கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

சரி சரி, அப்ப ஒரு பட்டாளமே வரீங்க. கண்டிப்பா எங்க வீட்டுக்கும் வாங்க. சித்ரா பஸ் ஸ்டாப் ல இருந்து, பத்து நிமிடம் தான். இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தா மீன் குழம்பு கிடைக்குமா?? நீங்க எந்த காலேஜ் படுசீங்க?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி... இந்த அரட்டை பகுதியில் நீங்க நடுவரா இருக்கமாட்டீங்க என்ற நம்பிக்கையில் உங்களிடம் ஒன்னு கேட்டுக்கறேன்.... உண்மையிலேயே எனக்கு பள்ளிப் பருவம் தான் பா சந்தோஷம்... சரி... யாருமே கல்லூரி பக்கம் ஸ்டார்ட் பண்ணலையேனு ஸ்டர்ட் பண்ணலாம் பார்த்தா அங்கேயே செட்டில் ஆகவேண்டியதா போயிடுச்சு பா..6 வருஷம் படிச்ச கல்லூரியாச்சேனு விட்டுக்கொடுக்காம பேசிகிட்டு இருக்கேன்... நீங்க தீர்ப்பு சொன்ன பிறகு என்னோட பள்ளிப் பருவ இனிமை நினைவுகளை பகிர்ந்துக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். உண்மையை பசிபிக் கடல்ல போட்டு மறைத்துவச்சாலும் வெளிய வந்துரும்ல...(இது நமக்குள்ள இருக்கும் ரகசியமா இருக்கட்டும்...ம்...டீல் ஓகே வா)

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சுகந்தி... நீங்க சித்ரா லயா இருக்கீங்க... நான் காளப்பட்டி பிரிவுல இருகும் டாக்டர். என்.ஜி.பி. காலேஜ் ல பி.எட் ஃபர்ஸ்ட் செட்டா படிச்சேன் பா... யூ.ஜி கடலூர் செயின்ட் ஜோசப் காலேஜ், பி.ஜி. தின்டுக்கல் காந்திகிராம மதிய கிராமியப் பல்கலைகழகத்தில் படிச்சேன்பா...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹ்ம்ம் டீல் ஓகே தான், தீர்ப்புக்கு பின் உங்க பள்ளி அனுபவமும் சொல்லுங்க. NGP லையா படுச்சீங்க, ஹ்ம்ம் எங்க வீடு அதுக்கு பக்கம் தான். சரி சரி, இதுக்கு மேல நம்ம டீடைல் ஹா இங்க பேச வேண்டாம். உங்க வொர்க் எல்லாம் முடுச்சுட்டு பொறுமையா monday வாங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி இருக்கீங்களா?

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் வணக்கம்.:) யாரெல்லாம் அரட்டையில இருக்கிங்க.

வினோமா நான் இருக்கேன் டா.

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி அரட்டையில் உன்ன பார்க்கவே முடிய மாட்டேங்குது. மேடம் பிஸியா ஆகிட்டாங்களா. கல்ப்ஸ் கிட்ட பேசினீங்களா.

மேடம் நங்க பிஸி இல்ல. நான் ஜி மெயில்லயே பேசிடுரேன். அதான் இந்த பக்கம் வரல. அதோடு யாருமே வரமாட்டுராங்க. டீ போட்டு போடு வீணா போகுது அதான் வரல.

நீங்க நலமா? வீட்டில அனைவரும் நலமா?

சாட்ல தான் பேசுனேன் அதுவும் ஒன்னு இரண்டு வார்த்தை மட்டுமே

உன்னை போல பிறரையும் நேசி.

யாருமே காணோம்.... யாராவது ஒளிஞ்சிருந்தா ஓடியாங்க பார்போம்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,எப்படி இருக்கீங்க?பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சுதா வனி?பட்டியில் பதிவு போடலாம்னு வந்தேன்.எனக்கு வேலையே இல்லாம பண்ணிட்டீங்க.கலக்கறீங்க.ஆல்ரவுண்டர் வனி ஆச்சே.வாழ்த்துக்கள் வனி.

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்