பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் !!

டிரஸ் மேல் ஆசை இல்லாதர்களை விரல் விட்டு எண்ணிடலாம். அதுவும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். யாரவது எதாவது புதுசா போட்டிருந்தா உடனே "all details" அதை பத்தி தெரிந்தாகனும். அதுவும் இல்லாமல் சிலரின் ரசனையை பொருத்து புது புது பேஷன் வேறு உருவாக்குவார்கள். அது போல் உங்களுக்கு பிடித்த டிரஸ் எது, பிடித்த கலர், எந்த இடத்திற்கு எந்த மாதிரி உடை அணியவேண்டும், எந்த மாதிரி மாட்சிங் தோடு, வளையல், போட்டு, மாலை, செருப்பு, கைப்பை இப்படி எல்லாவற்றையும் சொல்லுங்க பார்க்கலாம். கடைசியாக நீங்கள் போட விரும்பும் கனவு டிரஸ் (சொல்ல முடியுமானால்) சொல்லலாம்.

நான் ஒரு டிரஸ் பைத்தியம். டிரஸ் மட்டும் இல்லை செருப்பும் தான். என் அப்பா என்னை உன்னை நான் ஒரு செருப்பு கடைகாரனுக்கு தான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று திட்டுவார்....அப்போ பார்த்துகொங்கோ...எவ்வளவு வாங்குவேன் என்று :)
எனக்கு இந்த குந்தன் நகைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதே போல் பொட்டும் நானே வரைந்து அதில் சமுக்கி அப்படி இப்படின்னு வெச்சி சாதாரண பொட்டை கொஞ்சம் ஸ்டைலாக்கிடுவேன். மிகவும் பிடித்த கலர் என்றெல்லாம் இல்லை...எல்லா கலரும் பிடிக்கும். எப்பொழுதும் கடைக்கு போகும் முன் இந்த கலரில் வாங்க வேண்டும் என்று போவேன்...உள்ளே பொய் வேறு எதாவது டிசைன் பிடித்திருந்தால் வாங்கி விட்டு வந்து விடுவேன்.
எனக்கு இந்த கிராமப்புறத்தில் கட்டுவாங்களே கண்டாங்கி சேலை கட்டி சேத்துக்குள்ள நின்னு போட்டோ எடுக்கனும்னு ஆசை.
என் கதை போதும் இனி உங்களின் கதை படிக்க ஆவலாய் உள்ளேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு புட்வை வித விதமா வாஙவும் பிடிக்கும், கட்டவும் பிடிக்கும். புடவையில் எத்தனை வகை வந்தாலும் கண்ணில் பட்டுடும்... அதை வாங்கலன்னாலும், அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகம். பிடிக்காத விஷயம் ஹாண்ட் பேக். ஏனோ வாங்கவும் பிடிக்காது, பயன்படுத்தவும் பிடிக்காது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம்ம்ம்.. பேச பேச தீராத கதையை இழையா துவங்கி இருக்கிங்க.. இது 500 பதிவை தாண்டினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை :) இந்த இழையின் தலைப்பு சூப்பர்.. நான் ஒவ்வொன்னா சொல்றேன்..

எனக்குனு ஒரு தனி கலர் ஏதும் இல்லை. யாராவது என்ன கலர் பிடிக்கும்னு கேட்டா ஐ லவ் ஆல் தி கலர்ஸ்.. இது தான் என் பதில்.. யோசிச்சு பாருங்க. கலர்ஸ் இல்லாத உலகம் எப்படி இருக்கும்னு.. லாவண்டர் பூனம் சாரி, பாட்டில் க்ரீன் கண்ணாடி, பிளாக் கார், ரெட் கலர் ஃபேஷன் ட்ரெஸ், மேஜிகல் ப்ளூ.. மெருன் பட்டு சாரி, வைட் ஃப்ளோர் & ஹோம் திங்ஸ், மஞ்சள் பூக்கள்னு எத்தனை வேணாலும் சொல்லலாம். சோ எனக்கு எல்லா கலர் மீதும் மோகம் உண்டு.. சில பொருளுக்கு அழகே அதன் நிறம் தான்.. ;)

இது வந்து என்னோட கலர் டேஸ்ட்..

அப்றம் ட்ரெஸ் விஷயத்தில் நான் கொஞ்சம் ட்ரெடிஷ்னல் டேஸ்ட் கொண்டவள். சாரி எனக்கு ரொம்ப பிடித்தமான உடை.. அதில் நான் நல்லா இருக்கேனு பார்ப்பவர்கள் எல்லாரும் கூறுவார்கள். பாந்தினி வகை சாரினா ரொம்ப பிடிக்கும். ஜமிக்கி, பீட்ஸ், ஜர்தோஷி வகை சாரிஸ் எல்லாம் அத்தனை விருப்பம் கிடையாது.. காட்டன் சாரிஸும் கலர்ஸ் பொருத்து பிடிக்கும். ஆனால் கொஞ்சம் ப்ளைனான சிம்பிள் டிஸைன் லைட் வெயிட் சாரிஸ்னா விரும்புவேன்.

இங்கே யூஎஸ் வந்த பிறகு அதிகமா ஜீன்ஸ் போட வேண்டிய சூழல். செக்குடு போட்ட காலர் வெச்ச சர்ட்னா ரொம்ப இஷ்டம். ரவுண்ட் நெக் வீட்டில் மட்டுமே போடப்படும். வெளியே போட்டா ஸ்கார்ஃப் கட்டுவேன். அப்போ தான் கொஞ்சம் கம்ஃபர்ட்புளா ஃபீல் பண்ணுவேன். ஸ்கார்ஃப் விதவிதமா வாங்க பிடிக்கும்.. பின் 3/4த் பேண்ட் ரொம்ப பிடிக்கும். 3/4த் ஸ்லீவ்ஸ்ஸும் தான்

சுடி வகையில் பாட்டியாலா டைப்பில் பிளாக் மற்றும் வைட் கலரில் ஒரு பேண்டும், ஷாலும் வெச்சுக்கிட்டு, நிறையா காட்டன் ரன்னிங் மெட்டீரியல் எடுத்து எல்லாத்தையும் விதவிதமா காலர் வெச்ச குர்தா டைப் சுடியா தெச்சு வெச்சிருக்கேன். 15க்கு மேலே கலர்கலரா வெச்சிக்கிட்டு இந்த பாண்ட் மட்டும் மேட்ச் பண்ணி போட்டுக்குவேன். பட்டுக்கும் அதிக செலவு செய்வது பிடிக்காது

காஸ்ட்லியான உடையில் அதிக நாட்டம் இல்லை..

அதே போல அக்ஸஸரிஸ்னு எடுத்திட்டா.. எப்பவும் ஒரு ரிங் கோல்டு தோடு தான் என் காதில் பார்க்க முடியும். சிம்பிளா டீஸண்டா இருப்பது போல ஒரு உணர்வு.நம்ம வேலைக்கு ஏத்த ட்ரஸ். ஹெச் ஆர் அட்மினா இருந்திட்டு லோலாக்கு போட்டா எப்படி இருக்கும். ;) விஷேஷம்னா குடை ஜிமிக்கி, மத்தபடி எந்த தொங்கட்டா வகை போடறது இல்ல.. வளையலிலும் கண்ணாடி வளையல் விருப்பம் இல்லை. ப்ளைன் டிஸைன் கொண்ட தின் டைப் கோல்ட் வளையல் தான் பிடிக்கும். இதே தான் கொலுசுக்கும்.

ப்ர்ள் பதித்த சிம்பிள் டிஸைன் கொண்ட நகைகள் பிடிக்கும். மேக்கப் விஷயத்திலும் பவுடர் கூட போடுவது இல்லை. குளித்ததும் கடுகு சஸ்ல ஒரு பொட்டு.. மத்தபடி இந்த லிப்ஸ்டிக்,காஜல் அது இதுனு ஏதும் யூஸ் பண்றது இல்லை.. பார்லர் போகும் பழக்கமும் இல்லை. முடி க்ரள்ளா நீளமா இருப்பதால நிறைய ஸ்டைல்ல பண்ண முடியாது. தலை நல்லா வாரி, முன்னாடி இருக்கும் முடியை ஸைடுல குத்தறது, இல்லைனா அப்படியே விடறது தான். இல்லைனா தண்ணீர் ஜடை..

செப்பல் வகையில் ஹீல்ஸ் இல்லாத சேண்டல் கலர் சிம்பிளானது பிடிக்கும். அம்மணி ஏற்கனவே 5 அடிக்கு மேல ;)நெயில் அழகா வளத்துவேன்.. ஆனா பாளிஷ் அடிக்க பிடிக்காது..

மொத்ததுல ஜிகு ஜிகு ஐட்டமே பக்கத்துல வரக்கூடாது. மல்லிகைனா ரொம்ப பிடிக்கும். எல்லா பூக்களும். கொஞ்சம் ஹோம்லியா இருப்பதால் எனக்கு நல்லா சூட் ஆகும்.

கல்யாணத்துக்கே நல்லா மேக்கப் போட்டுக்கமாட்டேனு மூக்கால அழுது, எல்லாரிடம் இப்போ திட்டு வாங்கிட்டு இருக்கேன். இது தான் என்னை பற்றி ..இப்போ அறுத்தது போதும் ..இன்னும் சொல்றேன்..

போட நினைக்கும் ட்ரெஸ்னு பெரிஸா ஒன்னும் இல்லை.. வேணும்னா ஒவ்வொரு மதத்தினர் உடையும் ட்ரை பண்ணலாம். ட்ரைபிள்ஸ் முதல் கொண்டு எப்படி ;)..மடிசார்னா பிடிக்கும் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பெண்கள் என்றாலே மேக்கப் டிரெஸ்ஸிங் ...இதுதான்

எனக்கும் விதவிதமா டிரஸ் பண்ணுறது பிடிக்கும் ஏதாவது விஷேசம் என்றால் புதுசா dress,போடணும்னு நினைப்பேன்.புடவை நமக்கு ஒத்து வராது சோ சுடிதார்தான் எடுத்து அடுக்கி வைப்பேன்.என கணவர் எவ்ளோ டிரஸ் தான் எடுப்பனு திட்டுவார்.ஆபீஸ் போகிற நான் கூட மாசம் மாசம் டிரஸ் எடுக்கறது இல்ல வீட்ல இருக்கிற உனக்கு ஏன் இவ்ளோ டிரஸ் என்று கிண்டல் பண்ணுவார்.

என் அம்மா சிங்கப்பூர் போறாங்கனா நைட்டி,பர்ஸ் ,ஹாண்ட் பேக் , கண்டிப்பா வாங்கி வருவாங்க.சென்னைலையும் ஷாப்பிங் போனா நம்மோட itemku தான் நேரம் அதிகம் எனக்கு செலவு ஆகும்.இன்னும் அப்புறம் சொல்றேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனி அப்படியா...உங்களுக்கு புடவை கட்ட ரொம்ப பிடிக்குமா? அப்படினா நல்ல கட்டவே தெரியும். எனக்கும் புடவையும் பிடிக்கும் இருந்தாலும் கட்டுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வேன். அதனாலே எங்காவது போகவேண்டுமென்றால் நேரம் ஆகும். கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா தான் கட்டி விடுவாங்க...பெரிய போர்க்களம் மாதிரி இருக்கும்...கடுப்பாகி அப்பா புடவை வேண்டாம் நீ சல்வாரே போட்டுக்கோ என்பார். இப்பொழுது என் கணவரும் அதே தான் சொல்கிறார் :( நீங்க ஒல்லியா உயரமா இருக்கிறதுக்கு (!!) உங்களுக்கு சல்வார் மற்றும் ஜீன்ஸ் நன்றாக இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

என்ன வனி இப்படி பொசுக்குனு முடிச்சிட்டீங்க:(

சரி உங்களின் கனவு உடை என்னான்னு சொல்லவே இல்லையே?

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அம்மாடியோ இத்தனை விஷயமா.....இதை இதை நான் எதிர் பார்த்தேன். ரம்மி நீங்க தான் நல்ல பொண்ண நான் கேட்ட எல்லா விஷயத்துக்கு புட்டு புட்டு பதில் சொல்லிருக்கீங்க.

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. கலர் இல்லையென்றால் வாழ்க்கையிலே ஒரு வெறுமை இருப்பது போல் தோன்றும். நீல வானம், மஞ்சள் சூரியன், இவ்வளவு ஏன் நாம் தினமும் சாப்பிடும் / சமைக்கும் காய்கறிகளில் எத்தனை நிறம் ...அப்பப்பா ....கலர் பற்றி சொல்லி மாளாது.

உங்களுக்கு நல்ல டேஸ்ட். நான் உங்களை எல்லா விதமான உடையிலும் பார்த்திருக்கிறேன். எல்லாமே உங்களுக்கு நன்றாகவே பொருந்தும். அதுலேயும் நீங்கள் புடவை கட்டினால் அப்படியே அப்பாவியாகவும், ஜீன்ஸ் போட்டால் அதற்குரிய ஒரு கம்பீரமும் இருக்கும். ஓ நீங்க சிம்பிள் பியுடியா? இதுலேயும் உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒத்துமை...எனக்கும் ப்ர்ள் என்றால் ரொம்பவே இஷ்டம்.

கல்யாணத்துக்கு உங்களுக்கு பிடிக்கலைனாலும் போடோகாகவாது போட்டிருக்கணும் :( போடோவுக்கு மேக்கப் போட்ட முகம் தான் நன்றாக இருக்கும். இந்த போடோக்களை நாம் காலம் முழுவதும் பொத்தி பொத்தி வைத்து பாக்க வேண்டுமல்லவா? சரி விடுங்க அறுவதாம் கல்யாணத்திற்கு போட்டுக்கலாம் ;)

மல்லிகை ரொம்பவே பிடிக்குமா? நியூ யார்க்கில் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அப்பா கணவர் எல்லாரும் இப்படி நம்பலை திட்டிகிட்டே இருப்பாங்க..அதுக்கெல்லாம் நாம அசைந்து கொடுக்கிற ஆளா? மறுபடியும் வாங்க கடைக்கு போய் தானே நிற்ப்போம். வேணுமானால் அவர்களை (வாங்கித்தருவதை) நிருத்தசொல்லுங்கள் :)

ஏங்க சிங்கப்பூரில் எவ்வளவு ஐட்டம் கிடைக்கும் போயும் போயும் நைட்டியா வாங்கி வர சொன்னீங்க :(

நாம் ஷாப்பிங் செய்யும் நேரத்தை வைத்து எவ்வளவு ஜோக் தான் வந்தாலும் நம்பளால் சீக்கிரம் ஷாப்பிங் பண்ண முடிவதில்லையே...நான் என்ன செய்வேன் (சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்) ;)

சரி உங்களின் கனவு உடை என்னான்னு சொல்லவே இல்லையே?

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் ஒல்லியா, உயரமா இருப்பேன்னு யார் சொன்னா??? ;) நான் சரியான குட்டை கத்திரிக்காய். சரி அதை விடுங்க... எனக்கு ஜீன் பொருந்தும், ஆனாலும் புடவையில் தான் நான் ரொம்ப நீட்ட இருப்பதாக தோன்றும். சாப்ட்வேர் கம்பெனியில் இருந்தப்போ வாரத்தில் ஒரு நாள் புடவையில் தான் போவேன்... அந்த ப்ளோர்ல இருக்க எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... வித்தியாசமா வருது இதுன்னு. வெள்ளி கேஷுயல்ஸ்... எல்லாரும் ஜீன், நான் புடவை... எப்படி காமடியா இருக்கும்??? என்னை நிறைய பேர் அடையாலம் கேட்பதே “புடவையில் வருவாங்களே...”னு தான். அந்த அளவு புடவை விருப்பம்... கண்டபடிலாம் கட்ட மாட்டேன்... ஃபேன்ஸி டைப் தான் அதிகம்... சில்க் கட்டினாலும் சில்க் மாதிரி தெரியாது.... முக்கியமா ஆபீஸ்க்கு. என்னை யாருன்னே தெரியாதவங்க கூட வந்து “சாரி ரொம்ப அழகா இருக்கு... எங்க வாங்குனீங்க?”னு கேட்கும் அளவுக்கு என் சாரீஸ் பிரபலம். :)

வெளிநாடு போன பிறகும் பார்ட்டி அது இதுன்னா ஹேண்ட் ஒர்க் சாரீஸ், பெரிய பன்க்‌ஷன்னா பட்டு, இப்படி புடவை தான் எல்லாமே.

மேக்கப்... பேச்சுக்கே இடமில்லை. பவுடர் கூட போட மாட்டேன்... என்னை நேரில் பார்த்தவங்களுக்கு தெரியும். பொட்டு வித விதமா வைக்க பிடிக்கும். ஐலைனரில் நானே டிசைன் செய்வது உண்டு. உடையில் இருக்கும் அதே டிசைனை நெத்தியில் கொண்டு வருவது விருப்பம்.

நெயில் பாலீஷ்... இப்போதைக்கு ஒரு 15 ஷேடாவது வைத்திருப்பேன். அத்தனை பைத்தியம்.

வளையல் போடவே மாட்டேன்... புடவை கட்டும் போது மட்டுமே வளையல். என்ன மாதிரி வளையல் என்பது புடவையை பொருத்தது.

கொலுசு... மெல்லிசா இருக்கணும்... இந்த கலர் கலர் எனாமல் வேலையெல்லாம் பார்த்தாலே ஓடிடுவேன்.

பிடிச்ச கலர்... மெரூன், டார்க் க்ரீன், மயில் கழுத்து கலர், ப்ரவுன், வெள்ளை இதெல்லாம் பிடிக்கும். பிடிக்காதது கறுப்பு. சின்ன டிசைன் கறுப்பில் இருந்தாலும் விரும்ப மாட்டேன்.

இப்போ விளக்கமா சொல்லிட்டனா??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல தலைப்பு

எனக்கு பிடித்த கலர் சிகப்பு, பிங்க், பீக்காக் புளு மற்றும் கருப்பு

எனக்கு கருப்பு கலர் மிகவும் பிடிக்கும். நான் ஏதாவது விசேஷங்கள் என்றால் மட்டுமே புடவை கட்டுவேன். மற்றபடி எல்லாம் இடங்களுக்கும் சல்வார்தான். நிறைய டிசன்கள் வித விதமாக தைத்து போட வேண்டும் என்று ஆசை படுவேன். நான் ஒன்று சொல்வேன் ஆனால் அந்த நல்லவர் அதான் டைலர் ஒரு விதமா தைத்துக் கொடுப்பார். அப்பவருமே கோவம் இன்னொருவரிடம் கொடுப்பேன் நான் சொல்லும் போது எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி தலையை ஆட்டுவார்கள் ஆனால் சொல்வதை செய்ததே கிடையாது. எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

நான் பெரும்பாலும் எடுக்கும் துணிகளில் கருப்புகலரை தான் தேடி தேடி எடுப்பேன். அதற்காக என் அம்மாவிடம் வாங்காத திட்டு கிடையாது.

மேக்கப் சுத்தமாக பிடிக்காத ஒரு விஷயம். ஆனால் பொட்டு மாடல் மாடலாக வைக்க பிடிக்கும். எங்கு போனாலும் முதலில் அதை தான் தேடுவேன். என் கணவர் நீ பொட்டு கடையே வைத்துவிடுவாய் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். நான் எதையும் என் காதிலே போட்டுக் கொள்ள மாட்டேன். பிறகு கண்ணுக்கு மை வைப்பது ரொம்ப பிடிக்கும்.

நகம் வளர்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதால் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாலும் என்னையே அறியாமல் கடித்துவிடுவேன். அதனால் நெல்பாலிஷ் கிட்ட போக பிடிக்காது.

வளையல் கல்லூரி பருவத்தில் வித வித கை முழுவதும் வலையல் போட்டுக் கொண்டு போவேன். நீ என்ன வளையல் காரியா என்று என் தோழிகள் கிண்டல் செய்வார்கள். இப்பொழுது ஒன்லி இரண்டு கோல்டு வளையல் அப்படியில்லையென்றால் குட்டி பிரேஸ்லட்.

எந்த நகையாக இருந்தாலும் எனக்கு குட்டி குட்டியாக இருந்தால் தான் பிடிக்கும். கொலுசும் அப்படிதான் இருக்க வேண்டும்.

அதே போல் எங்கு சென்றாலும் பர்ஸ் மற்றும் பேங் எடுக்காமல் இருக்க மாட்டான்.

கனவு உடை என்றால் எல்லாம் மாடன் உடைகளும் (ஜீன்ஸ் டாப் 3/4) இது போல் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னவரோ நீ உன் எடையை குறைத்தால் தான் இது போட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கின்றார். எடையை குறைப்பது என்பது சாதாரணமான விஷயமா? எப்பொழுது குறைப்பது அந்த உடையை எப்போ நான் போடுவது. இருந்தாலும் தியேட்டர் ஷாப்பிங் போகும் போது ஜீன்ஸ் போட்டு கொண்டு 3/4 டாப் போட்டுக் கொண்டு போவேன்.

இப்போதைக்கு இது தான் என் புலம்பல்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வனி சேம் பின்ச்... எனக்கும் புடவை ரொம்ப பிடிக்கும். ஆபிஸ் வருவதால் எப்பவுமே சுடி தான். ஏதாவது பங்ஷன் போனால் புடவை அதுக்கு மேட்சாக கண்ணாடி வளையல் போடுவேன். சுடியும் சிம்பிள் டிசைன்ல தான் போடுவேன்.

பிடித்த கலர்ஸ் ப்ளூ, மஞ்சள், கீரின், பிங்க்.

மேக்கப் போட மாட்டேன். நகம் வளர்ப்பது பிடிக்கும். ஆனால், இதுவரை அது முடியவில்லை.சிலசமயம் எனக்கு இருக்கும் கொஞ்சம் நகத்திற்கு நெயில்பாலிஷ் போடுவேன்.

கொலுசு அதிக மணி இல்லாமல் போட பிடிக்கும்.

போட நினைக்கும் டிரெஸ்னு பார்த்தா மாடர்ன் டிரெஸ் சொல்லாம். ஆபிஸில் வெள்ளிகிழமை மாடர்ன் டிரெஸ் போடலாம். ஆனல் நான் சுடி தான் போடுவேன். அதற்கு என் கணவர், செக்யூரிட்டி கேஸ்வல்ஸ்'ல வந்தா தான் உள்ளே அலோவ்டுனு சொன்னாலும் நீ போட மாட்டே. அப்படி ஒரு நாள் வரனும் அதை நான் பார்க்கணும்ணு சொல்லுவார். என்ன பண்ணுறது எனக்கும் ஆசைதான்,அதெல்லாம் எனக்கு மேட்ச் ஆகுமானு பயத்தில் போடுவதே இல்லை.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்