பருப்பு தோசை

தேதி: May 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

அரிசி - 3 கப்
துவரம்ப்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
ஒன்றும் ரெண்டுமாக பொடித்த குறுமிளகு - 1 tsp
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 2 tbsp
சீரகம் - 1 tsp
உப்பு, கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு


 

அரிசி மற்றும் பருப்பை தனி தனியாக கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கலந்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒன்னரை மணி நேரம் ஊற விடவும்.
இந்த கலவை தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் கட்டியமாக இருக்க வேண்டும்.
சீரகம், பச்சை மிளகாய், மிளகு, தேங்காய் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
ஊத்தாப்பம் போல் வார்த்தெடுக்கவும்.
இந்த தோசை வெண்ணையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்