தேதி: May 25, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாஸ்மதி அரிசி - கால் கிலோ
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
குடைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
வெள்ளைமிளகு தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய் - தேவைக்கு
முதலில் காய் வகைகளை ஒரே அளவில் நீள நீளமாக நறுக்கவும்.

பாஸ்மதி அரிசியை உதிர் உதிராக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பீன்ஸ், கேரட், காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

அதோடு முட்டைகோஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய காய் கலவையில் சாதம், மிளகுதூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின் மீண்டும் அடுப்பில் 2 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.

சுவையான சைனீஷ் ஃப்ரைட் ரைஸ் ரெடி. இதனுடன் கோழி குருமா, வெஜ் குருமா, ஆனியன் ரைத்தா வைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

சில்லி சாஸ்க்கு பதில் பச்சைமிளகாயை அரைத்தும் சேர்க்கலாம்.
Comments
ரொம்ப அழகான குறிப்பு
ரொம்ப அழகான குறிப்பு பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு sister by Elaya.G
சுவர்ணா
சூப்பரான குறிப்பு. பார்க்கவும் கலர் கலரா அழகா இருக்கு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுவர்ணா
நான் பெரிய வெங்காயம் சேர்ப்பேன்..நல்லா இருக்கு உங்கள் குறிப்பு.வாழ்த்துக்கள் சுவர்ணா
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
ஸ்வர்ணா சூப்பர்!!
இன்னைக்கு தான் நெனச்சேன் என்னாட ஸ்வர் குறிப்பே கானுமேனு அது குள்ள வந்துட்டு சூப்பர்.....
ஆகா ரொம்ப கலர் ஃபுல்லா இருக்கு ஸ்வர்.வாழ்த்துக்கள்....
உன்னை போல பிறரையும் நேசி.
ஸ்வர்ணா
ஸ்வர்ணா சூப்பரோ சூப்பர்! நல்ல குறிப்பு வாழ்த்துகள். உங்களுக்குள் இவ்வளவு திறமையா? சமைக்க தெரியாது தெரியாது என்று இப்படி கலக்குறீங்க! வாழ்த்துகள். குறிப்பு அருமையாக உள்ளது. சுவை செய்து பார்த்துவிட்டு சொல்கின்றேன். பார்க்கவே கலர் ஃபுல்ல இருக்கு.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
சுவர்ணா
ரொம்ப அழகான குறிப்பு.நானும் இப்படி தான் செய்வேன்.ஆனா பெரிய வெங்காயம்,3 பூண்டு பல் பொடியாக அரிந்து சேர்ப்பேன்.சில்லி சாஸ் போட மாட்டேன்.உங்களுடையது ரொம்ப கலர்புல்லா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
Expectation lead to Disappointment
ஸ்வரு
ரொம்ப அழகா காய் வெட்டி இருக்கிங்க
படங்களும் தெளிவு
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஸ்வர்ணா
ஸ்வர்ணா
எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம். வாழ்த்துகள் ஸ்வர்ணா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
ஃப்ரைட் ரைஸ்
அன்பு ஸ்வர்ணா,
ஃப்ரைட் ரைஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க செய்து காட்டியிருக்கும் விதம் தெளிவாக இருக்கு. அவசியம் செய்து பார்க்கிறேன்.
சோயா சாஸ் சேர்க்காமல் செய்யலாமா?
அன்புடன்
சீதாலஷ்மி
ஸ்வர்ணா,
ஸ்வர்ணா,
ஃப்ரைட் ரைஸ் பார்க்கவே அழகா இருக்கு கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
ஸ்வர்
ஆஹா! என்ன ஒரு அழகு!! எவ்வளவு அழகா காய் நறுக்கியிருக்கீங்க ஸ்வர்!
பார்க்கவே ரொம்ப அழகாயிருக்கு ஸ்வர்.ப்ரைடு ரைஸ் சூப்பராயிருக்கு,கண்டிப்பா செஞ்சு பார்க்கறேன் ஸ்வர்.வாழ்த்துக்கள் தங்கம்.போட்டோஸ் அருமை ஸ்வர்.
அன்புடன்
நித்திலா
ஸ்வர்
சாரி ஸ்வர் 2 பதிவு ஆயிடுச்சு.
அன்புடன்
நித்திலா
நன்றி...........
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு எனது நன்றிகள்....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
இளையா
இளையா மிக்க நன்றி....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வனி
வனி வாழ்த்துக்கு மிக்க நன்றி ........
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
குமாரி
குமாரி வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா... வெங்காயமும் சேர்க்கலாம் சமயத்துல நானும் சேர்ப்பேன் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தேவி
தேவி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிடா...... முன்ன மாதிரி அடிக்கடி குறிப்பு போட முடியல பா கல்யாண வேலைல பிசியா இருக்கேன் அதான் :))
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவதி
ரே வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா....அய்யோ அதுக்குள்ள இவ்வளவு திறமையான்னு கேக்காதப்பா நீ வியக்கும் அளவுக்கு நான் வளரல :))))))))))
கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுப்பா.....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மீனாள்
மீனாள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.......
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரம்ஸ்
ரம்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா......
காய் வெட்டுரதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் பா.....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மஞ்சு
ஆஹா மஞ்சு உங்களுக்கும் பிடிக்குமா எனக்கும் பிடிச்சி ஐட்டம் இது.....
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சீதாம்மா
சீதாம்மா உங்களுக்கும் பிடிக்குமா சந்தோசம்:)) சோயா சாஸ் சேர்க்காமல் நான் இதுவரை செஞ்சதில்லம்மா நீங்க ட்ரை பன்னி பாருங்க......
செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கம்மா..........
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்
ப்ரைட் ரைஸ் சூப்பரா இருக்கு. நான் ஒரு முறை ஹோட்டலில் சாப்பிட்டது தான். வீட்டுல செஞ்சு பார்க்கனும். காய் அழகா நறுக்கி இருக்கீங்க. கார்விங் செய்வீங்களா.
கவிதா
கவிதா வாழ்த்துக்கு மிக்க நன்றி...... கண்டிப்பா செய்து பாத்துட்டு பதிவு போடுங்க ......
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நித்தி
நித்தி ரொம்ப சந்தோசம் பா எனக்காக ரெண்டு பதிவு போட்டுருக்க :))))
வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா...... செய்து பாத்துட்டு கண்டிப்பா சொல்லனும் சரியா.....
காய் நறுக்கரது எனக்கு பிடித்தமான வேலை நித்தி......
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வினோ
வினோ மிக்க நன்றிப்பா கண்டிப்பா செய்து பாருங்க மறக்காமல் எப்படி இருந்துதுன்னு சொல்லுங்க.......
கார்விங்லாம் செய்ய தெரியாது பா காய் நறுக்கரது பிடித்தமான வேலை அதுமட்டுமில்லாமல் பீன்ஸ் இந்த மாதிரி கட் பண்ண அண்ணாதான் சொல்லிகொடுத்தாங்க....... :))
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவர்ணா
சம சூப்பரா இருந்தது ப்ரைடு ரைஸ்... அப்படியே ரெஸ்டாரண்ட் ரைஸ் போல. நல்ல குறிப்பு. மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுவர்ணா
சுவர்ணா,
சன்டே அன்று உங்களோட ஃப்ரைட் ரைஸ் எங்கவீட்டில செய்தேன். கேரட், பீன்ஸ், கரக்ட்டா ஒரு ரெட் பெல்பெப்பர் எல்லாமும் வீட்டில் இருந்தது. சோ, ரைஸ் சும்மா, கலர்ஃபுல்லா, ரொம்ப சுவையா, சிம்பிளி சூப்பர்ப்பா இருந்தது! வீட்டில எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுது! :) நல்லதொரு குறிப்புக்கு நன்றி சுவர்ணா!
அன்புடன்
சுஸ்ரீ