புத்தம் புது மேடை!!!

ஹாய்... எல்லாரும் அரட்டையை இங்க வந்து தொடருங்க... ;)

இந்த மேடையில் நல்லா பேசுறவங்களுக்கு தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்.... ;) ஹிஹிஹீ.

தீப்ஸ் ஆமாம் நகம் முழுதும் விழுந்துட்டா அப்படி தான் இருக்கும் சீக்கிரம் வளர்ந்துடும் அந்த இடத்தில் திரும்ப அடிப்படாமல் பார்த்துக்கோங்க.

நித்தி அதானே என்னாட இன்னக்கி நீ சீக்கிரம் வந்துட்டனு பார்த்தேன். கரண்ட் போய்ட்டா ச்ச.

தீப்ஸ் நீ கொடுக்கின்ற ஜீஸ்காக உன்னை மன்னிக்கிறேன். அடுத்த முறை என் பெயரை விட்டுவிட்டால் அர்ச்சனா ஸ்வீட்டோடுதான் வர வேண்டும். சரி சரி. உங்கள் பிள்ளை எப்படி இருக்கிறார். வீட்டில் அனைவரும் நலமா?

மற்ற தோழிகள் எங்கே போனார்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் யாழி,ஆமாம்டா.இங்க பவர் போய் போய் வரும்டா.சில நேரம் போகாது.ரொம்பத் தொல்லைடா.காபி குடிச்சாச்சாமா?

ஹாய் ரேவ்ஸ்,நான் சாப்பிட்டேன்டா.காபி டைம் ஆச்சு,உங்க காபியையும் காணோம்,தேவி டீயையும் காணோம்.எங்க போனீங்க?

தீபு,ஜில்லுனு ஜூஸ் சூப்பர்.தேங்க்ஸ் தீபு.குழந்தைக்கு அடிபட்டிருக்கா?சீக்கிரமே சரியாயிடும்,கவனமா பார்த்துக்கோங்க தீபு.

அன்புடன்
நித்திலா

ஹாய் நித்தி,
ஹலோ என்னப்பா இன்றைக்கு நீங்க பட்டில செந்தமிழ் ல வாதம் பன்னிங்க,,,,,,,,,,,,,,,,,,

சஜன்யா

All is well

ஹாய் நித்தி. இன்னக்கி கரன்ட் போகலைனு சந்தோஷப்பட்டில அது அங்க கேட்டுட்டு போல டா அதான் உடமே ஆஃப் பண்ணிட்டாங்க போல. காபி இன்னும் குடிக்கல. இவ்வளவு நேரம் இங்க கரன்ட் இல்ல நித்தி.

சஜன் என்ன வந்து வந்து ஓடுறீங்க காலையில வந்துட்டு உடனே போய்ட்டீங்க.

ஹாய் சஜன்,வந்துட்டீங்களா?காணோமேனு நினைச்சேன்.செந்தமிழெல்லாம் இல்லை சஜன்.முதல் பதிவு கொஞ்சம் நல்லாயிருக்கட்டுமேனு எப்பவும் அப்படி போடுவேன்.தொடர்ந்து சாதாரணமாதான் பேசுவேன்.

பட்டியில் உங்க பதிவு பார்த்தேன்.வாழ்த்துக்கள் சஜன்.முதல் பட்டி,கலக்குங்க.

அன்புடன்
நித்திலா

சஜன், நித்தி இரண்டு பேர் மட்டும் தான் இருக்கீங்களா. டீ மாஸ்டர் எங்க இன்னைக்கு கடை லீவா?

யாழி இங்கே பவர் இல்லை அதான் .ஊர்லேந்து அம்மா,அக்கா, குட்டீஸ்,தம்பி எல்லோரும் வந்திருக்காங்க,,
நித்தி பட்டில எல்லோரும் வாதம் பன்றாங்க நாமும் எதாவது பன்னனும்ல.

சஜன்யா

All is well

வந்துடீங்களா,இப்பதான் உங்கள நினைச்சேன் வந்துடிங்க,ஆமா எங்க டீ கடைய கானோம்

சஜன்யா

All is well

ஓ சரி சரி நல்லா ஆட்டம் போடுங்க. ஜாலியா எல்லோர் கூடவும் என்ஜாய் பண்ணுங்க. வீடு ஒரே கலேபரமா இருக்கா. செம ஜாலியா இருக்கும்ல.

மேலும் சில பதிவுகள்