x

x

ஹாய் வினயா உதட்டின் மேல் பொரியாக வரும்போது அதில் ஏதும் நீர் கோர்த்துக் கொள்கிறதா? வலி இருக்கிறதா? மறைந்த பின் அந்த இடத்தில் கருப்பாக இருக்கிறதா? வரும் முன் உங்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அல்லது இருமல் இருந்ததா? தூக்கம் குறைவாக இருந்ததா? அல்லது ஏதாவது மனச்சங்கடங்கள் இருந்ததா?

என்னடா சின்னதா ஒரு சந்தேகம் கேட்டா இத்தனை கேள்வி கேட்கறாளேன்னு பார்க்கறிங்களா :). இதெல்லாம் இருந்தா இது வைரசால் வரும் பாதிப்பாக இருக்கலாம். நீங்க தெளிவா சொன்னீங்கன்னா என்னால் உதவ முடியும்னு நினைக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி கவி..
உங்களின் பதிவுக்கு...
நீங்க சொல்ற எந்த அறிகுறியும் எனக்கு இல்லை..
இரவு தூங்கும் போது ஆரம்பித்து காலை விழித்தவுடன் பொறி பொறியாக உள்ளது.
வலி இல்லை..
ஆனால் மிகவும் அசிங்கமாக உள்ளது..
இதற்கு தீர்வு சொல்லுங்கள்.
சில பேர் இதை பல்லி எச்சம் என்று சொல்லுகிறார்கள்..
ஆனால் சில நேரம் பல்லி இல்லாத போதும் இது வருகின்றது..

வாய்ப்புண்ணாக இருக்கலாம் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை சாப்பிட்டுப்பார்க்கவும்

மேலும் சில பதிவுகள்