கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

என்னது தீபா படிக்கும்போது கஷ்டமா இருக்கு. த்ரிஷு ரொம்ப துடிச்சு போயிருப்பானே. சின்ன பசங்க சைக்கிளா? டாக்டர் என்ன சொன்னாங்க. கால்ல ரொம்ப அடியா தீபா பத்திரமா பார்த்துக்கோங்க. நீங்க வேற ஆபீஸ் போயிடுறீங்க. யார் பார்த்துக்குறா த்ரிஷுவ.

எப்படி இருக்கீங்க?பாராட்டுக்கு ரொம்ப நன்றி பா... உங்க request பார்த்தேன்.... உங்களுக்கு, பதிலுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தேன்னே....
வனராஜாவோட காண்டாக்ட் நம்பர் அனுப்பினேன் கிடைச்சுதா....

கொஞ்சம் வெய்ட்டான சைக்கிள் தான் டா..... வலியால குட்டி ரெண்டு நாள் தூங்கவே இல்ல..... நேத்து அவனே நடக்க ஆரம்பிச்சுட்டான்... அதான் ஆபீஸ் வந்தேன்... இப்ப அம்மா அவனை பார்த்துக்கறாங்க.... ரொம்பவே வால்பையன் டா..... வெளில கூட்டிட்டு போகலன்னு கோவத்துல சைக்கிளை பிடிச்சு தள்ளினான்... அது அவன் காலிலேயே விழுந்துடுச்சு..... டாக்டர் பயப்படற மாதிரி எதுவும் இல்லன்னு சொல்லிட்டார்.... இப்ப பரவால்ல......

தீபா உங்க பையன் சரியான வாலுதான் வெளியில அழைச்சுட்டு போகலனு இவ்வளவு கோபமா? கால் சரியானதும் அவன் ஆசைய நிறைவேற்றிடுங்க. ஸ்கூலுக்கு போன சமத்தா ஆயிடுவான்.

நீ சொல்ற மாதிரி தான், எல்லோரும் சொன்னாங்க.... அதான் ப்ளே ஸ்கூல் சேர்க்கலாம்ன்னு முடிவு செய்தோம்.... ஜூன் 15 ஸ்கூல் ஓபன்.... அங்க போய் என்ன அமர்க்களம் பண்ண போறானோ தெரியல.....

தீபா ஆபீஸ் விட்டு போக நேரம் ஆகுமா. நான் கிளம்புறேன். நாளைக்கு பேசலாம். பை

;) என் புகழ் 'பட்டி' தொட்டி எல்லாம் பரவுதா! ;)
தேன் கூப்பிட்டதையும் பார்த்தேன். சுகி கூப்பிட்டதையும் பார்த்தேன். நீங்க கலக்குங்க. நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ;)

‍- இமா க்றிஸ்

எனக்கு தெரியும் நீங்க பாத்துட்டே தான் இருக்கீங்கன்னு, இருந்தாலும் உங்க பெற சொல்லி தலைப்பு போட்ட எங்க இருந்தாலும் ஓடி வருவீங்கன்னு தான் கூப்பிட்டேன். உங்களை வைத்தும் பள்ளி பருவம் தான் சிறந்ததுன்னு சொல்றாங்க..... நேனேக எந்த பக்கம் ன்னு சொல்லுங்களேன் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எங்க ஊருக்கு வரீங்க ஆனந்தப்ரியா, உங்களை அன்புடன் வரவேற்கிறேன். சாயங்காலம் தான பொருட்காட்சி தொடங்கும்,நீங்க நேரத்துலையே வரீங்க? குடை எடுத்துகோங்க. இங்க நேத்து எல்லாம் நல்ல மழை பெய்தது.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகி... நோ..நோ... ஹாய் நடுவரே.... ஆமாம் பா... இன்னைக்கு மதியம் என் மாமியார்,மாமனார், நாத்தனாரின் 3 வயது மகள் ஆகியோர் மதுரையிலிருந்து வருகிறார்கள். என்னவர் மீன் வாங்கிட்டு வந்திருக்கார். எனவே இன்னையிலிருந்து நிறைய வேலை இருக்கும். நாளைக்கு விடியற்காலையில் கோவையிலிருக்கும் தோழி வீட்டு கிரஹப்பிரவேச விழாவில் கலந்துகிட்டு அப்படியே பொருட்காட்ச்சிக்கும் போகப்போறோம். அதனால் தான் 2 நாள் லீவ். நல்லவேளை குடையை நியாபகப் படுதுனீங்க... நன்றி பா... இங்க திருப்பூர்ல கூட கிளைமேட் நல்லா இருக்கு... குறிப்பா ஊருக்கு நடுவில் ஓடு நொய்யல் லில் தண்ணி இருகறையும் தொட்டு ரொம்ப சுத்தமா, தெளிவா ஓடுதுப்பா...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்