பட்டிமன்றம்- 42 *****என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது? பள்ளி பருவமா?கல்லூரி பருவமா? *****

அறுசுவையின் ஆசிரியர்களுக்கும், வாத்தியாருக்கும், சீனியர்ஸ்களுக்கும்,
ஜூனியர்ஸ்களுக்கும், நியூ கம்மர்ஸ்களுக்கும் வணக்கம், நமஸ்தே, வெல்கம்
பண்ணுவது புது முக நடுவர்.!!!!!!

எதுக்கு இவளோ பெரிய பில்ட் அப் ன்னு பாக்கறீங்களா? வேற ஒன்னும் இல்லைங்க, இப்படி வணக்கம் சொல்லிட்டு இருந்த காலம் நியாபகம் வரட்டும்ன்னு தான். இப்ப தெருஞ்சு இருக்குமே, அதாங்க அதே தான் நம்ம பட்டிமன்ற தலைப்பு.

****************************************************************************
என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது? பள்ளி பருவமா?கல்லூரி பருவமா?
****************************************************************************

காலத்துக்கு தகுந்த தலைப்பை தந்த "ரம்ஸ்" அவர்களுக்கு நன்றிகள் பல :-)
பட்டியில் வாதாடும் நல்உள்ளங்கள், எந்த அணிக்காக வாதாடுறீங்கன்னு தலைப்புல போட்டு வாதாடுங்க. புதுசா வரவங்களுக்கு அணி குழப்பம் வராமலிருக்கும்.

புது முக நடுவர், வாதங்களை கேக்க ஆவலாக, தயாராக உள்ளேன்.
வரவங்க இந்த சாக்லேட் >()< வாங்கிட்டு தொடருங்க :-)

பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு, கல்லூரியில் சேர்க்கும், இந்த நேரத்துல
கண்டிப்பா நாம சொல்ற ஒரு வார்த்தை "நாங்க எல்லாம் படிக்கும் போது...."(இதையே தான நம்ம அம்மா,அப்பா சொல்லி இருப்பாங்க. டயலாக் மாத்தவே மாட்டேகறாங்க ன்னு நீங்க நினைக்கற மைன்ட் வாய்ஸ் கேக்குது)

இதை சொல்லாத அம்மா,அப்பா இருக்க மாட்டாங்க. உங்கள் பள்ளி/கல்லூரி நடந்த நினைவுகளை உங்கள் கண் முன் கொண்டுவரவே, உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில், இந்த தலைப்ப எடுத்து இருக்கேன். வாருங்கள் தோழிகளே/தோழர்களே, வந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இளமையில் கல்வி சிலையில் எழுத்து – கல்வி மட்டுமல்ல... நினைவுகளும் தான்.
பசுமரத்தாணி போல என்று சொல்வார்ளே அது போல சூது வாது இல்லா மனத்தை உடைய
பள்ளிப் பருவந்தான் இனிது.
அறிவு முதிர்ந்த பின் வரும் கல்லூரிப் பருவம் தனக்கு எனச் சில வரைமுறைகளை உருவாக்கிக் கொள்ளும்.
பென்சில் சீவினா வரும் வட்டவட்ட பூ
நண்பன் கடித்துத் தரும் பண்டம்
இது போல சொல்லிட்டே போகலாம்.

எதையும் புதிதாய்ப்; பார்ப்பது பள்ளிப் பருவம்
எதையும் புதிராய்ப் பார்ப்பது கல்லூரிப் பருவம்

வாழ்க்கை விளையாட்டு - பள்ளிப் பருவம்
வாழ்க்கை போராட்டம் - கல்லூரிப் பருவம்

பாலர் பள்ளி – தொட்டில் இன்பம்
தொடக்கப் பள்ளி – தாய்மடி இன்பம்
நடுநிலைப் பள்ளி – ஆடுகள இன்பம்
உயர்நிலைப் பள்ளி – நட்பின் இன்பம்
மேல் நிலைப் பள்ளி - இதயத்தின் இன்பம்

வாங்க நடுவரே.. நல்ல தலைப்போடு தான் வந்து இருக்கிங்க..

முதல் முதலில் பயந்துக் கொண்டே போன ஸ்கூல்...சிலேட்ட் மற்றும் பென்சில் வாசம்.. இன்க் கடன் கொடுக்கும் தோழன், பழைக்கால விளையாட்டை (அப்போ மட்டும் தான் பார்க்க முடிந்தது ) கூடி விளையாடிய நாட்கள்.. பாவாடை ஜாக்கெட் போட்டுக் கொண்டு வரும் தோழி, முதல் முதல் நம் பெயரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய நோட் புக்..சனி ஞாயிறு விடுமுறை.. பரிட்சை அட்டை.. நீண்ட விடுமுறைக்காக காத்திருந்த நாட்கள்..

நமக்கே நமக்கென இருக்கும் ஹாமன்ரி பாக்ஸ், பேக், ஷூ...
முதல் முதல் பாடம் நடத்திய பவுலின் டீச்சர்..
முதல் தோழியான மலர்.. முதல் தோழன் ஆன சசி ;)

எதையும் பற்றி கவலை இல்லாமல், நல்ல தூக்கம், நல்லா சாப்பாடு, படிப்பு, விளையாட்டு என அழகாக சென்ற மறக்க முடியாத பள்ளி எனும் நந்தவன பருவத்தை பற்றியே நான் பேச வந்துள்ளேன். வாதம் தொடரும்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிமையாக நினைக்கும் காலம் பள்ளிக் காலமே...
இப்ப நிலைமைக்கு கட்சி முடிவெடுத்துட்டேன்... வாதங்கள் யோசிச்சுட்டு வந்து டைப்புறேன்....
நன்றி நடுவரே..ஒரு அருமையான கனவுலகத்திற்கு இழுத்து சென்றதற்கு...

ஹாய் தோழிஸ் உடலும் உள்ளமும் நலமா.பாகு பாடு எதுவும் யின்றி பழகும் அந்த பள்ளி பருவமே மிகவும் இனியது.

பள்ளி பருவத்திற்கு நித்தி அழகான விளக்கம் தந்து இருக்கீங்க

//பென்சில் சீவினா வரும் வட்டவட்ட பூ
நண்பன் கடித்துத் தரும் பண்டம்//// - இந்த வரிகள் என்னக்குமே பள்ளி பருவத்தை நினைவுப்படுத்துகின்றன.

//எதையும் புதிதாய்ப்; பார்ப்பது பள்ளிப் பருவம்
எதையும் புதிராய்ப் பார்ப்பது கல்லூரிப் பருவம்//// - கல்லூரி பருவம் அவளோ புதிராவா பாக்கறாங்க???

/வாழ்க்கை விளையாட்டு - பள்ளிப் பருவம்
வாழ்க்கை போராட்டம் - கல்லூரிப் பருவம்

பாலர் பள்ளி – தொட்டில் இன்பம்
தொடக்கப் பள்ளி – தாய்மடி இன்பம்
நடுநிலைப் பள்ளி – ஆடுகள இன்பம்
உயர்நிலைப் பள்ளி – நட்பின் இன்பம்
மேல் நிலைப் பள்ளி - இதயத்தின் இன்பம் /// - பலே, பிரமாதம் நித்தி. வாதங்கள் அருமை. தொடர்ந்து உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

/முதல் முதலில் பயந்துக் கொண்டே போன ஸ்கூல்.// - நீங்க பயந்துட்டே போனீங்களா(நிஜமாவா?) ?

//முதல் முதல் நம் பெயரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய நோட் புக்.நமக்கே நமக்கென இருக்கும் ஹாமன்ரி பாக்ஸ், பேக், ஷூ...
முதல் முதல் பாடம் நடத்திய பவுலின் டீச்சர்..
முதல் தோழியான மலர்.. முதல் தோழன் ஆன சசி ;) .// அடடே கலக்கறீங்க, என்ன சொன்னாலும் ஹாமன்ரி பாக்ஸ், பேக், ஷூ மாதிரி வருமா? வாய்ப்பே இல்லை தான். முதல் தோழன், தோழி எந்நாளும் மறக்க முடியாத நினைவு தான்

//சனி ஞாயிறு விடுமுறை..,நீண்ட விடுமுறைக்காக காத்திருந்த நாட்கள்..// - இதில் தான் சிறு குழப்பம், கல்லூரியிலும் இது அனைத்தும் கிடைக்குமே??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய்... அன்பு நடுவர் சுகந்தி அவர்களுக்கு இனிய காலை வணக்கம்....

எனக்கு என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் கல்லூரிப் பருவம் தான் நடுவரே...

என்னதான் பள்ளியில நாம நிறைய நண்பர்கள், விளையாட்டுகள் அப்படி இப்படீனு கிடைத்தாலும் நமக்கு ஒரு சுதந்திரத்தோடு, அர்த்தத்தோடு முழு நிறைவாஇருக்காது...

கல்லூரி விடுதியில் கழித்த நாட்களப்போல இனிமையான நாட்களை நம் வாழ்வில் எப்பவாவது திரும்ப கிடைத்திருக்கா....

நம்முடைய கல்லூரிகால சுற்றுலாக்கள், தோழியரோடு வெளியில் சென்று லூட்டியடித்த நாட்கள், செமஸ்டர் எக்ஸாமிற்கு பதட்டபடாம படிச்சி அப்படியே பதட்டமில்லாம 85% ம் வாங்கிக் குவித்த நாட்கள்...... அப்பப்பா.......

பள்ளி நாட்களில் இவை அனைத்தும் பனிஷ்மென்ட், இம்ப்போசிஷன், திட்டு ஆகியவை இல்லாமல் கடந்திருப்போமா நாம்......?

கல்லூரியில நாம் என்ன எழுதிவச்சாலும் நம்ம மனசு நோகாம மார்க் போட்டு நம்மை வாழ்த்துறாங்களே....

கேம்ப் நாட்களை மறக்க முடியுமா....

புத்தக மூட்டையிலிருந்து விடுதலை...

சீருடையிலிருந்து விடுதலை...

டெய்லி டெஸ்ட், பருவத்தேர்வு,காலாண்டு, அரையாண்டு நு வரிசையா டெஸ்ட் மேல டெஸ்டிலிருந்து விடுதலை...

நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போடுவதிலிருந்து விடுதலை...

ஒரு புத்தகமே போடலாம்......

அந்த அளவுக்கு மகிழ்ச்சியையும், நம்முடைய பர்சனாலிட்டியை நிர்னயிக்கும் அனுபவங்களே கல்லூரியில் கிடைக்கிறது...

எனவே கல்லூரி நாட்களே என்றும் இனிமை தருபவை என்று கூறி என்னுடைய வாதத்தை தொடங்குகிறேன் நடுவர் அவர்களே.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஒரு வழியா கட்சிய முடிவு பண்ணியாச்சா தேன்மொழி, விரைவில் வாதங்களோடு வாங்க. நடுவர் காத்திருக்கிறார்.
பெரோசா - வாருங்கள், நீங்களும் பள்ளி பருவமா, வாதங்களோடு சந்திப்போம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நடுவருக்கு வணக்கம்.

கல்லூரிப் பருவத்தில் நமக்கு சிறிது முதிர்ச்சி வந்து விடுகிறது..

பள்ளிப் பருவத்தில் அது கிடையாது...

ஃப்ரெண்ட் கூட சண்டை போட்டாலும் அதை மறந்துட்டு அடுத்த நாள் திரும்ப ஃப்ரெண்ட்...

கல்லூரி ஃப்ரெண்ட் கூட சின்ன ப்ரச்னை என்றாலும் அது உறுத்தல் தான்....

சண்டை கூட சூப்பர்தான்...எங்கப்பா எனக்கு மிட்டாய் வாங்கி தருவாங்கன்னு ஒரு குட்டி சொன்னா அடுத்தவர் எங்கப்பா இரண்டு மிட்டாய் வாங்கி தருவாங்களேன்னு சொல்ல..இது தொடர்ந்து அனேகமாக ஒரு குழந்தை முடிந்தவரை கைகளை விரித்து எங்கப்பா நிறை........ய்ய்ய வாங்கித் தருவாங்களேன்னு சொல்லி அது முடியாது....ஆனாலும் அடுத்த ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் இரண்டு மீண்டும் நண்பர்களாக ஓடிப் பிடித்து விளையாடும்...

குழந்தைகள் நண்பர்கள் பார்த்திங்கன்னா இரண்டு பேரும் தோள் மேல் கை போட்டு பேசிக் கொண்டே நடப்பாங்க..என்ன பேசிக்குவாங்க...ஆராயப் படாது..அதை அனுபவிக்கணும்...

பள்ளி பருவத்தில் எந்த பாடத்தை எப்ப படிக்கணும்னு நாம தீர்மானிக்க வேண்டாம்...டீச்சர் இந்த நாள் இந்த பாடம்னு மட்டுமில்லைங்க..கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும் என்றும் சொல்லித் தருவார்...

கல்லூரி நாட்களில் டீச்சர் நடத்தும் பாடத்தை நன்கு கவனித்து குறிப்பு எடுத்து நேரம் நாமே ஒதுக்கி படிக்கணும்...ஐயோ...கொடுமை...

பள்ளிப் பருவத்தில் ரொம்ப வெட்கம் வராது... அதனால் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் வந்தால் தைரியமாக கைதூக்கி கேட்க முடியும்...கல்லூரிப் பருவத்தில் வெட்கம் தடுக்கும்...

இன்னும் நிறைய இருக்கு..அப்புறம் வர்றேன்...

மேலும் சில பதிவுகள்