குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது?

ஹாய் தோழிகளே நான் பஹ்ரைனில் இருக்கேன்,இது எனக்கு 8வது மாதம்,ஆகஸ்ட்டில் எனக்கு டெலிவரி தேதி டாக்டர் கூறி இருக்கிறார்,எனக்கு இங்கேதான் டெலிவரி பார்க்க வேண்டிய சூழ்நிலை,உறவினர்,நண்பர்கள் யாரும் அருகில் இல்லை.இங்கு ஹாஸ்பிட்டலில் நார்மல் டெலிவரி என்றால் 1 நாள் தான் தங்க முடியும் ,சிசேரியன் என்றால் 2 நாட்கள் தான்,இங்கு நர்ஸ் கிடைப்பது கடினம் குழந்தையை குளிப்பாட்ட.எனக்கு குழந்தையை எப்படி குளிப்பாட்ட வேண்டும் என்று தெரியாது.குழந்தையை குளிப்பாட்டும் போது,தண்ணீர் மூக்கினுல் செல்லாமல் எப்படி குளிப்பாட்டுவது?அப்படி மூக்கினுல் வாயினுல் தண்ணீர் சென்று விட்டால் என்ன முதல் உதவி செய்ய வேண்டும்.இல்லை குழந்தையை பாதுகாப்பாக குளிப்பாட்ட ஏதாவது சாதனம் உள்ளதா?எனக்கு இப்பொழுதே பயம் ஆரம்பித்துவிட்டது. யாராவது ஆலோசனை வழங்குங்கள்

எப்டி இருக்கீங்க அக்கா ,எனக்கு தெருஞ்சத ந சொல்றேன் ,தப்பா இருந்த மன்னிசுகொங்க
இரண்டு பாதங்களையும் ஒன்று சேர்த்து நீட்டி அமர்ந்துகொள்ளவும் பிறகு குழந்தையை முட்டிக்கிகீழ் நீல வாக்கில் படுக்க வைத்து நன்றாக இடது கையில் பிடித்து கொண்டு வலது கையில் நீர் எடுத்து ஊற்றி குளிப்பாட்டவும்.
மூக்கினுள் தண்ணீர் சென்று விட்டால் வாயால் உரிந்து துப்பவும் குளிப்பாட்டும்பொழுது கை கால்களை நீட்டி வலித்து குளிக்க செய்யணும் .
மூக்கு நேர எடுத்து விடனும் தலைக்கு குளிக்கும்போது கையை வெயிலுக்கு மறைப்பது போல் பாப்பா நெற்றியில் வைத்து கொண்டு பார்த்து நீர் ஊற்றவும். இப்டி தான் எங்க அம்மாவோட அம்மா எங்கள குளிபாட்னங்க என்னோட தம்பி தங்கை லம் குளிப்பாட்டி பார்த்துருக்கேன் அக்கா எனக்கு தெருஞ்சத சொல்லிட்டேன் இனி பெரியவங்க யாராது இன்னும் நெறைய சொல்லுவாங்க கேட்டுகோங்க பாப்பா நல்ல படிய பிரகனுனு ப்ரே பண்ணிகறேன் by Elaya.G

மஞ்சு,
முதலில் பயப்படாதீங்க நம் குழந்தையை நாமே குளிப்பாட்டுவது நல்லது. நல்ல emotional bonding உங்களுக்கும்,குழந்தைக்கும் ஏற்படும் bathtub வாங்கி வைத்து கொள்ளுங்க உங்களுக்கு எது safe and comfortable என்று நினைக்கறீங்களோ அதை வாங்குங்க
நீங்க இந்த வீடியோ லிங்க் பாருங்க:
www.youtube.com/watch?v=b9yefkiAMMU
www.youtube.com/watch?v=-RnxD-KRkw8
http://www.5min.com/Video/How-to-Give-a-Baby-a-Tub-Bath-149493517
(வேறு தள லிங்க் தரக்கூடாது என்றால் மன்னிக்கவும்,இது போன்றவை பார்த்தால் மட்டுமே புரியும்..)
மேலும் நல்ல experts உங்களுக்கு பதில் சொல்வாங்க
வாழ்த்துக்கள்!!!

என்றும் அன்புடன்,
கவிதா

குழந்தையை குளிப்பாட்ட bath tub கிடைக்கிறது. google தேடிபாருங்கள். மேலும் எப்படி குளிப்பாட்டுவது என்று you tube video இருக்கிறது. இந்த bath tub table மீது வைத்து கூட குளிப்பாட்டலாம். ஒரு துணி வைத்து மூகம், தலை தேய்த்து விடுங்கள். என் குழந்தைக்கு இப்படி தான் குளிப்பாட்டுகிறேன்.
இளயா சொன்னதுப் போல் bath tub bil நீவி தண்ணீர் ஊற்ற மூடியாது. நீங்கள் முன்னாடி நன்றாக நீவி மாசஜ் செய்து பிறகு குளிப்பட்டுங்கள். தளிகா பேபி மாசஜ் எப்படி செய்வது என்று ஒரு இழையில் குறிப்பிட்டு உள்ளார். தேடி பாருங்கள்.

you can find many videos regarding infant bath and massage in you tube. Search for it. whichever you feel safe and convenient for you follow that. In us doctors ask us to give bath after embrical card falls off. So give bath after embrical cord falls off. till that time you can give sponge bath. you can even find infant sponge bath videos in you tube.

Ask me if you have more doubts. I delivered baby on April and did lots of research for this bathing. You can get bath tub in online also.

Vidhya

ரொம்ப நன்றி தோழிகளே,கவிதா நீங்க சொன்னதை கேட்ட பிறகு எனக்கு கொஞ்சம் பயம் குறைந்திருக்கிறது,ராணி உன்னோட பதிலுக்கு ரொம்ப நன்றி.வித்யா நான் தளிகாவோட குறிப்புகளை தேடி பார்க்கிறேன்,ரொம்ப நன்றி வித்யா

ஹாய் மஞ்சு

யாரும் இல்லையென்றாலும் குழந்தையை நல்ல முறையில் கவனிக்கலாம்.ஆனால் சமையலுக்கு வீட்டுவேலைக்கு மட்டும் தான் உதவி தேவைப்படும்.
பிறந்து சில நாட்களுக்கு குழந்தை ரோசாப்பூ போல மென்மையாக மொழுமொழுவென்று இருக்கும் அதனால் தூக்க ஏதுவாக இருக்காது பயமாக இருக்கும்..கொஞ்சம் பழகும் வரை தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்காமல் பக்கெட்டில் வெண்ணீர் நிரப்பி நல்ல பருத்தி துணியை நனைத்து பிழிந்து துடைத்து விடலாம்.குழந்தையின் நேப்பி துணியாக பயன்படுத்தும் கடைகளில் கிடக்கும் துணி நன்றாக இருக்கும் ..பிறகு ஒரு வாரம் போனாலேயே நல்ல எடுத்து பழகியிருக்கும் மற்றும் குழந்தையின் உடம்பும் கொஞ்சம் கடினமாக தொடங்கினால் தூக்க வசதியாக இருக்கும் பிறகு டப்பில் குளிக்க வைத்துக் கொள்ளுங்கள்..அல்லது காலில் போட்டு குளிக்க வைக்கலாம்..
டப்பில் குளிக்க வைக்க என்றால் முதல் சில நாட்கள் ஒரு டேபிளில் மேல் டப் வைத்து வீட்டுக்குள்ளேயே குளிக்க வைக்கலாம்.என் தோழி ஒருவர் சொல்லி தந்தது போல் ஒரு டப்பில் சுத்தமான நீரும் இன்னொரு டப்பில் லேசாக பேபி பாத் கலந்த நீரும் வைத்து குழந்தையை உள்ளே வைத்து இடது கைய்யால் முதுகு வழியாக குழந்தைக்கு இடது கைய்யின் அடியே சப்போர்ட் கொடுத்து வலது கைய்யால் மென்மையாக தேய்த்து விட்டு எடுத்து நல்ல நீர் உள்ள டப்பில் வைத்து கழுவி எடுக்கலாம்..நல்ல பழகின பின் உங்களுக்கே எப்படி குளிக்க வைக்கவும் ஈசியாக இருக்கும்.
எண்ணை தேய்த்தெல்லாம் ஓரிரு வாரம் போன பின் செய்யலாம்..தினசரி குளிக்க வைத்து விடுங்கள்.குழந்தை ஓடியாடி அழுக்கு படியாவிட்டாலும் நம்முடைய வியர்வை எடுப்பவர்களின் மேலான அழுக்கு எல்லாம் இருக்கும்.எண்ணை தேய்த்தால் குளிக்க கொண்டு போக மெல்லிய பருத்தி துணியால் பொதிந்து தூக்கவும் கைய்யில் இருந்து வழுக்கும்.குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு போதும் பாத்ரூமில் சர்கஸ் பண்ண கூடாது.குளிக்க வைப்பது எங்கேயோ அங்கு அருகிலேயே துடைக்கும் டவல் மாட்ட எதாவது பொருத்தி விடுங்கள்.டாய்லெட்டில் சோப் பவுடர் போடாமல் க்லீனிங் பவுடர் உபயோகித்து கழுகலாம் வழுக்காது.
ஓரிரு மாதம் போனால் பேபி பாத் சேர் கிடைக்கும் அது நல்ல வசதியாக இருக்கும்.மூக்கில் தண்ணீர் போகாமல் இருக்க பேபி ஷாப்பில் எல்லாம் பாத் கேப் கிடைக்கும் வாங்கி வச்சுடுங்க.அல்லது இடது கை கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் விரித்து வைத்து குழந்தையின் நெற்றியில் மறைத்து தலைக்கு தண்ணீர் ஊற்றலாம்.போதுமான உறக்கம் உணவு ஓய்வு இருந்தால் அருமையாக தனியாக வளர்க்கலாம்.
முத்தான ஆரோகியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்

பாருங்கள் தளிகா எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்க. ரொம்ப பயனுள்ள குறிப்பு நன்றி தளிகா

மேலும் சில பதிவுகள்