் வரும் வரை இருந்தால் போதும்,

வாக்கரில் , நிறைய விளையாட்டு சாமானகள், சாப்பிட ரொமப் நேரம் வைத்து சாப்பிடுவது போல் ஏதேனும் சாப்பிட வைக்கலாம். சின்ன சின்னதா நொருக்கு அயிட்டம் சாப்பிட ஒரு கிண்ணத்தில்வ் வைகக்லாம்
அப்படியே வைட்டா துள்ளி இடிக்க தான் செய்யும்.

அடி பட்டால் உடனே நெல்லிக்காய் அளவு வீங்கி இருக்கும் அதுக்கு ஐஸ் கட்டி எடுத்து ஒரு கர்சீப்பில் சுற்றி ஒத்தடம் கொடுக்கனும்,
வீங்கிய இடத்தை சுற்றி தைலம் தேச்சு விடனும் ரொம்ப வலிக்காம இருக்கும்.
பிறகு டாக்டரிடம் காண்பிக்கலாம்.

Jaleelakamal

சிமி வாக்கர் குழந்தைகளின் காலெலும்புகளுக்கு அவ்வளவாக நல்லதல்ல.......சமைக்கும் நேரம் குழந்தையை தூங்க வையுங்கள்......
அவன் எழுந்ததும் விளையாடுங்கள்,பிடித்த பொருளை அவன் முன் வைத்து எடுக்கத் தூண்டுங்கள்......கை பிடித்து நடக்க வைக்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள்....வாக்கரில் அதிக நேரம் விடாதீர்கள்......இப்போது என் பையனுக்கு 2வருடம் 6மாதங்கள் ஆகிவிட்டது.அவனை பள்ளியில் விட்டுட்டேன் ,இப்போது விடுப்பு....என்னை சும்மா ரேணுன்னே கூப்பிடுங்கள் தவறில்லை......

மேலும் சில பதிவுகள்