நாட்டுக்காக உங்களின் ஒரு நிமிடத்தை செலவளியுங்களேன் ப்ளீஸ்!

ஊழலுக்கு எதிராக முதியவர் அன்னா ஹசாரே வலியுறுத்திய லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் என்றால் பொதுமக்களில் இருந்து 25கோடி பேரின் ஆதரவு வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

நமது ஆதரவைத் தெரிவிக்க கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டால் போதும். முதலில் ஒரு ரிங் டோன் கேட்கும். உடனே கட் ஆகி விடும். நமது ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து நமக்கு ஒரு SMS வரும். அவ்வளவுதான். நம் நாட்டுக்காக ஊழலை எதிர்க்க இதைக் கூட நாம் செய்ய மாட்டோமா என்ன?!!!

அனைவரும் அவர்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

+ 91 22 6155 0789
022 6155 0789

இந்த செய்தியை தினமலர் இணைய நாளிதழில் படித்தேன். அந்த எண்ணை தொடர்பு கொண்டு விட்டேன். ஆனால் எனக்கு SMS வரவில்லை. வெளிநாட்டு அழைப்பு என்பதால் பதில் வரலைன்னு நினைக்கறேன். இந்தியாவில் இருந்து அழைத்தவர்களுக்கு பதில் வந்து விட்டது.

இந்த இணைய தளத்திலும் போய் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.

http://theback-benchers.com/who-is-anna-hajare-vote-and-support-anna-hajare/

உங்கள் ஆதரவையும் தெரிவியுங்கள். நன்றி!!!

இந்த தலைப்ப பாத்தோனையே தெரியும், இது நம்ம கவி தான்னு

நெட்வொர்க் பிஸி ன்னு சொல்லுது, கண்டிப்பா தொடர்பு கொண்டு என் ஆதரவை தெருவிப்பேன். அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி கவி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

லோக்பால் இல்லை எத்தனை வந்தாலும் இந்த ஊழல்வாதிகளை எதுவுமே செய்ய முடியாதுன்னு நம்மில் பலரும் விரக்தியில் இருக்கலாம். ஆனால் முயற்சி செய்வதில் எந்த தவறும் இல்லையே! புலம்பி பின் முடங்கி போவதால் எந்த பயனும் இல்லையே! முயன்றுதான் பார்ப்போமே! நமது காலத்தில் இல்லாவிட்டாலும் நாளைய சந்ததியினராவது ஊழலற்ற இந்தியாவில் வசிக்கட்டுமே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுகி!

தலைக்கு மேல் வெள்ளம் போய் இப்போ எதைப் புடிச்சு கரையேறலாம்னு தத்தளிக்கற நிலைமையில் இருக்கும் போது கைக்கு கிடைத்தது சிறிய கொம்புதான்னாலும் விட்டுட முடியாதே! எதைத் தின்னா பித்தம் தெளியும்னுல்ல இருக்கோம் :(.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் கால் பண்ணீட்டேன், ஒரு ரிங் ல தான கால் கட் ஆகுது. அதுக்கு பின், இந்த மெசேஜ் வந்துச்சு
Thanks for registering your support. If you want to volunteer, please log on to www.indiaagainstcorruption.org or send an sms at 09212472681 giving your details .

நம் தலைமுறை இல்லைனாலும், எதிர்கால தலைமுறையாவது ஊழலற்ற இந்தியா மலரணும், லோக்பால் வந்தாலாவது ஒரு மாற்றம் வருமான்னு ஒரு அல்ப்ப நம்பிக்கையில் தான் இருக்கோம் :-(

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் கவிசிவா, என் ஆதரவு தெரிவித்து விட்டேன். நீங்க சொன்னமாதிரி கால் பண்ணுனேன் கட் ஆகி ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.இதான் அந்த sms, Thanks for registering your support.If you want to volunteer, please log on to www.indiaagainstcorruption.org or send an sms at 09212472681 giving your details

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் கவி,எப்படி இருக்கீங்க?

நல்லதொரு விஷயத்தை பகிர்ந்திருக்கீங்க,நன்றி கவி.நான் அப்பவே கால் பண்ணிட்டேன் கவி.நீங்க சொன்ன மாதிரி,நம்ம சுகன்,தேவி சொன்ன மாதிரி மெசேஜ் வந்திச்சு கவி.சாரி,உடனே பதிவு போட முடியலை.நல்ல மாற்றம் ஏற்படும்னு நம்புவோம்,நன்றி கவி.

அன்புடன்
நித்திலா

சுகி, தேவி, நித்திலா அனைவருக்கும் நன்றி!
இந்த இழை உள்ளே போயிடாம பார்த்துக்கோங்கப்பா!

உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லுங்கப்பா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானும் கால் செய்து விட்டேன் அக்கா என் நண்பர்களுக்கும் அறிவித்து இதை செய்ய சொல்லுறேன் by Elaya.G

நானும் என்னுடைய ஆதரவை பதிவு செய்து விட்டேன்..... என்னுடைய தோழிகளுக்கும் மெயில் மூலம் அவர்கள் ஆதரவை பதிவு செய்யும்மாறு வற்புறுத்தி உள்ளேன்....

நீங்க இதுமாதிரியான நல்ல தகவலை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

நல்ல விஷயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தினதுக்கு முதலில் நன்றி கவிசிவா. உங்க பதிவை பார்த்ததில் இருந்து முயற்சி செய்து லைன் கிடைக்காம இப்ப தான் என் ஓட்டை பதிவு செய்தேன். மெசேஜ்ஜும் வந்துருச்சு.

என் நண்பர்களுக்கும் சொல்லி ஓட்டு பதிவு செய்ய சொல்லிருக்கேன். மீண்டும் நன்றி கவிசிவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்