பட்டிமன்ற தலைப்புகள் - 2

இங்கே யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு தோன்றும் தலைப்பை பதிவிடலாம். ஒருவரே எத்தனை தலைப்புகள் வேண்டுமானலும் தரலாம்.

பட்டிமன்றத்துக்கு நடுவராக வருபவர்கள் இங்கே உள்ள தலைப்புகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும். அந்த தலைப்பு நிச்சயமாக அவர்களே இங்கே கொடுத்ததாக இருக்க கூடாது.

பழைய பட்டிமன்ற தலைப்புகள் இழை காண, அதிலிருந்து தலைப்புகள் தேர்வு செய்ய...

http://www.arusuvai.com/tamil/node/10388

தோழிகள் தலைப்புகளை இனி இந்த இழையில் சேர்க்கலாம்... நடுவர் இந்த இழையில் இருந்தோ அல்லது பழைய இழையில் இருந்தோ பட்டிக்கு தலைப்பை தேர்வு செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிக்குத் தலைப்புகள்:

1.சமச்சீர் கல்வித்திட்டம் அவசியமா?அநாவசியமா?
2.அரசுத் தேர்வுகள் தேவையா?தேவையில்லையா?
3.அரசுத் தேர்வுகள் வேளைக்கு ஆட்கள் எடுக்கிறதா?அரசுக்கு பணம் ஈட்டுகிறதா?
4.நவீன மருத்துவ முறைகளால் பயனுள்ளதா?இல்லை அவற்றால் வீண் செலவுகளா?
5.வெளிநாடுவாழ் தமிழ் மக்கள் பிள்ளைகள் எப்படி வளர விரும்புகின்றனர்? வெளிநாட்டுப் பண்பாட்டிலா?இல்லை நமது பண்பாட்டிலா?

தலைப்புகள் :

இலவசங்கள் அவசியமா அநாவசியமா ?

தனியார்மயமாக்கல் சாமானியருக்கு லாபமா நட்டம்மா ?

மக்களின் நலன் காக்கும் அரசியல் வர தேவை அனுபவஅறிவா , இளைஞர்கள் திறனா ?

தொலைக்காட்சிகளில் சென்சார் முறை தேவையா தேவையற்றதா ?

வலி விலகியதை அனுபவி . பிரச்சினை தீர்ந்த பின் பாடல்கள் இனிக்கும் . :)

தலைப்பு, தற்போதைய கால கட்டத்தில் இந்தி படிப்பு அவசியமா?. அவசியமில்லையா?.//

இந்தத் தலைப்பு நன்றாக இருக்கிறதே!

அடுத்த பட்டியில் இதை விவாதிக்கலாமா?
அன்புடன்
ஜெமாமி

தலைப்புகள்:
அலோபதியா? ஆயுர்வேதமா? எது சிறந்தது?
ஆவிகள் உள்ளதா? இல்லையா?
பிரபலமானவராக இருப்பது ஒருவருக்கு வரமா? சாபமா?
"பொம்பளை சிரிச்சா போச்சு" இந்த வாக்கியம் இன்றைக்கு பொருந்துமா? பொருந்தாதா?
ஒருவருக்கு இயற்கையில் அமைந்த அழகே போதுமா? அல்லது ஒப்பனை அவசியமா?

இதுவும் கடந்து போகும்.

1.ஐடி துறையால் நம் நாட்டிற்கு சாதகமா?பாதகமா?
2.என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது? பள்ளி பருவமா?கல்லூரி பருவமா?
3.காதலை போற்றுவதில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?
4.பெண்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டு போதுமானதா?இல்லையா?
5.ஒரு வீட்டிற்கு மாப்பிளையா போவது கஷ்டமா? மருமகளா போவது கஷ்டமா?
6.இளைய தலைமுறை அரசியலை வரவேற்கிறதா?வெறுக்கிறதா?
7.காதலை முதலில் சொல்வது ஆணா,பெண்ணா?
8."ஆண் என்ன?பெண் என்ன?எல்லாம் ஓரினம் தான்", இவ்வாசகம் இக்காலத்தில் உண்மையா?

மீண்டும் தலைப்புகளோடு வருகிறேன்.

ரம்யா
நன்றே செய்!! அதை இன்றே செய்!!

பட்டிக்கான தலைப்புகளை இன்னும் எதிர்பார்க்கிறோம் தோழிகளே........
உங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக வடித்துக் கொடுங்கள் தோழிகளே.....

பட்டிக்கு தலைப்புகளை வாரிவழங்குமாறு தோழிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.....
எனது தலைப்புகள்:
1.இன்றைய ஆசிரியர்கள் எப்படி இருக்கின்றனர்?இரண்டாம் பெற்றோராகவா?அல்லது பூதமனம் கொண்ட வில்லன்களாகவா?
2.நிலநடுக்கம்,பூகம்பம்,எரிமலைகளுக்கு காரணம் என்ன?நமது அறியாமையா?அல்லது மெத்தனமா?
3.அழிவைக் கொடுக்கும் டாஸ்மாக்கை அரசு நடத்தும் அரசு நடத்தக் கூடிய பள்ளிகள்,நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும்.. இது சரியா?தவறா?

இப்ப நான் இருக்கும் மனநிலைல சொல்ல கூடிய ஒரே தலைப்பு :-(

முதலாளிகள் உள்ளூரில் இருப்பது நல்லதா?? வெளியூரில் இருப்பது நல்லதா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

1.நாகரீகம் என்பது பகுத்தறிவின் மூலம் வந்ததா?கல்வியறிவின்மூலம் வந்ததா?
2.அதிகம் சுமை தாங்கி யார்?ஆண்களா?பெண்களா?
3.கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டா?இல்லையா?
3.வீரம் என்பது பயம் இல்லதமாதுரி நடிப்பதா?மனதைரியத்துடன் போராடுவதா?
4.ஒருதலைக் காதலின் காரணகர்த்தா ஆண்களா?பெண்களா?
5.ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா?முடியாதா?
6.பெண்சிசு படுகொலைக்கு காரணம் வறுமையா?பெற்றோரா?சமூகமா?
7.அதிகம் சுறுசுறுப்பானவர்கள் ஆண்களா?பெண்களா?
8.தைரியமாய் காதலை முதலில் சொல்வது ஆண்களா?பெண்களா?
9.உண்மையான ஆண் பெண் நட்பு சாத்தியமானது பள்ளி வாழ்க்கையிலா?கல்லூரி வாழ்க்கையிலா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்