கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

ரொம்ப நன்றி நித்திலா... 3 நாள் ஊரை சுற்ற போயிட்டு இன்று காலை தான் வந்தேன்... பட்டி நினைவு வந்ததும் ஓடி வந்துட்டேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எவரேனும் இருக்கீங்களா??? இதை தான் ஸ்டைலா கேட்டேன்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சு வந்தாச்சா? 3 நாள் நல்லா என்ஜாய் பண்ணீங்கனு சொல்லுங்க.குழந்தைகள் எப்படி இருக்காங்க?உங்க கைவலி எப்படியிருக்கு வனி?வலி குறைஞ்சிருக்குங்களா?

ஒரு சின்ன பிரேக் அப்புறம் வந்து உங்களுக்குதான் முதல் பதிவு போட்டிருந்தேன்.உங்க பர்த்டேவை மிஸ் பண்ணாம வந்து வாழ்த்து சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அன்புடன்
நித்திலா

ரொம்ப ரொம்ப நன்றி.... உங்க எல்லாருடைய வாழ்த்தும் இந்த வருட பிறந்த நாளை எனக்கு ரொம்ப இனிமையானதா ஆக்கிடுச்சு. 5 வருடத்துக்கு பின் நானும் என் கணவரும் இந்தியாவில் டூர் போனது இப்போ தான். 3 நாள் போனதே தெரியல. கை வலி இந்த ட்ரிப்ல கொஞ்சம் அதிகம் தான்... பிள்ளைகளை தூக்கி கொண்டு நடப்பது, அதுவும் கொடைக்கானலில்... கஷ்டம் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களது “எனது பக்கம்” பார்த்தேன்..மிகவும் ரசித்தேன்...சிரித்தேன்(ஊர்).

இந்தியாவில் நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியலை...அந்த ஊரில் “மனவளக்கலை மன்றம்” இருந்தால், அங்கே “Simple Exercises" கற்றுக் கொள்ளுங்க....போக முடியவில்லையென்றால் அந்த மன்றத்துலயே புக் விற்பார்கள்..வாங்கி வீட்டிலேயே செய்யலாம்...நல்ல பலன் தெரியும்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நான் உங்களுக்கு பட்டியில் பதிவு போட்டுட்டு வரேன்... நீங்க எனக்கு இங்க போட்டிருக்கீங்க ;)

செய்யனும் ராஜி... எதையாவது செய்து இந்த கை வலியை சரி செய்யனும். இங்க அப்படிலாம் ஏதும் இருக்கான்னு எனக்கு தெரியலங்க. இருக்குறது சென்னையில் தான் :) என் பக்கம் பார்த்து குழம்பிடாதீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அங்க சென்னையில எங்க கிடைக்கும்னு எனக்கும் தெரியாது...உங்களுக்கு விருப்பமிருந்தால், உங்க அட்ரஸை நம்ப ரம்யா கார்த்திக்(என் நாத்தனார், ப்ரெண்ட்....) கிட்ட குடுங்க..புக் வாங்கி அனுப்பறேன்....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க. அவசியம் சொல்றேன்... உங்க உதவிக்கு மனமார்ந்த நன்றி. ரம்யா உங்களுக்கு நிஜமாவே நாத்தனாரா?? இல்ல தோழியா? எனக்கு தெரியாது... அதான் கேட்டேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றியெல்லாம் எதுக்குங்க....ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி..அவ்வளவு தான்..

என் மாமியாரும், ரம்யாவின் அம்மாவும் அக்கா,தங்கை.என் கணவருக்கு ரம்யா தங்கை(பெரியம்மா மகள்). என்னை பொறுத்த வரை அவள் எங்க பொண்ணு மாதிரி....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அடடா... நீங்க அத்தனை நெருங்கிய சொந்தமா... எனக்கு தெரியாது ராஜி. ரம்யாவிடம் நிறைய பேசி இருக்கேன், ஆனா இது தெரியாது. நல்லா தான் இருக்கு, இப்படி உறவுகள் ஒன்னா அறுசுவையில் கூடி மகிழ்வது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்