கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

சொல்லுங்கள் வினோ நான் இருக்கின்றேன். எப்படி இருக்கின்றீர்கள். இப்பொழுதெல்லாம் அரட்டை பகுதி என்று ஒன்று இருக்கின்றதா? என்னு தேட வேண்டிய சூழல் உள்ளது.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி நீங்களாவது இருக்கீங்களே. தேங்கஸ் ரேவதி. நான் நல்லா இருக்கேன். ஆமா அரட்டையை தேடி தூசி தட்டி எடுக்க வேண்டியதா இருக்கு. எல்லாம் ரொம்ப நல்லாவங்களா ஆகிட்டாங்க. தேவி எங்க அடிக்கடி காணாம போயிடுறாங்க. அவங்களோட ஒன்னு ரெண்டு பதிவாவது கண்ணுலப்படும். நீங்க தேவிக்கிட்ட பேசினீங்கன்னா இங்க வரச் சொல்லுங்க.

கண்டிப்பாக சொல்கிறேன் பா. ஆம் எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்லவங்களா மாறிடாங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆமினா எப்படி இருக்கீங்க. பையன் நலமா. உங்க குறிப்பு மட்டுமே வந்துக்கிட்டு இருந்தது. இன்னைக்காவது பதிவ பார்க்க முடிந்தது சந்தோஷம். சீக்கிரம் உங்கள் வேலைகள் எல்லாம் முடிந்து பழையபடி அறுசுவைக்கு வர வேண்டும்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் வணக்கம் ;)
என்னா பா நேத்து யாருமே அரட்டைக்கு வரல ??????

ஹாய் வினோ,செல்லம் நீ கூப்பிடாவுடனே வந்துட்டேன் டா நலமா?

உன்னை போல பிறரையும் நேசி.

ரேவதி தேவி சைட்ட பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. ஸ்ரீக்கு வாழ்த்து சொல்லிட்டு எஸ் ஆயிட்டாங்க.

ரொம்ப நன்றி வினோஜா...
பையனும் நானும் ரொம்ப நல்லா இருக்கோம்!!!! நீங்க எப்படி இருக்கீங்க.. லாக் அவுட் பண்ண போகும் போது உங்க பதிவை பார்த்துட்டு ஓடி வரேன் :)
மகனை ஸ்கூலில் சேர்க்க தான் இப்ப வரை அலைச்சல்..

கூடிய விரைவில் வருகிறேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பையன நல்ல ஸ்கூல்லா பார்த்து சேர்க்கங்க. லக்னோலதான் சேர்க்க போறீங்களா. விரைவில் வாங்க ஆமினா உங்க வருகைக்காக காத்திருக்கிறேன்.

தேவி மேடம் நான் கூப்பிட்டு முக்கால் மணி நேரம் ஆயிடுச்சு. இதுல கூப்பிட்டவுடன் வந்துட்டேன் ஒரு டயலாக் வேற. லஞ்ச் டைம் எப்போ? நான் சாப்பிட போறேன்.

ஹா ஹா.... சரி ட நானும் சாப்பிட்டு வரேன் நீயும் போயிட்டுவாமா.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்