எண்ணெய் குளியல்

ஹாய்

எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும். எண்ணெய் குளியல் எடுத்த நாட்களில் கட்டாயமாக எடுத்து கொள்ள வேண்டிய உணவு ஏதாவது இருக்கிறதா? மதியம் தூங்கலாமா? பெண்கள் வெள்ளிக்கிழமைகளில்தான் எடுக்க வேண்டுமா? எந்த வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும்? குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். உடல் முழுவதும் எண்ணெய் தேய்க்க வேண்டுமா? (முகம் உட்பட).

தெரிந்த தோழிகள் கூறவும்.

thanks
amutha

எனக்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பது பற்றி எதுவும் தெரியலைங்க.நானே அறுசுவையில் கேட்கவேண்டும்னு இருந்தேன் நீங்களே கேட்டுட்டீங்க.நன்றிங்க.எனக்கும் 7வயது பொண்ணு இருக்கா.அவளுக்கு சூட்டு உடம்பு.எண்ணேய் தேய்த்து குளித்தால் உடம்பு சூடுதணியும்னு தெரியும்.நம்ம தோழிகள் வந்து பதில் சொல்லுவாங்க.வெயிட் பன்னுவோம்.நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சீகைக்காய் தூள் தேய்த்து தான் குளிக்கனுமா?இல்லை பேபி சாம்பூ யூஸ் பண்ணலாமா?
என்றும் அன்புடன்
மனோரஞ்சிதா.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

எண்ணை தேய்த்து ஸ்பெஷலா எதாவது செய்வாங்களோ என்னவோ எனக்கு தெரிந்து குழந்தைகளுக்கு என்றால் பிறந்து ஓரிரு வாரம் முதலே பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணை உடம்பு முழுக்க முகம் தலை உட்பட தேய்த்து குளிக்க வைப்போம்..
பெரியவங்களுக்கு நல்லெண்ணை சூடுபடுத்தி இரண்டு மிளகு,வெந்தயம் போட்டு வெடித்ததும் ஆஃப் பண்ணிட்டு எலுமிச்சை நீர் சில துளி விட்டு ஆறியபின் தலைக்கு தேய்ப்போம்..உடம்புக்கு வெறும் நல்லெண்ணை தேய்ப்பார்கள் அல்லது அதிகம் தலைக்கு மட்டும் தான்.
ஆனால் சுடு நீரில் குளிக்கா விட்டால் உடம்பில் எண்ணை போகாது.பயத்த மாVஒ கடலை மாவோ அல்லது சோப்போ தேய்ப்பார்கள்..தலைக்கு அரப்பு தேய்க்கலாம் ரொம்ப நலது..அல்லது சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குளிக்கலாம்..இப்படி தான் கேள்விபட்டிருக்கேன்

பொதுவா எண்ணெய் தேய்த்து குளிக்குற அன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் எதுவும் சாப்பிட கூடாது. தயிர், மோர், ஜூஸ், பழைய சாதம் இதெல்லாம் சாப்பிட்டா உடனே சளி பிடிக்கும்னு சொல்வாங்க. மற்றபடி இது சாப்பிடனும்னு ஏதும் இல்லை. ரொம்ப அலர்ஜி, சளி பிடிக்கும் தன்மை இருந்தா பகலில் தூங்காமல் இருப்பது நல்லது, இதுவும் சளி பிடிக்காம இருக்க தான். நல்ல சூடான நீர் ஊற்றி குளிப்பது தான் சரி... கூடவே எண்ணெய் தேய்ச்சாலே சோப்பு, ஷாம்பூ போடுவதை விட தளிகா சொன்னது போல் பயத்தம் மாவு, சியக்காய் தான் பெஸ்ட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எண்ணைய் குளியல் மறு நாள் அவசியம் தலைக்கு சும்மா குளிப்பது முக்கியம்

மறுநாள் வெறும் தலை குளிக்கவேண்டியதற்க்கான காரணத்தை கொஞ்ம் சொல்லமுடியுமாபா எனக்கு ஏன்மு தெரியலை அதனாலதான் தெரிஞ்சிக்கிட்டா கடைப்பிடிப்பதற்க்கு ஈசியா இருக்கும்.

சொல்லுவாங்கப்பா எனக்கும் காரணம் தெரியலை சூடு பிடிக்கும்னு சொல்லுவாங்க என்னனூ சரியாதெரியலை ஒருமுறை எனக்கு மறு நாள் நீர்கடுப்பு வந்தது அதிலிருந்து நான் மறு நாள் குளித்துவிடுவேன்

பசரியா உங்க பதிலுக்கு நன்றி இதுவும் ஒரு சரியான காரணம்தான் கண்டிப்பாக கடைபிடிக்கனும் என் மகளுக்கு இந்த பிரச்சனை இருக்கு ஏன்மு தெரியாம இருந்த இப்ப உங்களால தெரிஞ்சிக்கிட்ட .

நீர்கடுப்புக்கு ஒரு நல்ல மருந்து கத்தாழை. தோல்சீவிட்டு சதைப்பகுதியை நன்றாக 7முறை அலசி பின் சாப்பிடக்கொடுங்கள். சரியாகும் . நீர்கடுப்புக்கும், கர்பபைக்கும் ஒரு நல்ல் மருந்து. கிருமிகளை பூச்சிகளை அழிக்கும் சக்தி கொண்டது. கர்பிணிகள் தவிர்க்கவும். சாப்பிடக்கூடாது.

நீர்கடுப்புக்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் இனிப்பு நன்கு உறைக்குமாறு சர்க்கரையை சேர்த்து குடித்தால் உடனே குணம் தெரியும். ஜூஸ் வகைகள், வெள்ளரி போன்றவை கைமேல் பலன் தருபவை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்பனா, நலமா? சர்க்கரை என்றால் ஜீனியா இல்லை நாட்டு சர்க்கரையா? தெளிவு படுத்தவும்.

மேலும் சில பதிவுகள்