சாப்பாட்டு பிரியர்களுக்காக மட்டுமே :)

சொர்கமே என்றாலும் நம்மூரை போல வருமா??? எதற்கு சொல்கிறோமோ இல்லையே சாப்பாட்டு விஷயத்திலாவது கண்டிப்பாக சொல்லுவோம். அப்படி நீங்கள் சென்று நொந்துக் கொண்ட ரெஸ்டாரன்ட் அல்லது ஆஹா இந்த கடையில் சாப்பாடு சூப்பர் நண்பர்களுக்கெல்லாம் சொல்லணும் என்று நினைக்கும் ஒரு இடம் அல்லது இந்த இடத்தில ஒரு ஐட்டம் நன்றாக இருக்கும் இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். வெளி நாடு மட்டும் என்றில்லை இப்பொழுது பார்த்தால் மதுரை காரர்களுக்கு சென்னை வந்தால் இங்குள்ள சாப்பாடு கூட என்னடா இது "சென்னை காரர்களுக்கு நாக்கே இல்லையா ?! :)" என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. ஆப்பக் கடை அன்னமா முதல் ஸ்டார் ஹோட்டல் வரை எல்லாவற்றை பற்றியும் சொல்லலாம்.....:)

வித்தியாசமான உணவு உணவு விடுதியின் பெயர் என்ற தலைப்பில் மன்றத்தில் ஏற்க்கனவே பேசி இருக்கிறோம். அதனுடைய லிங்க் இதோ.....
http://www.arusuvai.com/tamil/node/15101

சென்னையில் மயிலாப்பூர் நம்ப கபாலி கோவில் தேர்முட்டியில் ஒரு பஜ்ஜி கடை (இருந்தது....இப்போதுது இருக்கிறதா என்று தெரியவில்லை?!)...அங்கே சுட சுட பஜ்ஜி வாங்குவோம் (அதுவும் மிளகாய் பஜ்ஜி மட்டும் தான்) அதற்க்கு தொட்டு கொள்ள ஒரு சட்னி ஒன்னு கொடுப்பாங்க பாருங்க அங்கே மிளகாய் பஜ்ஜி காரத்தை தூக்கி சாப்பிட்டு விடும் அளவுக்கு காரமா இருக்கும். இருந்தாலும் இரண்டு பஜ்ஜிக்கு ஒரு கப் அளவேனும் சட்னி வாங்கி வாங்கி சாப்பிடுவோம். முடித்ததும் எண்டா நிறுத்தினோம் என்றிருக்கும்......காரம் காதை புடுங்கும்....இருந்தாலும் திரும்பவும் எப்போ டா சாப்பிடுவோம் என்று தான் இருக்கும்.

திநகர் பனங்கல் பார்க்கில் ஒரு கையேந்தி பவன் இருக்கு அங்கே எல்லாமே நன்றாக இருக்கும். இரவு தான் கடை இருக்கும். ரொம்ப கூடமும் இருக்கும். கூடத்தில் முந்தி அடிச்சி தான் வாங்கணும். நின்றுக் கொண்டே தான் சாப்பிடனும். அந்த சுவைக்காகவே அங்கே போகலாம்.

பெங்களூரில் ஒரு தெரு இருக்கிறது அங்கே முழுவதுமே கையேந்தி பவன் தான். இங்கேயும் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும். அக்கி ரொட்டி பாதாம் பால் எல்லாமே ரொம்ப சூப்பர்.

மீண்டும் வேறு சில இடங்களுடன் வருகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு லாவண்யா,

மதுரையில் ஹோட்டல்களில் சாப்பிட்ட்டவங்களுக்கு கண்டிப்பாக சென்னை ஹோட்டல் ருசி அப்படி ஒன்றும் பிடிக்காது. மதுரையில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும், சாம்பார் வடை செம டேஸ்டாக இருக்கும். சென்னையில் சாம்பார் வடையின் மேல், வதக்காத பச்சை வெங்காயம் தூவியிருப்பாங்க. எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

இங்கே சென்னையில் சஞ்ஜீவனம் ஹோட்டல் பற்றி சொல்றேன் - இந்த ஹோட்டல் நுங்கம்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் இருக்கு. முழுக்க முழுக்க, மண் பாத்திரங்கள், தாமிர பாத்திரங்களில் சமைக்கிறாங்க. எந்த விதமான ஃபுட் கலர்ஸும் சேக்கறதில்லை. வாழை இலையில் பரிமாறுவாங்க.

ராஜகீயம் என்று ஒரு மீல்ஸ் - முதலில் குட்டியாக 4 கப்(சின்ன ஒயின் க்ளாஸ் டைப்பில் இருக்கும்) ரா ஜூஸ் - வாழைத்தண்டு ஜூஸ், கீரை ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் - இப்படி. இத முதலில் ஒவ்வொன்றாகக் குடிக்கணும். அப்புறம் பச்சை காய்கறிகள் - ரய்த்தா, சாலட் டைப்பில் இலையில் வைப்பாங்க. அதை சாப்பிடணும். அப்புறம் ஹாஃப் குக்ட் - சில காய்கறிகள் வைப்பாங்க. அப்புறம் சிவப்பரிசி புட்டு, இதற்குப் பிறகுதான் சாதம், சாம்பார், ரசம், எல்லாம்.

சாப்பாடு முடிந்ததும், உள்ளங்கையை நீட்ட சொல்லி, அதில் தேன் ஊற்றுவாங்க. அதை அப்படியே(!) சாப்பிடணும். பிறகுதான் கடைசியில் குடிக்கிறதுக்கு தண்ணீர் வைப்பாங்க.

ஆரம்பத்தில் ஒரு மீல்ஸ் 100 ரூபாய் சார்ஜ் பண்ணினாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக விலை கூட்டி, சமீபத்தில் 190 ரூபாய் ஆனது.

என் கணவருக்கு இந்த டைப் மீல்ஸ் ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி அங்கே விசிட் பண்ணுவாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

தலைப்பை பார்த்துட்டு வராமல் இருப்பேனா.. ;)

நான் ஈரோட்டில் இருக்கும் போது குப்பண்ணானு ஒரு ஹோட்டல் நான் வெஜ்க்கு ரொம்ப ஃபேமஸ்னு கேள்விப்பட்டு ரொம்ப நாள் போகாமல் இருந்தேன். அப்றம் அப்பாவோடு போயி பார்த்தால்.. அவ்வளவா சொல்லிக்கும்படி இல்லை. அப்பா சொன்னாங்க பழைய டேஸ்ட் இல்லைனு.

இப்போ தான் ஒரு தோழருடன் நெட்டில் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் திண்டுக்கல் சென்று வந்ததாய் கூறினார். உடனே நான் பிரியாணிக்கு பெயர் போன திண்டுகல் பிரியாணி சாப்பிட்டிங்களானு கேட்டேன். சாப்பிட்டேன் ஆனா பழைய ருஸி இல்லைனு சொன்னார். அதே தான் க்ருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாவிலும் நான் உணர்ந்தது. அந்த கடைகளுக்குனு இருக்கும் பேரை ஏன் தான் கெடுத்துக் கொள்கிறார்களோ.. மீண்டும் அடைவது , நல்ல பெயர் பெறுவது எல்லாம் கடினம் இல்லையா?

நான் திருப்பூரில் ஹனிஃபானு ஒரு பிரியாணிக் கடைக்கு அடிக்கடி போவேன். எனக்கு மிகவும் பிடிக்கும். ஆர்டர் செய்யும் போதே ஸ்க்வாஷ் இருக்கானு தான் முதல் கேள்வி கேப்பேன். அது சாப்பிட்டதும் லெமன், மிண்ட், இஞ்சி, மல்லித் தலைனு எல்லாம் சேர்ந்து ஒரு கிரீன் கலர்ல ஜில்லுனு சூப்பரா ஒரு ஜூஸ் குடுப்பாங்க. சாப்பிட்டு வண்டி ஏறுவதற்குள் ஜீரணம் ஆகிவிடும்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இங்கு எல்லா ஹோட்டலிலும் காரம் (நமக்கு) கொஞ்சம் கம்மியாக தான் இருக்கும். இங்குள்ளவர்கள் காரமே சாபிடமாட்டர்கள். அவர்கள் சாப்பிடும் இடத்தில எல்லாம் நிறையவே கிரீம் போட்டு தான் எல்லாமே சமைத்திருப்பார்கள். எனக்கு தான் என்னடா இது இனி நான் வெளியே சாப்பிடவே மாட்டேன் என்று சபதம் எடுப்பேன். ஆனாலும் ஆசை யாரை விட்டது. மறு முறையும் எங்காவது சாப்பிட போவோம் திருப்பியும் நொந்து பொய் வருவேன். நேற்று எதேச்சையாக ஒரு கடை பார்த்தேன் பார்த்தவுடன் உள்ளே நுழைந்தேன். கடையின் பெயரே ("மதுரை இட்லி கடை")என்னை உள்ளே இழுத்துக் கொண்டு போனது. மெனுவை பார்த்ததும் எல்லாமே சாப்பிட ஆசையாக இருந்தது. சரி ஒரு கார தோசை மற்றும் சாம்பார் வடை ஆர்டர் பண்ணி வந்து உட்கார்ந்தேன். ஆர்டர் பண்ணும் போதே அவர் சொன்னார் ரொம்பவும் காரமாக இருக்கும் என்று. நானும் சரி என்றேன். ஏனென்றால் இங்குள்ள காரம் தான் நமக்கு தெரியுமே. தோசை வந்ததும் காரம் மூக்கை துளைத்தது. ஆசையில் சாம்பார் வடைக்கு முன்னால் தோசை சாப்பிட்டேன். காரம் கண்ணில் நீர் வர வைத்தது. ரொம்ப நாள் கழித்து இப்படி ஒரு கார சாரமான உணவை சாப்பிட்ட ஒரு திருப்தி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சென்னை தாம்பரத்திலுள்ள கேம்ப்ரோடில் ஆனந்தி இட்லிகடையில் நம் வீட்டுருசியிருக்கும்.செமடேஸ்ட் ஆனா என்னன்னா அங்கு நின்னுகிட்டுதான் சாப்பிடனும்.அங்கு பரோட்டா,இட்லி,பொங்கல்,எல்லாமே செம டேஸ்ட்டுங்க.

சாப்பாடு விஷயம்னா வராம இருப்போமா?! நல்ல சாப்பாடு கிடைக்குதுங்கறதுக்காக முப்பது நாப்பது கிலோமீட்டர் வேணும்னாலும் போய் சாப்பிடுவோம்ல :). கொஞ்ச நாள் முன்னாடி நிறையபேர் கொடுத்த லிஸ்ட் இங்க இருக்கு.
http://www.arusuvai.com/tamil/node/15101

அடுத்த லிஸ்ட்டோட சீக்கிரம் வரேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நேத்தே உங்களுடையதை பார்த்துவிட்டேன்.ஆனா பதிவு போட நேரமில்லை. வடபழனியில் ஏ.வி.எம் ஸ்டியோ எதிர்த்தாப்பல முகாரி பிரியாணி கடை இருக்கும்.நல்லா டேஸ்டா சிக்கன் பிரியாணி கிடைக்கும்.ஆனா ஆண்கள் அதிகம் பேர் வருமிடம்,பேமிலி இருக்க மாட்டார்கள்.அதனால் என் கணவர் வீட்டிருக்கு வாங்கிட்டு வருவார்கள்.

5 வருடங்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் இரவு நேரத்தில் ஒரு வேனில் பாஸ்ட் புட் கடை இருக்கும்.அதில் நூடுல்ஸ் ரொம்ப நல்லா இருக்கும்.

காரைக்குடியில் கொப்புடையம்மன் கோவில் பக்கத்தில் பிரஸ்டினட் ஹோட்டல் இருக்கும்.டிபன் எல்லாம் நல்லா இருக்கும்.விலையும் குறைவு.ஆனா பெரிய ஹோட்டல் மாதிரி சுத்தமாக இருக்காது.டேபிள்,பென்சு தான் போட்டிருப்பார்கள்.குறிப்பா சொன்னா ரோட் சைடு ஹோட்டல் மாதிரி இருக்கும்.

போன தடவை இந்தியா போயிருந்தப்ப வடபழனியில் இருக்கும் வசந்த பவன் ஹோட்டல் போய் ரொம்ப நொந்து போய் திரும்ப வந்தோம்.ஆர்டர் கொடுத்து 2 நிமிடங்களில் வந்தது.நாங்கள் சொன்னது வெஜ் நூடுல்ஸ்,தோசை.அது எப்படி என்றால் வேறு ஒரு ஆர்டர் கொடுத்திருப்பார்கள் போல அதை எங்களுக்கு எடுத்து வந்திருக்கிறார்க்ள்.சுடாவே இல்லாமல் ஜில்லுனு இருந்தது.நல்லா சண்டை போடுட்டு வந்துட்டோம்.

Expectation lead to Disappointment

நான் இருப்பது சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும் இந்தோனேஷிய தீவு பத்தாம் னு நிறைய பேருக்குத் தெரியும் :). வாரந்தோறும் சிங்கையில் இருந்து நிறைய இந்தியர்கள் இங்கே வராங்க. அவங்களுக்காக நல்ல சாப்பாடு கிடைக்கும் இடங்கள் சொல்லப் போரேன்.

எந்த ஊருக்குப் போனாலும் எனக்கு இந்திய சாப்பாடுதான் வேணும்னு நினைப்பவர்களுக்கு இரண்டு இடங்கள் இருக்கு.

1. மஹாராஜா ரெஸ்ட்ராண்ட். இது பத்தாம் செண்டரில் இருக்கு. எந்த டேக்சி ட்ரைவரிடமும் "ருமா மக்கானான் இண்டியா மஹாராஜா" ன்னு சொன்னா கொண்டு விட்டுடுவாங்க.

2. சென்னை ரெஸ்ட்ராண்ட். இதுவும் பத்தாம் செண்டரில்தான் இருக்கு.

ரெண்டு கடையிலயுமே வெஜ், நான்வெஜ் ரெண்டுமே கிடைக்கும். காரசாரமா வேணும்னா சென்னை ரெஸ்ட்ராண்ட் தான் பெஸ்ட்.

ருசியா இருந்தா போதும் எந்த வகை சாப்பாடுன்னாலும் ஓகேன்னா ரெஸ்ட்ராண்ட் கெடீரி ரொம்ப நல்லா இருக்கும். இங்கே பண்டான் சிக்கன் ரொம்ப நல்லா இருக்கும். நகோயா ஹில்ஸ் மாலில் உள்ள ஃபுட் ஸ்ட்ரீட்டில் மீ ரெபூஸ், மீ கோரேங், லாக்ஸா, சோத்தோ அயாம் எல்லாமே சூப்பரா இருக்கும். அவகேடோ ஜூஸை மிஸ் பண்ணிடாதீங்க. சிங்கப்பூரில் எங்க தேடினாலும் கிடைக்காது. ஜூஸ் ஆல்புகாட் னு கேட்டா கிடைக்கும்.

சீ ஃபுட் பிடிக்கும்னா என்னோட சாய்ஸ் கோல்டன் ப்ரான் ரெஸ்ட்ராண்ட். ஷ்ரிம்ப் பேஸ்ட்(பெலாச்சான்) வாசனை பிடிக்காதுன்னா முதலிலேயே சொல்லிட்டா போதும். அது சேர்க்காம செய்து தருவாங்க. அங்க போனா கண்டிப்பா இக்கான் அசாம் பெடாஸ் ட்ரை பண்ணுங்க. காரமா புளிப்பான அந்த மீன்கறி நினைச்சாலே எச்சில் ஊறுது :). பெப்பர் கிராப் ம் சூப்பரா இருக்கும்.

எங்க ஊருக்கு வந்துட்டு இரவு நேரங்களில் ரோட்டோரமாக கிடைக்கும் சிக்கன் சாத்தே வை மிஸ் பண்ணிடாதீங்க. செம டேஸ்ட். சிங்கையில் அந்த டேஸ்ட் சைனா டவுன் ஃபுட் ஸ்ட்ரீட்டில் மட்டுமே கிடைக்கும். இந்த சாத்தே சாப்பிடறதுக்காகவே பத்துகிலோமீட்டர் பயணம் செய்வோம்ல நாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

enga oorula ulla ellea hotellayum sappadu nalla irukkum.......... soop superp.

சீதாலக்ஷ்மி

சென்னை வரும்போது என்னை கண்டிப்பாக இந்த சஞ்ஜீவனத்துக்கு கூட்டிட்டு போங்க என்ன சரியா? நீங்க ஏற்க்கனவே இதை பற்றி சொல்லி என்னை ஜொள்ளு விட வெச்சிருக்கீங்க....அதனால் கட்டாயம் போறோம். மதுரையில் வளந்தவங்களுக்கு இந்த சென்னையில் உள்ள சஞ்ஜீவனம் பிடிக்குதுனா அது எவ்ளோ சூப்பரா இருந்திருக்கணும் :) (ஜொள்ளு விட்டு பாதி பதிவே காணோம் ! )

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்