பட்டாணி-உருளை பால்கறி

தேதி: May 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பட்டாணி - 100கி
உருளைகிழங்கு - 250கி
வெங்காயம் - 1
தக்காளி சிறியது - 1
பால் - 1/4 டம்ளர்
உப்பு தேவைக்கு
கொத்தமல்லி இழை தேவைக்கு

அரைக்க:
சீரகம் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
தேங்காய் - 1/4 மூடி
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது


 

உருளைக்கிழங்கு பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்க வேன்டும்.இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை தண்ணிர் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.உருளைகிழங்கு பட்டாணி சேர்த்து வேக வைக்க வேன்டும்.
இறக்கும் போது மீதமுள்ள எண்ணெய் பால் சேர்த்து ஊற்றி கொதி வந்ததும் கொத்தமல்லி இழை தூவி இறக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் மணமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் நித்யா,
உங்கள் குறிப்பு மிகவும் எளிமையாக இருக்கிறது. நாளை செய்யலாம் என்றிருக்கிறேன். இது எதற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று சொன்னால் உதவியாய் இருக்கும்.

சுஜாதா இது எங்கள் வீட்டில் விசேஷ நாட்களில் செய்வோம்.சாம்பார் கூட்டு பொரியல் வறுவல் மொத்தமாக சமைக்கும் போது இந்த கூட்டு தான் இருக்கும்.நீங்கள் கேட்ட பிறகு தான் மத்த நேரம் செய்யலனு யோசிக்கறேன்.நன்றி. நீங்க செய்யனும்னு நெனைச்சதுக்கும் நன்றி

vetri nichayam