நகைச்சுவை நேரம்... அறுசுவையில இந்த சுவையையும் சேர்த்து சுவைக்கலாம் வாங்க!!!

ஹலோஓஓஒ ........... எல்லோரும் எப்படிங்க இருக்கீங்க? நான் தான் நானே தான்... திரும்ப வந்திருக்கேன்... இனிமே அடிக்கடி வர முயற்சி பண்றேன்.
இது புதுசு கண்ணா புதுசு... சில ( ஓர் வருடத்திற்கும் மேல இருக்கும்) நாட்களுக்கு முன் "காமெடி டைம்" என்ற இழைகள் இரண்டு நல்லா சுவாரசியமா ஓடியது.
நானும் பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதையே ரிபீட் கொடுக்க விரும்பல. தோழி தாமரை ரொம்ப நல்லா எழுதி இருப்பாங்க... அவங்க மகன் செய்த குறும்புகளை... ரசிக்கும்படியாய்...( எங்கே போனீங்க தாமாரை? சந்தோஷ் எப்படியிருக்கிறார்?)
மேலும் பலரும் ரொம்ப நல்லா எழுதியிரூக்காங்க!!! அதற்கு பிறகு இங்கே நிறைய புது வரவுகள்... புதியவங்க மட்டுமில்ல பழைய நெடுநாள் உறுப்பினர்கள், மற்றும் அனைவருமே, எல்லோரும் இங்கே எழுதலாமே!!! முக்கியமாக கல்லூரி நாட்களில் செய்த குறும்புகள், குழந்தைகள் செய்யும் குறும்புகள், வீட்டிலே, அக்கம் பக்கத்திலே நடக்கும் நிகழ்வுகள் என.... நிறைய இருக்கு இல்ல!!!
பழைய இழைகளை கண்டிப்பாக தேடி கண்டு பிடிக்க முடியாது... முடிந்தால் அதோட லிங்க் எடுத்து அடுத்த பதிவில போடறேன்.
எல்லோரும் வரணும் சரியா??? தெரிஞ்சவங்க, தெரியாதவங்க என்றெல்லாம் பார்க்க வேண்டாம். கொஞ்சம் டல்லா இருக்கிறவங்க கூட இதை பார்த்து நாமும் எழுதலாமே ( படிக்கலாமே!) என்று இங்கே வரும்படி இருக்கணும் உங்க பதிவுகள்.
**** இதுல யாரும் கடி ஜோக்ஸ் எதுவும் சொல்லக்கூடாது****
**** சினிமா மற்ற ஊடகங்களில் இருந்தும் எடுத்து போடக்கூடாது****
### உங்க சொந்த வாழக்கையில் நடந்த சுவாரசியமான ரசிக்க, சிரிக்க கூடியதாக இருந்தால் மட்டுமே தாராளமாக எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம் ###
பொதுவா உண்மை சம்பவங்களில், இங்கே பெயர்கள் தவிர்க்கலாம், பொதுவான வார்த்தைகளோ, வேறு பெயர்கள் கொண்டோ பதிவுகள் அமையலாம்.

வாங்க! வாங்க!!! வாங்க!!! எல்லோரும் வந்து ஆரம்பிங்க!!!

இதோ பழைய இழைகள்...

Part 1: http://www.arusuvai.com/tamil/node/12602
Part 2: http://www.arusuvai.com/tamil/node/13504

மீண்டும் வருவேன்...

இந்த தலைப்பு பார்ததும் எனக்கு நினைவிற்க்கு வந்தது நானும் என் அன்னன் உம் செய்த குரும்பு தான்..

எங்கள் வீட்டீல் fridge வாங்கிய புதிதில் , நானும் என் அன்னன் உம் எப்பொழுதும் fridge ஐ திறன்து பார்த்து கொன்டே இருபொம்.... அதில் rose மில்க், rasna உற்றி குடித்து கொன்டே இருபோம்....இதனால் எங்கள் அம்மா fridge ஐ சாவி போட்டு மூடி வைத்து விடுவார்கள்.... சில நாட்கள் பொறுமையாக இருந்த நானும் என் அன்னனும், விடுமுறை வந்ததும் வீறுகொண்டு எழுந்தொம்....

அம்மா மதிய வேளையில் தூங்கிய பின் fridge சாவி ஐ கண்டு பிடித்த்தொம்... 2 சாவி இருந்தது, எங்ஙே ஒளித்து வைப்பது என்று யோசித்து, கடைசியில் எங்கல் வீட்டிற்க்கு பின்னால் இருக்கும் சாக்கடை இல் தூக்கி போட்டு வந்தொம்...

மறுநாள் அம்மா சாவி ஐ தேடிகொன்டே இருந்தாற்கள்,.... நானும் என் அன்னனும் சிரித்து கொன்ட இருந்தொம்..... எனக்கு திருமணமாகி விட்டது...அந்த fridge ஐ மாற்றி விடோம் ஆனாலும் இன்று வரை அம்மாவ்றிகு இது தெரியாது....

நானும் என் அன்னனும் எப்பொழுதாவது இதை பற்றி நினைத்து சிரித்து கொள்வொம்.... அம்மாவிற்கு தெரியாமல்.....:)

ஹலோ உமா... வணக்கம்.. நலமா?? உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... அனால் உங்கள் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன்....

நான் படிச்ச ஸ்கூல் எனக்கு மட்டும் இல்ல எங்க கூட படிச்ச எல்லாருக்குமே சொர்க்கம்... கல்லூரி ல படிக்கும் போது ஸ்கூல் வாழ்க்கை திரும்ப கிடைக்காத நு எங்கிருக்கோம்.. இன்னும் அந்த ஏக்கம் உள்ளுக்குள்ள இருக்கு.. அவ்ளோ இனிமையான நாட்கள்.. :) அப்போ நாங்க பண்ணின பல விஷயங்கள் இன்னும் நினைச்சாலும் காமெடி தான்... எங்களுக்கு பதினொன்னரை பன்னண்டு மணிக்கே பசிக்க ஆரம்பிச்சுடும்... வயறு எல்லாம் எரியும்.. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரீ கிளாஸ் எல்லாம் இருந்தா அமைதியா உக்காந்து வாட்சைப் பாக்க வேண்டியது தான்.. ஆனா இந்த கணித வகுப்பு வந்தா ஒரே குஷி தான்... எங்க கணித ஆசிரியருக்கு வயசு 56 அப்போ... (என்னா நாங்க படிச்சு முடிச்சு ரெண்டு வருஷத்துல ரிடையர் ஆய்ட்டாங்க...) ஆனா மேக் அப்பெல்லாம் ஏதோ அந்த காலத்து ஹீரோயின் மாதிரி தான்... நாடு நெத்தில போட்டு வெக்கறது.. தலைல சரம் சரமா பூ வெக்கறது நு... அதனால அந்த மிஸ்ஸுக்கு எங்க சீனியர்ஸ் எல்லரும சேந்து வெச்ச பேரு.. "ஜில் ஜில் ரமாமணி..."..

மிஸ் போர்டு ல கணக்கு போடும் போது நாங்க வாய்க்கு போட்டுக்குவோம்... நல்ல்லா தான் போய்கிட்டு இருந்துது... திடீர்னு ஒரு நாள்... அன்னிக்கு கிளாஸ் நடத்தும் போதும் வழக்கம் போல பசிக்கவே பிரெண்ட் கொண்டு வந்த சப்பாத்தி டப்பாவ திறந்தாச்சு... எங்க கேட்ட நேரம்... அன்னிக்கு என் பிரெண்ட மிஸ் கேள்வி கேட்டுட்டாங்க... :0 வாய்ல சப்பாத்தி... அவளால பதில் தெரிஞ்சாலும் சொல்ல முடியாது... மிஸ்ஸு வேற கேட்டுட்டே இருக்காங்க... வேற வழியில்லாம வாய்ல இருந்தத மென்னு முழுங்க ஆரம்பிச்சுட்டா... எங்க எல்லாருக்கும் சிரிப்பு தாங்க முடியல... கூட படிக்கற பசங்க வேற.. மிஸ் பாருங்க மிஸ் நீங்க கேள்வி கேக்கறீங்க.. அவ சாப்டுட்டே இருக்கா நு போட்டு குடுத்துட்டாங்க... மிஸ்ஸுக்கு ஏக கடுப்பு... ஆனா ஒண்ணும் சொல்லல... அப்பறம் தனியா பாத்து மன்னிப்பு கேட்டது வேற கதை..

இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்போம்... அவ மூஞ்சி போன போக்கையும்... மிஸ்ஸு மூஞ்சில இருந்த ஒரு மாதிரி குழப்பமான ரிஆக்சனும்.. போட்டு குடுத்த பையன் காட்டின கொக்கானியும்... :)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

வித்யா எப்படி இருக்கீங்க? நான் நலம் உங்களோடு பேசியதில் மகிழ்ச்சி. இப்படித்தான் எனக்கும் ஒன்னும் ஞாபகம் வருது.

காலேஜில எங்க தமிழ் சாருக்கு ரொம்ப வயசாயிடுச்சி அவரு கவர்மென்ட் காலேஜில வொர்க் பண்ணி ரிட்டையர் ஆகி எங்க காலேஜில வேலை செய்தாரு ஒரு எழுவது வயதுக்கு மேல இருக்கும். நாங்க செய்யும் குறும்புகளை சுத்தமா கண்டுக்க மாட்டாரு. நாமெல்லாம் லாஸ்ட் பெஞ்சு ஆளுங்க தானே! இதுல எங்க தோழி ஒருத்தி அவருக்கு தூரத்து உறவு முறை. அவ மட்டும் ரொம்ப நல்லவளா நடிப்பா. நாங்க மற்ற அனைவரும் கொஞ்சம் கண்டுகிறதில்லை. இப்படி தான் ஒரு(பல) நாள் ஏதோ சாப்பிட்டோம்... பார்த்திருப்பாரு போலருக்கு. அப்புறம் கொஞ்சம் நாளுக்கப்புறம் வழக்கம் போல கல்ச்சுரல்ஸ் வந்தது, என்னை மட்டும் கூட்டிகிட்டு போக எங்க கிளாசுக்கு ஒரு ஆள் வந்தாங்க... அவரு கிலாஸ் நேரம் அதனால ஏன்னு கேட்டாரு? Cartooning, Coloring, Painting - க்கு Paticipants பார்க்க போகணும் என்று (உண்மைய தான்) சொல்லிட்டு போக அவரு சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை...

நான் ஓடோடிவிட்டேன்!!! " உங்களுக்கு சாப்பிடத்தான் தெரியும்ன்னு நினைச்சேன்....இதெல்லாம் நல்லாவே தெரியுமா... நல்லது"........ சொன்னாரு. என்னை சாப்பாட்டு ராமாயின்னு நினைச்சுட்டார் போலயிர்ருக்கு...
என்ன இருந்தாலும் டீன் ஏஜில இப்படி சாப்பிட்டு, குறும்புகள் செய்து என்ஜாய் பண்ற வயசில இது கூட இல்லைன்னா எப்புடி???
இந்த வயசில இப்போ யாராவது செய்ய சொன்னா கூட முடியாதில்லை...............

என்னப்பா உங்க யாருக்கும் கதை சொல்லவே விருப்பம் இல்லையா??? இல்லை கதையே இல்லையா???
இப்போவெல்லாம் சுறுசுறுப்பு ரொம்பவே கொறஞ்சு போச்சு!!!

வித்யா உங்க பதிவை படிச்சதும் எனக்கு நாங்க செய்யறது ஞாபகம் வந்திடுச்சு :). நாங்களும் இப்படித்தான் தேர்ட் அவர் கிளாஸ் யார் வந்தாலும் சரி டிபன் பாக்ஸ் ஒப்பன் பண்ணிடுவோம். டிபன் பாக்ஸ் அப்படியே பாஸ் ஆகும் கிளாஸ் ஃபுல்லா டெஸ்க்குக்கு கீழேயே ரவுண்ட் அடிக்கும். ஆனா மாட்டிக்கிட்டது இல்லை. லெமன் சாதம் நெய்சாதம் புளிசாதம் வாசனை எல்லாத்தையும் டெஸ்க்குக்கு கீழேயேவா புடிச்சு வைக்க முடியும் :D லெக்சரர்ஸ் கண்டும் காணாத மாதிரி விட்டுட்டாங்க :).

ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது சிவில் எஞ்சினியரிங் கிளாஸ்னா எங்களுக்கு கொண்டாட்டம்தான். அவர் பேசறது எங்களுக்கு கேட்காது நாங்க பேசறது அவருக்கு கேட்காது. அவர் போர்டில் எழுத திரும்பினால் போதும் ஒரு பையன் ஜன்னல் வழியா வெளிய போயிட்டு வாசல் வழியா எக்ஸ்க்யூஸ்மீ சார் ன்னுட்டு உள்ளே வருவான். நாங்க சிரிப்பை அடக்க முடியாம கமுக்கமா சிரிச்சுக்கிட்டு இருப்போம். அஞ்சு நிமிஷம்தான் இருப்பான். மறுபடியும் வெளிய குதிச்சு போயிட்டு அடுத்த நிமிஷமே எக்ஸ்கியூஸ் மீ சார் ன்னு வந்து நிற்பான். இப்பத்தானே இவன் உள்ள வந்தான்னு அவருக்கு ஞாபகமே இருக்காது. உள்ள போன்னு விட்டுடுவாரு. இப்படியே மூணு நாலு தடவை செய்தான். இப்போ இன்னொரு பையன் நானும் போறேன்னு வெளிய குதிச்சான். அவன் போதாத நேரம் அவன் குதிக்கவும் ப்ரின்சி வரவும் சரியா இருந்திச்சு. அப்புறம் என்ன பரேடுதான் கூடவே எங்களுக்கும்.... பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்ததுக்கு!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா சொன்னதும் எனக்கும் ஞாபகம் வருதே....

+2 படிக்கும் போது கிளாஸ் ஜன்னல் வழியாக தெரிகிற தெருவில்தான் ஃபிசிக்ஸ் மற்றும் ஸுவாலஜி வாத்தியார்களின் வீடுகள்...

பதினோரு மணிக்கு மேல் இல்லத்தர்சிகள் மீன் கடைக்கு ஸ்கூல் தாண்டிப் போகும்போது "இன்றைக்கு சாளை மீன் வாங்காத!" இப்படி இவர்கள் சொல்லிருப்பதாக அண்ணன் சொல்லுவான்.. அண்ணனும் அதே ஸ்கூலில் தான் எனக்கு 9 வருடம் முன்பு படித்தான்...

நாங்கள் படிக்கும்போதும் இவர்கள் இருவரும் அவர்களை அறியாமலேயே வெளியே எட்டிப் பார்ப்பார்கள்... ஒரு நாள் அங்கு ஏதோ சண்டை... வகுப்பில் இருந்தது விலங்கியல் ஆசிரியர். அத்தனை பாய்ஸும் ஒரு ஜன்னலுக்கும் கேர்ள்ஸ் அனைவரும் ஒரு ஜன்னலுக்கும் போய் வேடிக்கை பார்த்தோம்...

அப்போது எங்கள் ஆசிரியர் சொன்னதுதான் பன்ஞ்ச்...

"எல்லோரும் அங்க போனீங்கன்னா... அங்க ஆபிசிலிருந்து(எங்கள் வகுப்பு நேர் எதிரே) ஹெட்மாஸ்டர் பார்த்துடுவார்..அதனால் இரண்டு இரண்டு பேராகப் போ."

இத இதத்தான் எதிர்பார்த்தேன்... எல்லோருக்குமே இப்படி பல கதைகள் இருக்கும்...
வாங்க கவிசிவா வரவிற்கு நன்றி, இன்னும் என்னவெல்லாம் இருக்கோ அவிழ்த்து விடுங்க.....
தேன்மொழி எப்படி இருக்கீங்க? நீங்களும் பழைய இழைகளில் கலக்கியிருபீங்க இல்ல... உங்க பொண்ணு எப்படி இருக்காங்க?
எனக்கும் திரும்ப மலரும் நினைவுகள் ஞாபகம் வருது... பிறகு எழுதறேன்.
மற்ற எல்லோரும் எங்கே போனீங்க... ???

நகைச்சுவை சம்பந்தமான இழைல நம்ம பதிவு இல்லைனா ஜென்ம சாபல்யம் கிடைக்குமா? இதோ வந்துட்டேன் கோழீஸ்...

நான் 6வது படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி இது. எங்க கிளாஸ்ல எல்லாருமே ஊறுகாய் பிரியைகள். அதுவும் வற்றல் மாங்காய் என்றால் கொள்ளை பிரியம். என் தோழிகளில் ஒருத்தி வீட்டில் செய்யும் வற்றல் ஊறுகாய்க்கு அனைவருமே அடிமைகள். இதற்காகவே மதிய சாப்பாட்டை அவரவர் வீடுகளில் முடித்து விட்டு அந்த ஊறுகாய் தோழியை காத்திருந்து அழைத்து ஒன்றாக பள்ளிக்கு செல்வோம். எல்லாம் ஊறுகாய் செய்யும் மாயம் தான். எத்தனை நாள் தான் அடுத்தவர் ஊறுகாய்க்கே காத்திருப்பது நாமே ஊறுகாய் போடுவோம் என்று ஐடியா ஒன்றை தீட்டினோம். அந்த திட்டத்தின் தலைவியும் நான் தான். அதாவது ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பொருளை வாங்கித் தரவேண்டும். மாங்காயை ஊறுகாயகா மாற்றி காய வைத்து தருவது என் பொறுப்பு. என் பங்காக நான் உப்பை தந்தேன். என் இன்னொரு தோழி நன்றாக காசு புழங்குபவள் மாங்காய்களை அவள் வாங்கி வந்தாள். அனைவரும் இந்த பொருட்களை எங்கள் ஸ்கூல் பைகளில் வைத்திருந்தோம். எல்லாம் கூடி வரும்போது எங்கள் வகுப்பில் இருந்த எட்டயப்பச்சி ஒருத்தி ஊறுகாய் விஷயத்தை எங்கள் டீச்சரிடம் போட்டு கொடுக்க, விசாரணை படலம் ஆரம்பமானது. பிறகென்ன உண்மை தெரியவந்து எங்களை போர்டுக்கு முன்னால் அமர வைத்து எங்களுக்கு முன்னால் நாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து எங்களை காட்டி பொருளாக்கி சில நிமிடங்கள் அமர வைத்தார். நம்மூர் போலீஸ் ஸ்டேஷனில் தவறு செய்த குற்றவாளிக்கு கழுத்தில் போர்டு மாட்டி பேரையும், வயதையும் போடாதது தான் குறை :(( இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் நாங்கள் திருந்துவோமா என்ன? நாங்களாம் யாரு? ஊறுகாய்ல இருந்து உப்பை மட்டும் பிரிச்சு தூக்கி போட்டுட்டு ஊறுகாயை மட்டும் சாப்பிடற சூடு சுரணை இல்லாத மதிப்பிற்குரிய ஜென்மங்கள் அல்லவா? :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னங்க நலமா? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து.

இந்த இழையில் பதிவு போட நினைச்சு நாளாயிடுச்சு... இன்னைக்கு போட வந்தா இவ்வளவு நேரம் பவர் கட். ஏற்கனவே இந்த பதிவை வேறு எங்கயாவது அறுசுவையில் போட்டிருக்கனான்னு நினைவில்லை.

கல்லூரியில் சேர்ந்த புதிதில் நடந்த ஒரு காமெடிக்கு வருவோம்.

காலையில ஹாஸ்டல்ல சாப்பிட்டுட்டு புக்க தூக்கிகிட்டு காலேஜ் கம்ப்யூட்டர் லேப் உள்ள போக பார்த்தேன்... அன்னைக்குன்னு பார்த்து அங்க இருந்த மரத்தை கவனிக்காம நிமிர்ந்தே போக, அதுல இருந்த குச்சி என் உச்சந்தலையில குத்திடுச்சு... நல்ல வலி, இருந்தாலும் தேச்சுட்டே லேப் போயிட்டு அடுத்ததா க்லாஸ்க்கு வந்தேன்.

க்லாஸில் நான் முதல் பென்ச். அதுவும் ஜன்னல் ஓரம்(நான் கொஞ்சம் உயரம் என்று ஓரமா உட்காருவேன், பின் பென்சுக்கு போனா எனக்கு பிடிக்காது). எங்க மேதமெடிக்ஸ் டீச்சர் சமையா பாடம் எடுத்துட்டு இருந்தாங்க. நான் நோட்ட வெச்சுகிட்டு எழுதிகிட்டே இருந்தேன். எப்பவும் போல ஜன்னல் ஓரம் மரமெல்லாம் சுமா இல்லாம சதி பண்ணிடுச்சு... காத்து சூப்பரா இருந்தது. கொஞ்சம் சொருகுச்சு தூக்கம்... எப்படியே மேனேஜ் பண்ணி உட்கார, கொஞ்சம் கொஞ்சமா சாஞ்சு எழுத ஆரம்பிச்சு, கடைசியில எனக்கே தெரியாம நல்லா தூங்கிட்டேன் போல. பேனா கையில் இருந்து விழுந்துருச்சுன்னா நான் எப்படி தூங்கிருப்பேன்னு பாருங்க. ;(

எங்க மேடம் என்னை போர்ட் கிட்ட நின்னே கூப்பிட்டுருக்காங்க, நான் எழுந்திரிக்கல... அங்க இருந்தே ஒரு சாக் பீஸ் விட்டு அடிச்சதும் அலரி போய் எழுந்துட்டேன். அரை தூக்கத்தில் எழுப்பினா பாவம் பிள்ளை பயந்து போகாதா??? தெரியாத மக்கு டீச்சர். எழுந்ததும் “காலையில லேப்புக்கு போகும் போது தலையில குச்சி குத்திடுச்சு... “னு என்னென்னவோ பேசி இருக்கேன் சம்பந்தம் இல்லாம :( பக்கத்துல முழிச்சுட்டு உட்கார்ந்து இருந்ததுக எல்லாம் சிரிச்சதும் தான் சுய நினைவே வருது. ஷேம் ஷேம் ஆயி போச்சு. “சாரி மேடம்”னு நான் சொல்ல... “என்ன காலையில ஹாஸ்டல்ல பொங்கலா??? போய் முகத்தை க்ழுவிட்டு வா”னு அவங்க சொல்ல, “ம்ம்...” என்று நான் வெளிய போக, திரும்ப வந்து வாசல்ல நின்னா க்லாஸே என்னை காமெடி பீஸ் மாதிரி பார்த்து சிரிச்சுது.

டூ பேட்.... இன்னைக்கு நினைச்சாலும் என் தூக்கத்தின் உச்சத்தை நினைத்து சிரிக்குறதா அழறதான்னே தெரியாது. அதுல இருந்து தூக்கம் வந்தா உடம்பு சரி இல்லன்னு பெர்மிஷன் சொல்லிட்டு கடைசி பென்ச்’ல போய் உட்கார்ந்து நல்லா தூங்கிடுறது. யார் எழுப்புவாங்கன்னு இனி பயம் இல்லை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்