ஆப் கா நாம் கியா ஹை ?

என்ன பாக்கறீங்க.. என்ன திடிர்னு தமிழ் தளத்துல ஹிந்தி பேசறேனா.. இந்த ஒரு வரி தவிர வேற தெரியாது ஹீஹீஹீ.. எல்லாரையும் இந்த பதிவு பக்கம் இழுக்கத்தேன்.. ...

சரி விஷயம் என்னன்னா... எல்லாருமே அவங்கவங்களோட பேரை வெச்சு நம்ம வீட்டுல ஒரு டிஸ்கஷனே நடத்தி இருப்போம்..

எனக்கு ஏம்மா இந்த பேரு வெச்ச?

என் பேரு ஸ்டைலாவே இல்லையே .... ;(

வேற என்ன பேரெல்லாம் லிஸ்டுல வெச்சு இருந்திங்க? அட சே அந்த பேரையே வெச்சு இருக்கலாமே..

நம்ம தாத்தா பாட்டி பேரு ....

மத்தவங்க சுருக்கமா கூப்பிடரேனு எப்படி எல்லாம் சொதப்பறாங்க ? ( நான் அடிக்கடி சொதப்புவேன். அதற்கு என் பதிவில் அறுசுவை தோழிகளின் நான் கூப்பிட்ட பெயரை பார்க்கவும் ) ;)

வீட்டுக்கு மட்டும் தெரிஞ்ச மாதிரி ஒரு பழைய கால பேரும், வெளி உலகத்துக்கு கொஞ்சம் நவீன பேரும் இருக்கும். இந்த மாதிரி பல அலும்பல்கள் நடந்திருக்கும்..

எல்லாரும் சீரியஸாவோ இல்லை ஜாலியாவோ அவங்க அனுபவத்தையோ அல்லது பார்த்து கேள்விப்பட்டதையோ சொல்லுங்களேன். கொஞ்சம் அமைதியா போயிட்டு இருக்கும் அறுசுவையை கலக்கி அமர்களப்படுத்திரலாம்.. என்ன நான் சொல்றது ;)

ஹைய்யா.... நான் தான் முதல்ல வந்தேன். சூட ஒரு ஃபில்டர் காபி ப்ளீஸ்.

மேட்டருக்கு வருவோம்... என் பெயர் எங்க அப்பா தேர்வு செய்தது. சத்தியமா ஏன் இப்படி வைத்தார்ன்னு இதுவரை நான் நினைக்கல... எனக்கு என் பெயர் அவ்வளவு பிடிக்கும். அந்த காலத்துல கிராமத்தில் பிறந்தவங்க இருவர் எனக்கு இப்படி பெயர் வைத்தது பெரிய விஷயம் தான். ஏன்னா எங்க தாத்தா இருவரும் எதிர் எதிர் வீடே... இருவரும் சேர்ந்து சதி பண்ணி என்னை எங்க அப்பா பார்க்கும் முன் “ரூபசுந்தரி”னு பெயர் வைச்சாங்களாம்... ;( என்ன கொடுமை பாருங்க... எங்க பாட்டி பெயரை சேர்த்து வைச்சு தாத்தா சந்தோசப்பட்டிருக்கார்... நல்ல காலம் எங்க அப்பா வந்து காப்பாத்திட்டார்... இல்லன்னா இன்நேரம் என் நிலை என்னா ஆயிருக்கும்!!!!

எங்க அப்பா அம்மாவால நான் க்ரேட் எஸ்கேப் டோய்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதான் எல்லாருக்குமே தெரியுமே. ஃபேமஸ்னு சொல்ல வரலை.. ஃப்ரொஃபைல் பார்த்தா தெரியும்னு சொல்ல வந்தேன். :)

நானும் எங்கம்மாக்கிட்ட எனக்கு ஏன் இந்த பேரு வெச்ச.. வேற என்னவெல்லாம் செலக்ட் பண்ணி வெச்சு இருந்தனு கேப்பேன்.. ஆனா அவங்க.. அதெல்லாம் தெரியாது போனு சொல்லிடுவாங்க.. உடனே நான் ஏன் மா அழகான, முத்தான ,அறிவான நல்ல ஒரு பெண் குழந்தை பொறந்து இருக்கு ஆசையா சினிமால காட்டுற மாதிரி உன் புருஷனோட ப்ளான் பண்ணி எனக்கு ஒரு 10 பேராவது செலக்ட் பண்ணி அதுல இந்த ரம்யாவ வெச்சு இருக்க மாட்ட.. அட சொல்லுமானு சொன்னா..

அப்படி எல்லாம் நான் பண்ணுல.. உன் மாமாதான் ஏனோ வெச்சாருனு சொல்லிட்டாங்க பொசுக்குனு. என்ன செய்ய எனக்கு முன்னாடி ரெண்டு பொண்ணுங்க..

அட அவங்ககிட்ட தான் பதில் சரியா வரலை.. எங்க அக்கா ரெண்டு பேருக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ரொம்பவே அதிகம். அவங்ககிட்டயும் தங்கச்சி பாப்பாக்கு என்ன பேரு செலக்ட் செய்து வெச்சிருந்திகனு கேட்ட கேவலமா பாப்பாங்க.. உனக்கு பேரு வெச்சதே பெரிசுன மாதிரினு.. அஞ்சலி படத்துல தான் அண்ணாவும் அக்காவும் சண்டை போட்டு பேரு வெக்கறாங்க.. ;( .. நிஜத்துல யாரு வெக்கறா?

ஆனா என் அக்கா பேரு மாதவி.. ரீசன் கேட்டா நடிகை மாதவி மாதிரி கண்ணு இருந்ததாம்.. பொறந்த உடனேயே சொல்லற ஜாடை பாருங்க. அவளுக்கு துர்கானு வெக்கலாம்னு நினச்சாங்களாம்.. துர்கானு வெச்சா கோவம் அதிகம் வரும்னு வெக்கலையாம் ( துர்கை அம்மன் மாதிரி).. அவளுக்கு டென்ஷன் ஆச்சு.. அடடா நல்ல பேரு போச்சேனு..

பெரிய அக்கா பேரு உஷா.. ஃபேஷனா இருந்ததாம்.. அந்த காலத்துலேயே.. நல்லா யோசிச்சு இருக்காங்கப்பா..

ஆனாலும் எனக்கு என் பேரு ரம்ம்ம்ம்ப பிடிக்கும்... ரம்யா ................;)
எத்தனை அழகான பேர் இல்ல.. ஹீஹீஹீ

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடடா .. நீங்க தான் முதல்ல வந்திங்களா.. குட் இந்தாங்க சூடா ஃபிள்டர் காஃபியும் ருக்ஸியோட எக் பப்ஸும்.

உங்க பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை வனீஈஈஈ , வனித்தூஊஊ அப்படியெல்லாம் கூப்பிடவும் பிடிக்கும்.

ரூபசுந்தரியும் அழகா தான் இருக்கு.. என்ன ஸ்டைலா ரூபானு கூப்பிட்டு இருப்போம்.. என்ன ஒன்னு யாராவது பேரு கேட்டா முழுசா தானே சொல்ல முடியும்.. வசுவோட பேரு இன்னும் அழகு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரூபான்னு ஸ்டைலா சொல்ற மாதிரி இருக்கா??? நான் படிக்குற காலத்துல (படிச்சேன்... நம்புங்கப்பா) இப்படி யாராவது கேட்டு சொன்னா பசங்க எல்லாம் “அது என்ன ரூபா, பைசா??? பெயர் வைக்கறாங்க, உங்க தாத்தா வட்டி கடை வெச்சிருந்தாறா???”னு சிரிப்பாங்க... இப்ப சொல்லுங்க க்ரேட் எஸ்கேப் தானே??? ;)

தங்கைக்கும் தாத்தா விடலல்ல... அவரு அவர் சார்பில் இன்னொரு பாட்டி பெயரை வைத்தார்... அதை வைத்திருந்தா மைக்கல்மதனகாமராஜன் மாதிரி “திருப்பு திருப்பு”னு கூப்பிட்டிருக்கனும்... விடுங்க... எல்லாரும் ரொம்ப சிரிச்சுபுடுவாங்க. எங்க அப்பா நல்ல மனசு பண்ணி, முதல் பிள்ளைக்கு நான் பெயர் வெச்சுட்டனே... இப்போ உன் சாய்ஸ் என்று அம்மாக்கு விட்டுக்கொடுக்க, அம்மா சரியான நாவல் பைத்தியம் அப்போ. சமீபத்தில் படித்து மனதௌக்கு பிடித்து போன ஒரு கதாபாத்திரத்தின் பெயரான “வசுமதி”யை வைச்சுட்டாங்க. கல்யாணம் ஆகும் வரை அவளை முழு பெயர் சொல்லி கூப்பிட்டாலே கோவம் வந்துடும்... வசு என்றே எல்லாரும் கூப்பிடுவோம். கார்ணம் பள்ளியில் அவ பெயரை எல்லாரும் கொலை பண்றாங்களாம்... பிடிக்கவே இல்லைன்னு சொல்வா. இப்போவும் வேலை பார்க்கும் இடத்தில் வெள்ளக்கார ஆசாமிகளுக்கு அவ பெயர் வாயில் நுழைவதில்லை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் பெயர் கவிதா :). ஆனா தொட்டிலில் இட்டு ஊரைக் கூட்டி வச்சது அம்மா வழி தாத்தா பாட்டி ரெண்டு பேரோட பெயர்களையும் சேர்த்து நாதலெக்ஷ்மி. இதுதான் என் உண்மையான பெயர்னு நான் சொன்னா எல்லாரும் நாகலெக்ஷ்மின்னுதான் சொல்லுவாங்க. திரும்பவும் அவங்ககிட்ட விளக்கமா சொல்லணும் நா'க'லெக்ஷ்மி இல்லை நா'த'லெக்ஷ்மின்னு. நல்ல வேளையா எங்கப்பா கவிதான்னு இன்னொரு பெயரையும் வச்சி அதியே அஃபிஷியல் பெயராகவும் ஆக்கிட்டாங்க. எங்க பாட்டிக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

ஆனா கவிதான்னு ஆசையா பெயர் வச்சுட்டு எங்கப்பா என்னை கூப்பிடுவது என்னவோ குட்டீ தான. இப்பவும் அப்படித்தான் :D. எங்கம்மா என்னை கர்ப்பமாக இருக்கும் போது எட்டாவது மாதத்தில் ஏதோ ஆபத்திலிருந்து என்னை அவங்க குலதெய்வம்தான் கோழி ரூபத்தில் வந்து காப்பாற்றியதாக சொல்லுவாங்க. அதனால் அந்த தெய்வத்தின் பெயரையும் சேர்த்து கவிதாதேவின்னு வச்சாங்க. ஆனா ரொம்ப நீளமா இருப்பதால் அந்த பெயர் நிலைக்கவில்லை.

ஸ்கூலில் சேர்த்த பின்னாடிதான் என் பெயர் பிரச்சினையாச்சு. ஒரு கிளாசில் எப்படியும் இரண்டு கவிதாவாவது இருப்போம். அதனால் இனிஷியல் சேர்த்து கூப்பிடுவாங்க. எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேரோட பேரையும் சேர்த்து PK ன்னு இனிஷியல். அதனால் கவிதாவை கட் பண்ணிட்டு PK ன்னுதான் கூப்பிடுவாங்க. இப்பவும் என் பள்ளி ஆசிரியைகளுக்கும் தோழிகளுக்கும் நான் PK தான்.

யார் எப்படி கூப்பிட்டாலும் நம்ப பெயர் நமக்கு பிடிக்காம இருக்குமா. எனக்கும் ரொம்ப பிடிக்கும். வித விதமா செல்லமா கூப்பிடலாமே! அதிலும் என் அண்ணன் மகள் என்னை ஆசையாக கவிதூ ன்னு கூப்பிடறது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ஆனா இந்த நாட்டுல உள்ளவங்க என் பெயரை கஃபித்தான்னு சொல்றது மட்டும் பிடிக்கவே பிடிக்காது :((

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்ஸு நீங்க உங்க மாமாகிட்ட கேட்கலியா? என் மாம மகள் பெயரும் ரம்யாதான். அவளை ரம்மு ரம்மின்னு செல்லமா கூப்பிட்ரோம்னு சொல்லி அவலை வெறுப்பேத்துவோம் :))

வனி உங்க தாத்தாக்கள் ரொம்ப விவரமா இருந்திருக்காங்க. அக்கா தங்கை ரெண்டுபேரோட பெயருமே சுந்தரின்னு முடியறமாதிரி யோசிச்சு வச்சிருக்காங்களே :)).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கண்டுப்பிடிச்சுட்டீங்களா???? ஹஹஹா... இங்கையும் லாவண்யா வந்து என்ன பேசுறீங்கன்னு புரியலன்னு பீல் பண்ண போறாங்க ;)

உங்க பெயர் நாதலஷ்மி கூட அழகா தான் இருக்கு. ஆனா ’வை விட கவிசிவா அழகு. அதனால் தான் நான் எங்கையுமே உங்களை கவிதானு போட்டு பதிவு போட்டதே இல்லை :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா இந்த பெயர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னவர் என்னோடவே இருக்கற ஃபீலிங்கு :)).

ஆனா இதே அறுசுவையில் சிலர் என்னை ஆண் என நினைச்சும் பேசியிருக்காங்க :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் பெயர் ஷேக்.எனக்கு என் ஊர்ல இன்னோரு பெயர் உண்டு..பாஷா...ஷேக் பாஷா!இப்படியெல்லாம் இல்லிங்கோ..னிக்னேம் வந்து ஷேக்கப்பா!இன்ன்றைக்கும் என்வீட்டில் என் மனைவி,குழந்தைகள் கூட என்னை அழைப்பது அப்படித்தான்!கோபமாக வரும்.என்ன பன்றது?ஏதோ வயசான ஆள் மாதுறி அப்பா,பாட்டினுகிட்டு?சிறுபுள்ளத்தனமா இல்ல?
ஷேக் அப்பாஸ்னு பேர் வச்சாக்கூட ஒரு ஹீரோ இமேஜாவது கிடைக்கும்.பட் ரியல் நேம் ஷேக் முஹைதீன்.முகம்மட் என்றால் புகழுக்குறியவர் என அர்த்தம்..ஒரு வேளை சினி ஃபீல்டுக்கு போகபோறேனோ என்னவோ?ஹி ஹி ஹி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் என் பெயர் பர்ஹானா பொருள் “மகிழ்ச்சிக்குரியவள்’ எங்க பாட்டி தான் இந்தப் பெயர செலக்ட் பண்ணியிருக்காங்க, 3 ஆண்களுக்குப் பின் 4ஆவதாய் நான் பெண்ணாய் பிறந்த மகிழ்ச்சி வச்சிருப்பாங்களோ? எனக்கு அத்தை பொண்ணு ஒன்னும் இதே பேரில இருக்காங்க, அவங்க இருப்பது எங்க ஊரிலிருந்து தூரம் ,எனவே எங்க பாட்டி ஆசை ஒகே ஆயிடுச்சி எல்லோர் விருப்பத்தோடயும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்