Hystrosalpinagram (vs) Laproscopy

எனக்கு திருமணம் ஆகி 4 1/2 வருடம் ஆகி விட்டது. குழந்தை இல்லை. என்னுடைய எல்லா டெஸ்ட் நார்மல், இன்னும் tube open ஆகி இருக்கா என்பதற்கு எடுக்க வேண்டிய hystrosalpinogram (radioactive dye used for this test) டெஸ்ட் மட்டும் எடுக்க வேண்டும். நான் கடந்த மாதம் இந்த டெஸ்டுக்காக சென்றேன் வலி தாங்க முடியாததால் (அந்த டெஸ்ட் செய்வது வலிக்கும்) டெஸ்ட் எடுக்கவில்லை. டாக்டர் அந்த டெஸ்ட்க்கு மாற்றாக laproscopy பண்ண சொல்கிறார் அல்லது திரும்பவும் hystrosalpinogram தான் பண்ண வேண்டும் என்கிறார். தோழிகளே உங்களுடய ஆலோசனை தேவை, பதில் தாருங்கள்.

மேலும் எனக்கு கடந்த 6 மாதத்தில் 3 முறை பிரவுன் spotting in between periods வருகின்றது. அதாவது 25 வது நாளில் இருந்து அடுத்த period வரும் வரை அதை தொடர்ந்து period வந்து விடும். இது போல் யாருக்காவது இருந்ததா? இது பற்றி எனக்கு பயமாக உள்ளது. இதனால் குழந்தை உருவாவதில் ஏதேனும் பிரச்சினை வருமா??

HSG அவ்வளவு வலி இருக்காதே! தாங்கிக் கொள்ளக் கூடிய வலிதானே அது. டெஸ்ட் செய்ய செல்லும் போது பயமில்லாமல் ரிலாக்சாக இருந்தால் போதும். டெஸ்ட்டின் போது நம் உடலை நாம் இறுக்கமாக வைத்திருந்தால் வலி அதிகரிக்கும். நம் தசைகளை இறுக்காமல் ரிலாக்ஸ்டாக படுத்திருந்தால் டெஸ்ட் மிகவும் எளிதில் முடிந்து விடும். சிலருக்கு டெஸ்ட் முடிந்த பின் மிக லேசான ப்ளீடிங் இருக்கும். பயப்பட தேவையில்லை. ஆனால் ப்ளீடிங் அதிகமாக இருந்தால் மருத்துவரை பார்ப்பது நல்லது.

டெஸ்ட் முடிந்து வீட்டுக்கு வந்த பின் இரண்டு நாட்கள் எனக்கு இடுப்பு வலி இருந்தது. நேராக நிமிர்ந்து நிற்க முடியாமல் இருந்தது. கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுத்ததும் சரியாகி விட்டது.

தைரியமாக இருங்கள்.

லேப்ராஸ்கோப்பி பற்றி எனக்கு தெரியவில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

kavisiva சொன்னதுபோல் இது மிகவும் சுலபமான டெஸ்ட்தான்.நானும் உங்களைமாதிரிதான் பயந்தேன்,டாக்டார் சக்ஸஸ் ஆகாதுபோனால் மீண்டும் எடுக்கலாமென சொன்னார்,ஆனால் ஒரு தடவையுடன் முடிந்துவிட்டது.நீங்கள் இதைப்பத்தி பயப்படத்தேவையில்லை.

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி kavisiva and subha25.

உங்கள் பதில் எனக்கு புது தைரியத்தை கொடுத்துள்ளது. என்னுடைய friends இந்த டெஸ்ட் ஒரு மாதிரி messy ஆக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த டெஸ்ட் ரிசல்ட் எப்படி இருக்கும். இது எடுத்தால் தான் எந்த treament செய்ய முடியுமா ?? நான் அடுத்த பெரிஒது முடிந்தவுடன் இந்த டெஸ்ட் எடுக்கலாம் என்று இருக்கிறேன். தனியாக இந்த டெஸ்ட்க்கு செல்லலாமா, அல்லது கணவரை உடன் அழைத்து செல்வது நல்லதா?

நீங்கள் எங்கு இந்த டெஸ்ட் செய்தீர்கள் ?? I am in USA.

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி kavisiva and subha25.

உங்கள் பதில் எனக்கு புது தைரியத்தை கொடுத்துள்ளது. என்னுடைய friends இந்த டெஸ்ட் ஒரு மாதிரி messy ஆக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த டெஸ்ட் ரிசல்ட் எப்படி இருக்கும். இது எடுத்தால் தான் எந்த treatment செய்ய முடியுமா ?? நான் அடுத்த period முடிந்தவுடன் இந்த டெஸ்ட் எடுக்கலாம் என்று இருக்கிறேன். தனியாக இந்த டெஸ்ட்க்கு செல்லலாமா, அல்லது கணவரை உடன் அழைத்து செல்வது நல்லதா?

நீங்கள் எங்கு இந்த டெஸ்ட் செய்தீர்கள் ?? I am in USA.

ஹாய் ப்ரமீளா, ட்யூபில் ப்ளாக் எதுவும் இல்லாம இருக்கான்னு பார்க்கணும்னா இந்த டெஸ்ட் எடுத்துதான் ஆகனும்.

கணவரோடே செல்லுங்கள். ஏன்னா டெஸ்ட் முடிஞ்ச பின்னாடி யாராவது நம்மோட இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்.

பயப்படாம தைரியமா எந்த குழப்பமும் இல்லாம போயிட்டு வாங்க. USA ல் எப்படீன்னு தெரியலை. இங்கே இந்தோனேஷியாவில் ரொம்பவே ஃப்ரெண்ட்லியா நாம எப்படி நம்ப பாடியை வச்சிருந்தா வலி இல்லாமல் இருக்கும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அப்படி ரிலாக்ஸ்டாக இருந்தால் அதிகமா வலி இருக்காது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழியே இதுபற்றி பெரிதாக think பண்ண வேண்டாம் ,நான் u.kல் இருக்கின்றேன்,
எனக்கு இதுபற்றி doctor தந்த சில தகவலை உங்களுக்கு தருகின்றேன்.
it is an examination of the womb(uterus)and tubes(fallopian)using x-rays to obtain images. this is often done for infertility problems, but it is also done for other ''female'' problems.

this examiniation is done between the 8th- 15th day of female menstrual cycle.
வேறு ஏதாவது சந்தேகம் எனில் கேட்கவும்.

போன முறை நான் டெஸ்ட்கு சென்ற போது அவர்கள் சொன்னது என்னை பயப்படுத்துவது போல் இருந்தது, அதுவும் நான் தனியாக வேறு சென்று இருந்தேன். //நான் கடந்த மாதம் இந்த டெஸ்டுக்காக சென்றேன் வலி தாங்க முடியாததால் (அந்த டெஸ்ட் செய்வது வலிக்கும்) டெஸ்ட் எடுக்கவில்லை.//

மேலும் என்னுடைய மற்ற எல்லா டெஸ்ட் முடிந்து விட்டது. எல்லாம் நார்மல் ஆக உள்ளது. என்னுடைய கணவருக்கு எடுத்த எல்லா டெஸ்ட் நார்மல், except morphology மட்டும் 1 % உள்ளது, 13 % இருந்தால் நார்மல். ஆகையால் IVF மட்டும் தான் ஒரே வழி என்று டாக்டர் சொல்லிவிட்டார். ஆனால் என்னுடைய மனதுக்கு இன்னொரு முறை டெஸ்ட் எடுத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அதற்கு வேறு டாக்டர் தான் பார்க்க வேண்டும். இந்த டாக்டரிடம் அதை பற்றி சொன்னால் எப்படி treat பண்ணுவார், அது சரியாக வருமா என்று குழப்பமாக உள்ளது. என்னுடைய கணவர் இதுவே போதும் நாம் IVF செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார். நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஆலோசனையை சொல்லுங்கள்.

Pls do not go for IVF. According to me, we have a possibility to get only 10 to 20% success rate. Which is your native in TN.IF you go Alopathic treatment for simple problems, it will create unwanted disease in your body. Do think that I am confusing you. Thats true. You just first analyse what problem you or ur hubby have. First be clear with ur problem, definitely I can suggest you the good doctor. That definitely you can realise it

Always Think Positive

Sorry instead Prameela I said Kavitha

Always Think Positive

Dont worry Prameela .. Me too facing the same.. I went for that Felopian tube test. It was noraml and tolerable only . As other friend's suggestion you can ... Namme kan munnadi kuzhanthai kondu vanthu parunga.. enna valinalum thangalam thairiyam varum.. I pray for you.. Dear friends pray for me also, me too in the same boat...
Thanks

Be Happy Always

மேலும் சில பதிவுகள்