பட்டிமன்றம் 43 :** “பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?!”

அறுசுவையின் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..!

நெடுநாளைக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் ஒரு இனிய பட்டிமன்ற

பயணம் ஆரம்பம்… ..என் மனசுக்குள் ஒரே மகிழ்ச்சி மத்தாப்புதாங்க

வாங்க…எல்லாரும் :)

புது பட்டிமன்ற தலைப்பு இதோ உங்களுக்காக…..:-

நம்ம வனிதாவோட தலைப்பில் இருந்து

“பொசசிவ்னஸ் என்று சொல்ல கூடிய "இது எனக்கு, இவர் எனக்கு சொந்தம்"

என்று என்னும் எண்ணம் அதிகம் யாரிடம்? ஆணுக்கா? பெண்ணுக்கா?!”

தலைப்புகளில் எப்போதும் என் மனம் தேடி ஓடுவதும்,தேர்வதும்…மனவுணர்வுகள்

சார்ந்த ஒரு தலைப்பாவே இருக்கு :-

என்ன உங்களுக்குமா ..!!!..
அப்ப வாங்க வந்து உங்க உணர்வு மழையை கொட்டுங்கள்..

உங்களுக்காக ஆவலுடன் குடையில்லாமல் காத்திருக்கிறேன்..:):)

பட்டிமன்ற விதிமுறைகள்:

1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.

அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லோரும் வந்து கலக்குங்க

ஐ!! நானும் பல தடவை உக்காந்து இதப்பத்தி யோசிச்சிருக்கேன் ( இப்ப ரொம்ப நேரம் வீட்டில வெட்டியா உக்காந்திருக்கறாதால, யோசிக்க விருப்பமான டாபிக் இதுதான்;))

ம்ம் பாராட்டுக்கள் வனி, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் இளவரசி;)

நாளைக்கு என் முதற்கட்ட வாதத்தோடு எந்தப்பக்கம் என்பதையும் தெரிவிக்கிறேன்...

பட்டியில் பங்குபெறும் தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

அருமையா தலைப்போடு நேரமே துவங்கிட்டீங்க ;) அதுவும் என் தலைப்பா... அது இன்னும் பலமடங்கு சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி நடுவரே. சிறப்பாக பட்டி நடக்க வாழ்த்துக்களும் கூட.

நம்ம எப்பவுமே பெண்கள் கட்சி தானே... இதில் மட்டும் வித்தியாசமாவா சொல்ல போறேன்... ;)

இந்த பொசசிவ்னஸ் அதிகம் “பெண்ணுக்கு தான்”.

வாதங்கள் வழக்கம் போல் நாளையில் இருந்து... வரேன்... சூடான வாதத்தோடு இம்முறை விடாம எதிர் அணியை தாக்க வருவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலாவதா அட்டென்டென்ஸ் போட்டுருக்கீங்க ,,பாராட்டுக்கள்

நல்லா யோசிச்சு சீக்கிரமா வாதத்தோடு வாங்க :-

காத்திருக்கிறேன்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு நடுவருக்கு வணக்கம்.சிறந்த தலைப்புடன் பட்டி சிறப்பாய் நடைபோட வாழ்த்துக்கள் நடுவரே.

சிறுபெண் முதல் நரை கொண்ட நங்கை வரை தனக்குரியதென்று,தனக்கு மட்டுமே உரியதென்று நடை போடுகின்றனர்,உணர்வுகளால் தளை பூட்டுகின்றனர் என்பதே என்னுடைய வாதம்.

* தன் வீடு முதலே துவங்குகிறது உரிமைப் போராட்டம்..
* நட்பிலும் தலை நீட்டுகின்றது..
* காதலிலும் தடம் பதிக்கின்றது,சில நேரம் சுவையாக,சில நேரம் வலியாக..
* மணமான பின்பும் தொடர்கின்றது மாலையிட்டவனோடு..
* தாய்மையில் பூரிக்கும் போதும் தவறாமல் தன்னிருப்பை தெரிவிக்கின்றது..
* தன் மழலை,இளமையாகி இல்லறம் கண்ட போதும் தயங்காமல் வருகை புரிகின்றது...

வாழ் நாளெல்லாம் பெண் மனதில் வியாபித்திருக்கும் உணர்வானது சில நேரம் இனிமையாகவும்,சில நேரம் கடுமையாகவும் இருக்கின்றது.தனதென்ற போராட்டம் பெண்ணிற்கே உரியதென்பதை விரிவாகக் காண்போம் நடுவரே.

உணர்வுகள் பூக்கும்...

அன்புடன்
நித்திலா

முதல்ல உங்க தலைப்புக்கு ஒரு குட்டி நன்றி :)

//நம்ம எப்பவுமே பெண்கள் கட்சி தானே//

அச்சச்சோ ,நம்மன்னு என்னையும் உங்க கட்சில சேர்க்கறீங்களே..:)

//இந்த பொசசிவ்னஸ் அதிகம் “பெண்ணுக்கு தான்”//.

நீங்க அழுத்தமா சொல்லுவதிலேயே எதிரணி வர யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன்

அனல் பறக்கும் வாதங்களோடு வாங்க ...

//எதிர் அணியை தாக்க வருவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!//

எதிரணி வர்றதுக்கு முன்னயே இப்படியா பயமுறுத்தறது ..உங்க வரிகள பார்த்து மிரண்டு போயிடப்போறாங்க :)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆஹா சூப்பரான தலைப்போட பட்டி அமர்க்களமா ஆரம்பிச்சாச்சா! தலைப்பைத் தேர்ந்தெடுத்த நடுவருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்!. தலைப்பை கொடுத்து உதவிய வனி க்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்! பட்டியில் வாதாடும் தோழிகளுக்கும் சைலண்டா வாசிச்சு ரசிக்கற, திட்டற :D தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள்!

நடுவரே உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம்? சந்தேகமே இல்லாம பொண்ணுங்களுக்குத்தான் பொசசிவ்னெஸ் அதிகம். குட்டியா இருக்கும் போதே இது ஆரம்பிச்சிடும். பென்சிலை சீவி சீவி அது சுண்டு விரல் சைஸ் ஆன பின்னாடியும் அதில் பிளேடால் தனது பெயரை பதிச்சு வச்சு இது என்னோடதாக்கும்னு உரிமை கொண்டாடறதுல ஆரம்பிச்சு எம் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்னு மாமியாரோட மல்லுக்கட்டறதோட நிற்காம தாய்க்குப் பின் தான் தாரம்னு தன்னோட மருமகள்கிட்ட போராடறது வரைக்கும் பொண்ணுங்களுக்கு பொசசிவ்னெஸ் அப்படீங்கறது ரத்தத்துலயே ஊறின விஷயமாச்சே! இதுல பாவம் இடையில கிடந்து அல்லாடறது மட்டுந்தேன் ஆம்பளைங்க... ஆண்பாவம் :).

சின்ன வயசுல பொசசிவ்னெஸ் இருக்குதுன்னா பாவம் அறியாத வயசு புரியாத மனசுன்னு விட்டுடலாம். அந்த வகை பொசசிவ்னெசில் பாதிப்புகள்னு சொன்னால் பெரும்பாலும் இல்லைன்னே சொல்லலாம். ஆனால் கல்யாணம்னு சொல்லி கழுத்துல தாலி ஏறுன மறு கணமே கணவன் மேல் வைக்கற அதீத பாசம் இருக்கே... அப்பப்பா அது வரைக்கும் அவரை வளர்த்து ஆளாக்கின பெற்றோர், கஷ்டத்திலும் நஷ்டத்திலும் உடனிருந்த உடன் பிறந்தோர் இவங்க எல்லார் மேலயும் அவனுக்கு இருந்த பாசத்தை எல்லாம் மொத்தமா வழிச்சு எடுத்து தனக்கு மட்டுமே கொடுக்கணும்னு எதிர் பார்க்கறது பொண்ணுங்கதாங்க. என் பிறந்த வீட்டையெல்லாம் விட்டுட்டு உங்களை மட்டும்தாங்க நம்பி வந்திருக்கேன் அப்படீன்னு ஒரு டயலாக் வேற விடுவாங்க. பெண்கள் உடலளவில்தான் பிறந்த வீட்டை விட்டு விலகி இருப்பாங்க. ஆனா ஆண்கள் முதலில் மனதளவிலும் பின்னர் தனிக்குடித்தனம் என்ற பேரில் உடலளவிலும் அவர்கள் பிறந்த வீட்டை விட்டு விலகணும்னு நினைக்கறது பெரும்பாலும் பெண்கள்தாங்க.

ஆண்கள் பாவம் நீ உன் பிறந்த விட்டு மேல எவ்வளவு பாசமா வேணும்னாலும் இருந்துக்கோ அப்படியே என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ ராசாத்தின்னுதான் நினைப்பார்கள்(பெரும்பாலான ஆண்கள்).

சரி மனைவியாக வரும் இளம் பெண்கள்தான் ஏதோ கணவன் மீதிருக்கும் பாசத்துனால அறியாமல் இப்படி நடந்துக்கறாங்கன்னா தாயாக இருக்கும் பெண்ணும் தன் மகன் மீது தனது பொசசிவ்னெசை விட்டுக் கொடுக்காத போது இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பதுதான் ஆண்கள். தன் மகனின் பாசத்தை பங்கு போட வந்த எதிரியாக மருமகளைப் பார்க்க ஆரம்பிப்பதும் பெண்கள்தான். பெரும்பாலும் மாமனார்கள் இதில் தலையிடுவதில்லை. பல வீடுகளிலும் மாமியார் மருமகள் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமே அந்த இரு பெண்களுக்கும் தன் கணவன்(மகன்) மீதிருக்கும் அதீத பாசம் அதனால் உருவாகும் பொசசிவ்னெஸ்தான்.

சரி சகோதரியாவது பொசசிவ்னெஸ் இல்லாம இருப்பாங்களான்னு கேட்டா அதுவும் கிடையாது. முதலில் அவன் எனது சகோதரன் அதன் பின் தான் உனக்கு கணவன் என்று நாத்தனார்களிடம் மல்லுக்கு நிற்பார்கள். எங்கயாச்சும் அவன்(ள்) எனது சகோதரன்(சகோதரி) முதலில் அவன்(ள்) எனக்குத்தான் உரிமை என்று ஒரு ஆண் தன் சகோதரன் அல்லது சகோதரி துணையோடு மல்லுக்கு நிற்பதை பார்த்திருக்கிறோமா? அவர்களுக்கும் அதே சகோதர பாசம் இருக்கும்தானே! ஆனா பொண்ணுங்களுக்குத்தான் இந்த பொசசிவ்னெஸ் அதிகம்.

ஆண்களுக்கு பொசசிவ்னெஸ் ரொம்ப குறைவு நடுவரே! ஏன்னா அவங்களுக்கு உள்ள பாசத்தையே ஒழுங்கா காமிக்கத் தெரியாது. இதுல எங்கிட்டு இருந்து உருவாகும் அதீத பாசம் அதனால் உருவாகும் பொசசிவ்னெஸ்... அப்படியே இருக்குன்னு சொல்லி எதிரணியினர் வாதாடினாலும் அப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

பொசசிவ்னெஸ் எனப்படும் உரிமை கொண்டாடும் எண்ணம் அதிகமாக இருப்பது பெண்களுக்கே பெண்களுக்கே என்று கூறி எனது முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!

நடுவரே ஜோடா ப்ளீஸ் :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தேன் தமிழ் பதிவுகள் தொடங்கியாச்சா ..மகிழ்ச்சி...வாங்க

//சிறுபெண் முதல் நரை கொண்ட நங்கை வரை தனக்குரியதென்று,தனக்கு மட்டுமே உரியதென்று நடை போடுகின்றனர்,உணர்வுகளால் தளை பூட்டுகின்றனர் //

ஆறிலிருந்து அறுபதுவரை எல்லா பெண்களூம் பொசசிவ்னெஸ்க்கு அடிமைன்னு சொல்லிட்டாங்க.....இப்படியெல்லாம் பதிவு போட்டா எப்படிங்க எதிரணி வருவாங்க....:)
பெண்கள்தான்னு பெருந்தன்மையா ஒத்துக்கிட்டதுக்கு இந்தாங்க ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்...

தொடர்ந்து வாங்க...இனிமையான தமிழுடன்...:-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பட்டிமன்றப்புயலே வருக…!

//பென்சிலை சீவி சீவி அது சுண்டு விரல் சைஸ் ஆன பின்னாடியும் அதில் பிளேடால் தனது பெயரை பதிச்சு வச்சு இது என்னோடதாக்கும்னு உரிமை கொண்டாடறதுல ஆரம்பிச்சு//

அடடா பென்சிலுக்குகூட சீவி சிங்காரிச்சு அலங்கரிக்காறாங்களாம் இந்த பெண்கள்…..
ஒரு பென்சிலுக்கே இவ்வளவு உரிமை காட்டும் பெண்கள் மத்த எல்லாத்திலயும் எப்படி இருப்பாங்கன்னு சொல்ல வேண்டியதில்லைன்னு சொல்லிட்டாங்க..
/
/ஆண்கள் பாவம் நீ உன் பிறந்த விட்டு மேல எவ்வளவு பாசமா வேணும்னாலும் இருந்துக்கோ அப்படியே என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ ராசாத்தின்னுதான் நினைப்பார்கள்(பெரும்பாலான ஆண்கள்). //

இது இது எல்லாம் த்ரீ மச்…….பாருங்க எதிரணி வராததால எப்படி எல்லாம் வதந்தி வாதங்கள் வருது பாருங்க சீக்கிரம் வாங்க

(அப்பாடி போட்டு கொடுத்தாச்சு…இப்பதான் நிம்மதி )

//சரி மனைவியாக வரும் இளம் பெண்கள்தான் ஏதோ கணவன் மீதிருக்கும் பாசத்துனால அறியாமல் இப்படி நடந்துக்கறாங்கன்னா தாயாக இருக்கும் பெண்ணும் தன் மகன் மீது தனது பொசசிவ்னெசை விட்டுக் கொடுக்காத போது இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பதுதான் ஆண்கள்)//

இரண்டு தலையோட எல்லாம் கற்பனை பண்ண சொல்லி காமெடி பண்றீங்களே… கவி….ஆனாலும் அதீத அன்புதான் உங்களுக்கு….:)

//ஏன்னா அவங்களுக்கு உள்ள பாசத்தையே ஒழுங்கா காமிக்கத் தெரியாது.//

அவங்களூக்கு கண்ணாடி இருந்தாத்தானே அதுல காட்டமுடியும்..நாமதான் எல்லா நேரமும் அதை நாமே வச்சு காட்டிட்டு இருக்கோமோ..தெரியலயே…

//நடுவரே ஜோடா ப்ளீஸ் :))//

இந்த வெயிலுக்கு ஜோடா வேணாம்…இந்தாங்க உங்களுக்கு பிடித்த மேங்கோ ஜுஸ்

தொடர்ந்து உங்கள் பட்டாசு வாதங்களுக்காய் காத்திருக்கிறேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவருக்கு என் வணக்கம் !வாழ்த்துக்கள்!
*உங்கள் ஆரம்ப வரிகளை கவனிக்கவும்...இது..'இவர்"என்ற வார்த்தை பெண்களே பயன்படுத்துகிறார்கள்...நீங்களே மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பெண்களுக்கே பொஸசிவ்னெஸ் அதிகம் என்பதை ஒத்துக்கொண்டீர்கள்..மேலும் வாதங்கள் தேவைதானா?
*ஆகையால் மேற்கூறிய காரணத்தாலும் ,எதிரணியே இல்லாத காரணத்தாலும் பெண்களுக்கே என தீர்ப்பு கூறி பட்டியை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வாங்க
//ஆகையால் மேற்கூறிய காரணத்தாலும் ,எதிரணியே இல்லாத காரணத்தாலும் பெண்களுக்கே என தீர்ப்பு கூறி பட்டியை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி!//

என்ன தோழரே..நான் வாங்கன்னு சொல்லி முடிக்குமுன்ன போங்கன்னுசொல்லி முடிக்கிறீங்க :-

ஓ....
வந்தவுடனே......முடிச்சுக்கிட்டா எனக்கு சிரமமில்லைன்னு ஐடியா கொடுக்கும் உங்கள் அன்புக்கு நன்றிகள் பல :-

//'இவர்"என்ற வார்த்தை பெண்களே பயன்படுத்துகிறார்கள்...நீங்களே மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பெண்களுக்கே பொஸசிவ்னெஸ் அதிகம் என்பதை ஒத்துக்கொண்டீர்கள்.//

அப்படின்னு நீங்க நினைச்சா அது தப்புங்க....இவர்ங்கற வார்த்தை ஆண்களை

மட்டுமே குறிப்பதா நீங்க நினைச்சா அதுக்கு நான்

பொறுப்பல்ல...ஆண்களாயிருந்தாலும்/பெண்களாயிருந்தாலும் நமக்கு

நெருக்கமானவர்களையும்/வயதில் சிறிவர்களையும் மட்டுமே...இவன்/இவள்

என்று சொல்வோம்.

மற்றபடி எல்லா மனிதர்களையும் பொதுவாக இவர் என்று இருபாலரும்

அழைப்பதுதான் நம் பண்பாடு என்று நினைக்கிறேன்..:-

அதனால என்னை அதாவது தலைப்பை முடிக்க முடிச்சு போடாம நீடிக்க

மட்டும் கருத்து சொன்னீங்கன்னா உங்களுக்கு ஐஸ்க்ரீம் கிடைக்கும்..:-)

இல்லன்னா என்ன கிடைக்கும்ன்னு எதிரணிதான் முடிவு பண்ணனும்//:)

நாளைக்கு உங்களோடு,எல்லாரும் எனர்ஜியா வந்து வாதங்களை கொட்டுவீர்கள் என நம்புகிறேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்