"தமிழ் வளர்த்த சங்கப் பாடல்களின் மன்றம்"

கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தினைச் சங்க காலம் என்று சொல்கின்றோம்...,இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களையே சங்கப் புலவர்கள் என்கின்றோம். இவர்களால் இயற்றப்பட்ட பாடல்களே சங்கப்பாடல்கள் எனப்படுகின்றது.இந்தப் பாடல்களை அறிஞர்கள் பலரும் சேர்ந்து பத்துப்பாட்டு,எட்டுத் தொகை என்று இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

சங்கப் பாடல்களை முடக்கிவிடாமல், நுட்பமான ஆய்வுகளை
மேற்கொண்டால்,பண்டைத் தமிழரது வாழ்வை முழுமையாகப் பெற முடியும்.
தமிழில் நமக்குக் கிடைத்திருக்கின்ற இலக்கியங்களில் சங்கப் பாடல்கள்
என்று கூறப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியனவே காலத்தால் மிகப்
பழமையானவையாக அமைந்துள்ளன. தமிழரது சமூக-பொருளிய-பண்பாட்டு வரலாற்றினை அறிந்துகொள்ள இந்த இலக்கியச் செல்வங்களே பெருமளவுக்குப்
பயன்படுகின்றன.

சமூக-பொருளிய-பண்பாட்டுத் தாக்கங்களுக்கிடையே,புதிய மாற்றங்களைப்
புறக்கணிக்க முடியாமலும் முன்னைய முறைமைகளை முழுமையாகத் துறக்க
முடியாமலும் இருந்த சூழலில் ஏற்பட்டிருந்த மன உணர்வுகள், மனப்
போராட்டங்கள் ஆகியன, சங்கப் பாடல்களில் தெளிவாகவும் விரிவாகவும்
வெளிப்படையாகவும் காட்டப்பெற்றுள்ளன.

எட்டுத் தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலம் குறிப்பிடுவர்:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறந்த எட்டுத்தொகை.

பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலம் குறிப்பிடுவர்:

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

இந்த நூல்களையும் இன்ன பிற தமிழ் காப்பியம்,காவியங்கள்,தமிழ் வளர்ப்பு பாடல்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே இந்த இழை.......

கணிணியில் தமிழை ஏற்றினால் மட்டும் போதாது......தமிழ் மொழியைப் பற்றிய அறிவுகள் வளர வேண்டும், கற்றுக் கொள்ளாமல் வளர்க்க முடியுமா..?தெரிந்து கொள்ளாமல் கற்க முடியுமா..?

தெரிந்து கொள்ளவும்,கற்றுக்கொள்ளவும்,வளர்க்கவும்......இந்த தமிழ் பற்றுள்ள தமிழ் மாணவியின் சின்ன முயற்சிதான் இது.........
தோழிகள் தெரிந்த பாடல்களைப் பற்றிக்கூறி (விளக்கத்துடன்)அனைவருக்கும் கற்றுக் கொள்ள உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்...............

பத்துப்பாட்டில் முதலாவது "திருமுறுகாற்றுப்படை".இது புலவராற்றுப் படை,முருகெனவும் வழங்கப்படுகின்றது.இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது.இதன் ஆசிரியர் "மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார்".இவரின் இயற்பெயர் "கீரன்". நெடுநல்வாடையை இயற்றியவரும் இவர்தான்.இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான்.இந்நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது....
01.திருப்பரங்குன்றம்.
02.திருச்சீர் அலைவாய்
03.திருவாவினன்குடி
04.திரு ஏரகம்
05.குன்றுதோறு ஆடல்
06.பழமுதிர் சோலை
இதில் 10 தனிப்பாடல்களும் உள்ளன........

ரேணுகா ,
முதலில் உங்களுக்கு நன்றி .. "மெல்ல தமிழ் இனி சாகும் " பலித்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு அரங்கத்தில் இத்தகைய சிறப்பான சிந்தனையை கொண்டு வந்ததற்கு .. :)

என் அம்மா தமிழ் ஆசிரியர் என்பதால் செய்யுள் , சங்க பாடல்கள் எனக்கு அதிகமாகவே அறிமுகமாகின . ஆயினும் காற்று திசை மாறி , நான் கல்கி ஜெயமோகன் ,பின் சுஜாதா எஸ் ரா என்று நவீன இலக்கியத்திற்கு மாறி விட்டேன் ,. இப்போது உங்கள் பதிபின்னை படித்ததும் என் அம்மா ஞாபகம் வந்து விட்டது .

மிக்க நன்றி..
இன்னும் நிறைய வெளியிடவும் .

மீண்டும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் . :)

வலி விலகியதை அனுபவி . பிரச்சினை தீர்ந்த பின் பாடல்கள் இனிக்கும் . :)

வணக்கம் பிரீத்தி ...
வாழ்த்துக்கு நன்றி ....
முதல் உறுப்பினராக சேர்ந்துள்ளீர்கள்.........
//மிக்க நன்றி..
இன்னும் நிறைய வெளியிடவும் .

மீண்டும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் . :)//

இப்படிச் சொல்லி தப்பித்து ஓடலாம்னு நினைக்கறீங்களா? சங்கப்பாடல்கள் அறிமுகமானவர்கள் விளக்கினால் தானே நாங்கள் தெரிந்து கொள்ளமுடியும்.......
மனதில் உள்ளவற்றை நினைவு படுத்தி நீங்களும் எழுதுங்கள்.....வரிசையாக இருந்தால் படிப்பவர்களுக்கு எளிமையாகும்........

ஹா ஹா :)))

சரி எனக்கு நினைவு உள்ளதை அனுப்புகிறேன் ..

தவறு இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டி என்னை தெளிவு படுத்தவும் :)

வலி விலகியதை அனுபவி . பிரச்சினை தீர்ந்த பின் பாடல்கள் இனிக்கும் . :)

பத்து பாட்டு நூல்கள் : பாட்டுடைதலைவன்/ஆசிரியர்/திணை/பாவகை/வரிகள்

திருமுருகாற்று படை

பொருநர் ஆற்றுப்படை :சோழன் கரிகால் பெருவளத்தான்/முடத்தாமக் கண்ணியார்/பாடாண் தினை/ஆசிரியப் பா /248.

சிறுபாணாற்றுப்படை:ஓய்மநாட்டு நல்லிய கோடன் /நத்தத்தனார்/பாடாண் தினை/ஆசிரியப் பா/269

பெரும்பாணாற்றுப்படை:தொண்டைமான் இளந்திரையன்/கடியலூர் உருத்திரங்கண்ணனார்/பாடாண் தினை/ஆசிரியப் பா/500

முல்லை பாட்டு : தெரியவில்லை :((

மதுரை காஞ்சி :தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன்/மாங்குடி மருதனார்/காஞ்சி/ஆசிரியப் பா /782

நெடுநல் வாடை:நக்கீரனார்/வாகை/ஆசிரியப் பா /188

குறிஞ்சி பாட்டு :கபிலர் /குறிஞ்சி /ஆசிரியப் பா /261

பட்டின பாலை :கடியலூர் உருத்திரங்கண்ணனார்/கரிகாற் பெருவளத்தான்/பாலை 301

மலை படுங்கடாம் :பெருங்கௌசிகனார் /நன்னன் வேண்மான்/பாடாண் / ஆசிரியப் பா /583

இதில் குறிஞ்சி பாட்டு மற்றும் முல்லை பாட்டின் பாட்டுடை தலைவன் எனக்கு தெளிவஆகா தெரியவில்லை .

குறிஞ்சி பாட்டு மழையும் ,மலைவாழ் மக்களின் இயல்பும் அறிய பெரும் உதவுகிறது . குறிஞ்சி பாட்டின் அம்சம் , தலைவனை நினைத்து பிரிந்து வாடும் தலைவிக்கு குறி சொல்வதாகவும் அமையபெற்றது.

முழு விளக்கம் தெரிந்தால் தோழிகள் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்

வலி விலகியதை அனுபவி . பிரச்சினை தீர்ந்த பின் பாடல்கள் இனிக்கும் . :)

முல்லை பாட்டு : முல்லைப்பாட்டு : காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு: ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க கபிலர் பாடியது......

இவற்றுள்,

திருமுருகாற்று படை,
பொருநர் ஆற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
மலை படுங்கடாம்,
மதுரை காஞ்சி,

இந்த ஆறு நூல்களும் அகப்பொருள் பற்றியன....

முல்லை பாட்டு,
குறிஞ்சி பாட்டு,
பட்டின பாலை,

இந்த மூன்று நூல்களும் புறப்பொருள் பற்றியன....

நெடுநல் வாடை : இந்நூல் அகம் மற்றும் புறம் இரண்டைப் பற்றியும் குறிப்பிடுகின்றது....

எட்டுத் தொகை: இதில் நற்றிணை முதல் நூல்.

நற்றிணை : இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்டது.175 புலவர்களால் பாடப்பட்டது.ஆனால் தற்போது 192 புலவர் பெயர்கள் காணப்படுகின்றன.இதைத் தொகுத்தவர் தெரியவில்லை.ஆனாலும் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த "பாண்டியன் மாறன் வழுதி"ஆவார்.இந்நூலை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்..

குறுந்தொகை : குறைந்த அடிகளை உடைய பாடல்களால் தொகுக்கப்பட்ட நூல். அதனால்தான் குறுந்தொகை எனப்பட்டது.இந்நூல் 400 பாடல்கள் கொண்டது.205 புலவர்களால் பாடப்பட்டது.இந்நூலில் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும்,20 பாடல்களுக்கு நச்சினார்கினியாரும் உரை எழுதியுள்ளனர்.

ஐங்குறு நூறு : ஐந்து திணைகளையும் ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது.இந்நூலின் பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிகளுக்குள் இருக்கும்.இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐங்குறு நூறு எனப்பெயர் பெற்றது.இதைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.தொகுப்பித்தவர் "யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன்."

கலித்தொகை : இந்நூல் 150 கலிப்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒருபுலராக ஐந்து புலவரகளால் பாடப்பட்டது.
பாலை - பெருங்கடுங்கோ,
குறிஞ்சி - கபிலர்,
மருதம் -மதுரை மருதனிளநாகனார்,
முல்லை - சோழன் நலுருத்திரன்,
நெய்தல் - நல்லத்துவனார்.
இந்நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.

அகநானூறு : இந்நூல் அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது.இது நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகின்றது.இதனைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 146.இந்நூலைத் தொகுக்கச்செய்தவர் "பாண்டியன் உக்கிரப் பெருவழுதி".தொகுத்தவர்"மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன்".

புறநானூறு : இந்நூல் புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது.இதனை புறம்,புறப்பாட்டு என்றும் அழைப்பர்.இதைப் பாடிய புலவர்கள் 160 பேர்..இந்நூலுக்கு பழைய உரை உள்ளது.இதற்கு "அவ்வை துரைசாமிப் பிள்ளை" விளக்க உரை எழுதியுள்ளார்..

பதிற்றுப்பத்து : இந்நூல் பத்துப் பத்து அகவற்பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்டது.ஒவ்வொரு பத்தும் தனித்தனியே,ஒவ்வொரு புலவரால்,ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும்.நூலின் முதல் பத்தும்,பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை. இந்நூலைத் தொகுத்தவர்,தொகுப்பித்தவர் தெரியவில்லை.

பரிபாடல் : இசைப் பாடல்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர்பெற்றது. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.

இந்தப்பதிவைப் படிக்கப் படிக்க என் தமிழ் ஆசிரியை நினைவு வந்தது... என்ன ஒரு பதிவு...!!! தொகுத்து வழங்கியுள்ள முறை அருமையோ அருமை... தொடருங்கள் உங்கள் தமிழ்த் தொண்டை... என்னால் முடிந்தவற்றை நானும் தருகிறேன்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

வாருங்கள் வித்யா உங்களையும் மன்றத்தில் சேர்த்தாகிவிட்டது............
நாம் இணைந்து
இணையத்தின் அறுசுவை உதவியால்
"தமிழ் வளர்ப்போம் வாருங்கள்........."

மேலும் சில பதிவுகள்