உல்லன் மாலை - எளியமுறை

தேதி: June 7, 2011

4
Average: 3.8 (12 votes)

 

உல்லன் நூல் விரும்பிய நிறங்கள்
பெரிய கோல்டன் மணிகள் - 40
பெரிய ஊசி

 

உல்லன் நூலை மூன்று விரல்களில் வைத்து 80 சுற்றுகள் சுற்றி முடித்து கைகளால் உருவி பூத்தொடுப்பது போல் முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். நன்கு இறுக்கமாக 2 அல்லது 3 முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். பின்னர் இருமுனையையும் கத்திரிக்கோலால் நறுக்கிவிடவும். விருப்பமான மூன்றுநிறத்தில் உல்லன் நூலை எடுத்து ஓவ்வொரு நிறத்திலும் 7 பூக்கள் செய்துக் கொள்ளவும்.
பூக்களின் வெளியே நீட்டியிருக்கும் தேவையில்லாத துண்டுகளை கத்தரிக்கோலால் நறுக்கி விடவும்.
இதனை உள்ளங்கையில் வைத்து உருண்டையாகி பந்துப்போல் எடுத்துக் கொள்ளவும். எல்லா பூக்களையும் இதுப்போல் செய்யவும்.
ஊசியில் உல்லன் நூலை தேவையான அளவுக்கு இரட்டையாக கோர்த்து அதன் ஒரு முனையில் சிறிய லூப் போல் முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். 5 பெரிய கோல்டன் மணியை கோர்த்து அதனுடன் மூன்றுநிறத்தில் செய்துள்ள உல்லன் பந்துக்களைக் ஒவ்வொன்று எடுத்து மூன்று கோர்க்கவும். அடுத்து ஐந்து பெரிய மணியை கோர்க்கவும்.
இன்னும் இரண்டு ஜோடிகளை இதுப்போல் கோர்த்து முடித்ததும் 8 பெரிய மணிகளை கோர்க்கவும். அடுத்த ஜோடி உல்லன் பந்துகளை கோர்க்கும் போது பச்சைநிற உல்லன் பந்து முதலிலும், ப்ரவுன்நிற உல்லன் பந்து கடைசியிலும் இருப்பது போல் கோர்த்து வைக்கவும்.
மேலே கோர்த்த உல்லன் பந்துக்களை போன்றே மீதி இரண்டு ஜோடியையும் கோர்த்து கொள்ளவும். கடைசியில் 5 பெரிய மணிகளை கோர்த்து சிறிய லூப் போல் செய்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
நான்கு உல்லன் பந்து கோர்க்கும் அளவிற்கு உல்லன்நூலை எடுத்து ஊசியில் இரட்டையாக கோர்த்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். முதலில் ஒரு கோல்டன் மணியை கோர்த்து, முதலில், கடைசியிலும் ப்ரவுன்நிற உல்லன் பந்தும், நடுவில் ஆரஞ்சுநிற உல்லன் பந்தை கோர்த்து வைக்கவும். கடைசியில் ஒரு பெரிய கோல்டன் மணியை கோர்த்து முடிச்சுப்போட்டு வைக்கவும்.
மீதி உல்லன் நூலை நறுக்கிவிட்டு ஊசியை தனியாக எடுத்து வைக்கவும். இந்த குஞ்சத்தை ஏற்கனவே கோர்த்து வைத்துள்ள மாலையின் நடுவில் எட்டு மணிகளில் இடையில் விட்டு அந்த நூலினாலே நன்கு இறுக்கமாக முடிச்சுப்போட்டு கொள்ளவும்.
உல்லன் பந்துகளை கொண்டு செய்யக்கூடிய எளிய மாலை ரெடி. படத்தின் அளவிற்கேற்ப உல்லன் பந்துக்களை கோர்த்து பெரிய மாலையாக செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சிம்பிளான சூப்பர் மாலை.. கலக்கலா இருக்கு
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சம கியூட் மாலை. நீங்க செய்யும் எல்லா வேலையிலும் எனக்கு ரொம்ப பிடிச்சது உங்க கலர் காம்பினேஷன்.... சம சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாலை அழகா இருக்கு டீம். ;)
நானும் அதையே தான் நினைச்சேன் வனி. கலர் காம்பினேஷன் நல்லா இருக்குல்ல.

‍- இமா க்றிஸ்

அன்பு அறுசுவை டீம்,

சிம்பிளான செய்முறை. அழகாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி