ஜாலி ட்ரிப் - உதவுங்க தோழீஸ்!!!!

ஹாய் தோழீஸ்!!!!

எனக்கொரு உதவி வேண்டும்... நாங்க ஒரு 15 பேர் அடுத்த வாரம் ஃப்ளோரிடா ட்ரிப் போகலாம்னு இருக்கோம், எங்க 2 வயது மகளுடன். மொத்தமா 4 நாள் போறோம், சாலை வழிப் பயணம் தான் பண்ணப்போறோம்.. இந்த 4 நாளும் என் பொண்ணுக்கும் எங்களுக்கும் அவசியமா எடுத்து போக வேண்டிய பொருட்கள் என்னென்ன? நாங்க வசிக்கும் இடத்தில் இருந்து அங்க போறதுக்கு 7 மணி நேரம் ஆகலாம்,அதனால் பயணத்தின் போதும் என் குட்டிக்கு போர் அடிக்காமல் எப்படி சமாளிப்பது? நான் என்ன தான் லிஸ்ட் போட்டாலும் அங்க போனதுக்கப்புறம் அச்சச்சோ அதை மறந்துட்டோமே, இதை மறந்துட்டோமே-ன்னு வரிசையா நியாபகம் வரும்... அதனால் தான் நீங்க எல்லோரும் அவங்கவங்க அனுபவத்தில் வச்சு சொன்னீங்கன்னா எனக்கு கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்... அமெரிக்கா முழுதும் அடுத்த வாரம் 3 நாள் தொடர் லீவ் என்பதால் நம்ம தோழிகள் பலரும் கூட இந்த மாதிரி ட்ரிப் போக வாய்ப்பு இருக்கு, அதனால் நீங்க சொல்ல போறது எனக்கு மட்டும் இல்லாம இன்னும் நிறைய பேருக்கும் பயன்படும்.... பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

அனேக அன்புடன்
ஜெயந்தி

நீங்க சொல்ற மாதிரி காட்டன் ட்ரெஸ்னா கசகசன்னு இருக்காதுல்ல, கரெக்ட் தான், அதையே ட்ரிப்ல போட்டு விட்றேன். உங்க மருத்துவர் சொன்னதா நீங்க சொன்ன தகவலும் பயனுள்ளதா இருக்கு.

நீங்க நினைப்பது போல் நான் முழுக்க முழுக்க பாட்டில் ஃபுட்ஸ் மட்டும் குடுப்பது இல்லை, அது வெளியில் போறப்ப எடுத்துட்டு போவேன், வீக் எண்ட்-ல வெளில போவோமில்லயா,அப்ப அது தான் கை குடுக்கும்,அவளுக்கும் வயிறு நிறைஞ்ச திருப்தி.... நம்ம ஊர் சாப்பாடு எல்லாமே நல்லா சாப்பிடுவா, காய்கறி-ன்னா ரொம்பவே இஷ்டம், தட்டின் ஒரு பகுதில காய் வச்சுடுவேன்,அவளே எடுத்து சாப்பிடுவா, அதனால் அது ஒன்னும் பிரச்சினை இல்ல...ஆனா, இங்க மருத்துவர்களே பேபி ஃபுட்ஸை சிபாரிசு பண்றாங்களே,அதனால் தான் அதையும் குடுத்துட்டு இருக்கேன்... பழங்கள்ல வாழை, ஆப்பிள், திராட்சை, மெலன் ஃப்ரூட்ஸ் எல்லாம் நல்லா சாப்பிடுவா.. சோ,எதையும் விட்டு வைக்கலை, எல்லா ருசியையும் என்னால் முடிஞ்ச அளவு பழக்கி விட்டுட்டேன்... நீங்க சொன்ன மாதிரி 2 வயதுக்கு மேல் ரொம்ப செல்க்ட் பண்ணிதான் சாப்பிடுவாங்க, அதுக்குள்ள நம்மளும் எல்லா உணவையும் குடுத்துடணும் இல்லையா? இது எல்லாமே நான் அறுசுவை மூலமா கத்துக்கிட்டது தான்...

அனேக அன்புடன்
ஜெயந்தி

//உங்களுக்கு லேட்டா பதில் போட்றேன்னு நினைக்காதீங்க,

பரவாயில்லை. எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

coffee mug என்று நான் சொன்னது மைக்வேவில் நாம் யூஸ் பண்ணும் பீங்கான் டம்ளரைத்தான். எல்லா இடங்களிலும் பேப்பர் டம்ளர் தான் இருக்கும். அதை மைக்வேவில் யூஸ் பண்ண எனக்கு பிடிக்காது. நான் trip போகும்போதெல்லாம் சிறிய பாட்டிலில் காஃபி பொடி, டீ பாக்கெட்ஸ் (Lipton - to make a dip tea), sugar packets, boost/horlicks, பீங்கான் டம்ளர் -2 எடுத்து செல்வேன். ரூமிலோ/ கேஸ் ஸ்டேஷனிலோ குழந்தைக்கு பால் சூடு செய்யும் போது நமக்கும் வேண்டியதை போட்டு கொள்வேன். (பீங்கான் டம்ளரை, சிப்பரை clean பண்ண டிஷ் வாஷ் liquid மறந்து விடாதீர்கள், அது ரூமில் கிடைக்காது).

நானும் எப்பவும் ஆர்கானிக் மில்க் தான் குடுப்பேன். என் சிறிய பையன் (2 1/4 வயது) weight கம்மியா இருக்கிறான். அதனால் அவனுக்கு வெளியில் செல்லும்போது பீடியாஸ்யூர் குடுக்கிறேன். டேஸ்ட் நல்லா இருக்கு.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அனைவரும் நலம்தானே??

ஸ்ப்ரிங் ப்ரேக்கில் ஐந்து நாட்களுக்கு ஒரு டூர் போகலாம்னு பிளான் செய்து உள்ளோம்(பல வருடங்களுக்கு பிறகு !!!)

குட்டீஸ்களை(3 ,10 மாதங்கள் ) எப்படி சமாளிக்கறது,என்ன சாப்பிட கொடுப்பது,நாங்க வெளியில் என்ன சாப்பிடுவது..(இங்கே அமெரிக்காவில் ப்ளீஸ்..) எப்படி நீண்ட கார் பயணங்களை சமாளிப்பது..வாந்தி,travel sickness வந்தால் என்ன செய்வது..என்ன எடுத்து செல்வது,எதெல்லாம் pack செய்வது..நீண்ட நேரம் காண்டக்ட் லென்ஸ் அணிந்து travel செய்யலாமா? ரைஸ் குக்கரை விடுதியில் உள்ள தங்கும் அறையில் உபயோகபடுத்தலாமா?

கொஞ்சம் பயமாக இருக்கு இது தான் குழந்தைகளுடன் முதல் டூர்.. சொதப்பாமல் செல்ல

கொஞ்சம் உதவி செய்யுங்க..இன்னும் சில சந்தேகங்கள் தொடரும் .. இன்னும் எதாவது விட்டு இருந்தாலும் சொல்லுங்க உங்களுடைய டூர் அனுபவங்களையும் சொல்லுங்க..

என்றும் அன்புடன்,
கவிதா

அனைவரும் நலம் தான்! அட கவி டூர் போறீங்களா.....சந்தோஷமா போயிட்டு வாங்க!

முதலில் குழந்தைகளுடன் போவதால் கண்டிப்பாக ப்ளான் பண்ணியபடி நடப்பதற்கான சான்ஸ் கொஞ்சம் கம்மி தான். அதனால் முதல் இதை ஏற்பார்த்துக் கொண்டே இருக்கவும். எல்லாமே ப்ளான் படி நடந்தால் ரொம்ப சந்தோஷம் தான்!

ஐந்து நாள் காரிலா இல்லை பஸ்சிலா? இல்லை நடுவில் ப்ரேக் இருக்கா? பிளைட் என்றால் கொஞ்சம் சிரமம் இல்லை போய் சேரும் வரை. கார் என்றால் கொஞ்சம் சிரமம் தான். ட்ராவல் பண்ணும் போது அடிக்கடி ஒரு பிட் ஸ்டாப் போடவும். ஒன்றரை முதல் இரண்டு மணிக்கொரு தடவையாது ரெஸ்ட் ஏரியா சென்று ரிலாக்ஸ் செய்யவும். காரில் குழந்தைகளை சமாதனப்படுத்த அவர்களுக்கு பிடித்தமான டாய் அல்லது புக் அல்லது ம்யூசிக் போட்டு விடவும். முக்கியமானது இந்த பிடித்த விஷயம் டூர் செல்வதற்கு முன் கொஞ்சம் நாள் அவர்கள் கண்ணிலோ காதிலோ விழாமல் பார்த்துக் கொண்டால் நல்லாயிருக்கும். அதாவது பிடித்த டாய் காணாமல் போய் எதிர்ப்பாராமல் கிடைத்தால் சந்தோஷம் தானே :) குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் நிறைய காரில் வைத்திருக்கவும். பேபி காரட், செர்ரி டோமேடோஸ், குகும்பர்,ஆப்பில், கிரேப்ஸ், வாழைப்பழம், குக்கீஸ், மப்பின், சிப்ஸ், யோகர்ட், ஸ்மூதி, ப்ளேவர்ட் மில்க் போன்றவைகளை எப்பொழுதும் வைத்திருக்கவும். அவர்கள் பயணத்தால் dehydrate ஆகாமல் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடி தண்ணீர் நிறைய கொடுக்கவும்.

காரில் செல்லும்போது சிக்னஸ் பாக்ஸ் எடுத்துட்டு போங்க. எலுமிச்சை, புளிப்பு மிட்டாய் இதெல்லாம் வாந்தியை தடுக்க உதவும். பொதுவாக வாந்தி வரும்போது கவனத்தை திருப்பிவிட்டாலே போதும்......நின்றுவிடும்! இல்லையென்றால் நீங்க வால்க்ரீன்ஸ் சென்று அங்கு எதாவது கிடைக்கிறதா என்று பாருங்கள்.

எந்த இடத்துக்கு போனாலும் இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கும். உங்களுக்கு மற்ற உணவுகள் ட்ரை பண்ண பிடிக்கும் என்றால் கவலையை விடுங்க. ஹெல்தி சாய்சும் நிறைய இருக்கும்! வீட்டிலிருந்து புளிக்காய்ச்சல், எலுமிச்சை சாதத்துக்கான மிக்ஸ், தக்காளி தொக்கு, சப்பாத்தி செய்து எடுத்து செல்லலாம். ஹோட்டல் புக் செய்யும் போதே செமி கிட்சன் இருக்கிற மாதிரி பார்க்கவும். இல்லையென்றால் ஒரு மைக்ரோவேவ் பிரிட்ஜ் இருக்கும். செமி கிட்சன் என்றால் கவலை விடுங்க முழு சமையலுமே செய்யலாம் (தேவையான பொருள் கொஞ்சமாக எடுத்துட்டு போகணும் அவ்வளவு தான்). மைக்ரோவேவ் இருந்தால் ஒரு க்ளாஸ் பவுல் மட்டும் போதும் எல்லாமே செய்யலாம். இல்லை அதுவும் இல்லையா சின்ன ரைஸ் குக்கர் இருந்தால் சாதம் குழந்தைகளுக்கு பருப்பு காய்கறிகள் என்று எல்லாமே செய்யலாம்.

லென்ஸ் பற்றி எனக்கு தெரியலை.

முதல் டூர் தானே எதை பற்றியும் யோசிக்காமல் ஜமாயுங்க! இன்றைய சொதப்பல்கள் நாளைய சக்செஸ். சோ ஹாப்பி டூரிங்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
ரொம்ப நன்றி,,
ஐந்து நாட்கள் கார் பயணம் தான்.
இனிமே தான் பாக் செய்ய துவங்கணும்..

என்றும் அன்புடன்,
கவிதா

wish you a happy trip .

மத்தவங்க எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. என்னுடைய அட்வைஸ் குழந்தை சாப்பாடு சரியாக சாபிடைலை என்றாலும் பரவில்லை கண்டிப்பாக தண்ணீர் எவெரி 1 hour குடுத்துகிட்டே இறுங்க. இது ரொம்ப முக்கியம். குழந்தை வெயில்லில் dehydrate ஆகாமல் இருப்பாள்.

வெளியில் சுத்தி பார்க்க செல்லும் போது குழந்தைக்கும் உங்களக்கும் ஒரு change dress எடுத்து வச்சிகோங்க. Just in case throw ஏதும் பண்ணிட்டா மாத்துவதற்கு தேவை.

நானும் ஏன் பையன்னுக்கு வெளியில் செல்லும் போது Gerber குடுப்பேன். என் பையன்னுக்கு 2 வயது ஆக போகிறது.

Have a wonderful enjoyable trip.

நித்தி,

ரொம்ப நன்றிங்க..

கண்டிப்பாக எடுத்து போறேன்..

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்