பிலடெல்பியா - Malvern, Exton தோழிகளே உதவி ப்ளீஸ்

Philadelphia Malvern kku இடம் மாற்றம் செய்கிறோம். எந்த இடத்தில் நல்ல அப்பார்ட்மெண்ட் கிடைக்கும். எந்த பள்ளிகூடம் சிறந்தது என்று சொல்லி உதவ முடியுமா? இரண்டு மாத கைக்குழந்தையுடன் செல்வதால் அந்த இடத்தைப் பற்றி முன்கூட்டி தெரிந்தால் உதவியாக இருக்கும். இந்தியர்கள் நிறைய உள்ள அப்பார்ட்மெண்ட், climate condition- having son of age 6, so best school district etc.

Kindly advice me.
Thanks for your time and consideration.

என்னப்பா யாருமே இங்க இல்லையா, தமிழர்களே இல்லாத ஊருக்கா போகப்போறேன்:-( தயவு செய்து தங்களுக்கு தெரிந்த தகவலை சொல்லி உதவவும்

அங்கே வாழும் தோழிகள் இருந்தால் கண்டிப்பாக வந்து உதவுவார்கள். யாரும் இல்லை போலும்.. எனக்கு தெரிந்த இருவர் உள்ளனர். ஆனால் ஃபேஸ் புக் தான் ... அவர்களை ஆன் லைனில் வராங்களானு நானும் உங்களுக்காக பார்த்துட்டே இருக்கேன்.. முடிந்தா கூறுகிறேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ரம்யா

நீங்கள் வீடு தேடும் போதே community எப்படி என்று பார்த்து தேடவும். பக்கத்தில் எதவாது கோவில் அல்லது indian community center இருந்தால் அங்கு சென்று விசாரிக்கவும். நீங்கள் பள்ளியின் rating "school-rating.com" என்ற வெப்சைட்டில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வித்யா, நீங்க relocate பண்ணும்போது ஸ்கூல்தான் மிகவும் முக்கியம். சிறந்த Elementary ஸ்கூல்களை லாவண்யா சொன்னது போல் நெட்டில் சேர்ச் செய்யுங்கள்.

www.schooldigger.com

www.greatschools.org

இது போல் நிறைய சைட்கள் உள்ளன. அதில் சில பள்ளிகளை தேர்ந்தெடுத்து பிறகு அதனருகில் உள்ளது போல் வீட்டை தேடுங்கள். Best Elementary Schools அருகில் உள்ள neighbourhoods நிச்சயம் நன்றாக இருக்கும். நீங்கள் அப்பார்ட்மன்ட்டை கண்டு பிடித்த பிறகு நிச்சயம் அங்கு இந்தியர்கள் இருப்பார்கள். கவலைப் பட வேண்டாம்.

நான் சென்ற வருடம் ஆன் லைனில் சேர்ச் பண்ணிதான் ஸ்கூலையும், வீட்டையும் கண்டு பிடித்தேன். All the best.

நன்றி லாவண்யா நல்ல ஆலோசனை

நன்றி வின்னி. School link நல்ல உபயோகமாக இருந்து. அந்த இடத்தைப் பற்றி ஒரு ஐடியா கிடைத்தது.
தங்களின் அலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஒரு வாரமாக internet thaan கதி

மேலும் சில பதிவுகள்